“ராம் ராம்”என்றொரு ஒலி எங்கும் ஒலிக்கிறது. நித்ய பிரம்மச்சாரி ஒருவன் சிரஞ்சீவியாய் இதைச் சொல்லியபடி தன் நெஞ்சில் ராமரை நிலை நிறுத்திவிட்டான். அவன் இதயமே அவர் உறையும் கோயில் என்றானது. யார் இந்த சிரஞ்சீவி, இவன் சொல்லும் ’ராம்’ எல்லோரும் எழுதும் ராமஜெயமானது எப்படி ?
சொல்லின் செல்வன் என்று ராமராலேயே அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ? அதைத் தெரிந்து கொள்ள நாம் ரிஷியமுக பர்வதத்துக்குப் போகவேண்டும். அது எங்கே இருக்கிறதா.. ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது. வாருங்கள் நாம் ஒரு சொல்லின் செல்வன் சுந்தரமாய் உதித்த சுந்தரகாண்டத்துள் நுழைவோம்.
ஆம் யார் இந்த சொல்லின் செல்வன் ? அவர் ஏன் சுந்தர காண்டத்தில் உதித்தார். இவர் சுந்தகாண்டத்தில் உதிக்கக் காரணமானவர்கள் யார்?
