எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கோவலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 நவம்பர், 2019

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி
பெண்கள் சாத்வீகமானவர்கள். அதிலும் கண்ணகி என்ற பெண் மிகவும் சாதுவானவள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நீதி தவறிய பாண்டிய மன்னனின் மேல் கோபம் கொண்டு சிலம்பை உடைத்தது மட்டுமல்ல அவள் சாபமிட்டதும் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. அத்தகைய சக்தி வாய்ந்த கண்ணகி பற்றியும் அவளுக்குப் பாண்டிய மன்னன் இழைத்த அநீதி பற்றியும் அறிந்து கொள்ளுவோம் வாருங்கள் குழந்தைகளே.
காவிரிப் பூம்பட்டினத்தில் இரு பெரும் வணிகர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுள் மாசாத்துவான் என்ற வணிகனுக்குக் கோவலன் என்ற மகனும், மாநாயகன் என்ற வணிகனுக்குக் கண்ணகி என்ற மகளும் இருந்தார்கள். இருவருக்கும் அவர்கள் பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.
ஒருமுறை சோழன் அவையில் மாதவி என்ற நடனமங்கை அற்புதமாக நடனமாடினாள். தலைக்கோல் அரிவை என்று பட்டம்பெற்று நாளொன்றுக்கு ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப் பொன் பெறும் சிறப்புப் பெற்றவள். கோவலன் அவள்பால் கவரப்பட்டுக் கண்ணகியை மறந்து மாதவியுடன் இல்லறம் நடத்தலானான். அவர்கட்கு மணிமேகலை என்ற புனிதமகள் பிறந்தாள்.

சனி, 15 ஜூலை, 2017

அலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.



ஒரு மனிதனின் வாழ்வில் இரு சிலம்புகளின் ஒலிக்கிடையேயான அவன் கதைதான் சிலப்பதிகாரம். 

ஒருத்தி சிலம்பினால் கவரப்பட்டு இன்னொருத்தி சிலம்பினால் மரணப்பட்ட கோவலனின் காவிரிப்பூம்பட்டினத்துக்குச் சென்றபோது அவனது வாழ்வின் மொத்தத் துயரையும் குத்தகை கொண்டதுபோல  ஆவேசமாக அடித்து அடித்து வருத்தம் தீர்த்துக்கொண்டிருந்தன அலைகள்.

ஒரு பெண்ணின் பார்வையிலேயே இதுவரை சிலம்பைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஆணின் பார்வையில் சிலநிமிடம் யோசித்தேன்.
திருமணமான உடனே ஆண் ஒருவன் ஒரு ஆடலரசியின் கால்தண்டையின் ஒலியின்பால் மயக்கப்பட்டுப் பின் சென்றுவிடுகிறான். 

அத்தலைக்கோலரிவையிடம் தன்னையே இழக்கிறான். தவறைத் தவறென்று அறியாமல் செய்த அவன் அத்தவறிலேயே மூழ்கி மணிமேகலை என்ற முத்தையும் எடுக்கிறான். 

அதன் பின் அவனுக்கும் அவனுடைய இணையான மாதவிக்கும் பிணக்கு ஏற்படத் திரும்பத் தன் மனை(வி)யிடமே திரும்புகிறான். எப்போதும் அவனுக்காய் மலர்ந்திருக்கும் கண்ணகியின் இல்லமும் உள்ளமும் அப்போதும் அவனை ஏற்றுக் கொள்கிறது. 

இருவரும் மதுரை திரும்புவதும் கவுந்தி அடிகளைச் சந்திப்பதும், அதன் பின் கண்ணகி கணவனுக்கு அறுசுவை உண்டி படைப்பதும் தனது தண்டையைக் கழட்டித்தருவதும் நிகழ்கிறது.

ஒரு சிலம்பில் வாழ்வைத் தொலைத்தவன் மறுசிலம்பில் மீட்டெடுக்கப் பார்க்கிறான். இரு சிலம்புகள் மட்டுமல்ல மூன்றாம் சிலம்பு ஊடுருவி ஊழ்வினையாய் அவனை ஆக்கிரமிக்கிறது.  ஆனால் தவறிழைத்தபோதெல்லாம் காத்த சிலம்பு சரியான பாதைக்கு வந்தபோது அவனைத் தவறானவனாகக் காட்டித் தண்டித்துவிடுகிறது.  

மிகுந்த துயரம் தோய்ந்த இக்கதையை இளங்கோ அடிகள் எப்படித்தான் எழுதினாரோ என்று வருந்தும்படி இருந்தது. 

சீர்காழிக்கு அருகில் உள்ள பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  கண்ணகி, கோவலன் மாதவியின் புடைப்புச் சிற்பங்களோடு கதை சொல்லப்பட்டுள்ளது. கண்ணகியின் கால் சிலம்பை எடுக்க முயன்றபோது காமிராவில் அந்த ஃபோட்டோ மட்டும் சரியா விழலை. அத அப்ப கவனிக்கவும் இல்லை. இதுனாலதானே அவனே போய்ச்சேர்ந்தான் என்ற காரணமோ என்னவோ.




கண்ணகியும் கோவலனும் மணக்கோலத்தில்.




பூம்புகார் என்ற பட்டினப்பாக்கம். ( காவிரிப்பூம்பட்டினம்.)



மணவிழா வாழ்த்து.
Related Posts Plugin for WordPress, Blogger...