எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.


ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.

”என்னம்மா உனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தா நல்லா படிப்பியா.”

”எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்காட்டியும் பரவாயில்லை. என்னை விட கஷ்டப்படுற நிறையப்பேர் இருக்காங்க. அவங்களுக்கு கட்டாயம் கொடுங்க. உங்க உதவி தேவைப்படுறவங்க நிறைய இருக்காங்க. ” என்று கண்ணீர் விட்டு அழுது தனக்கு வந்த உதவியைக் கூட இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்த அச்சிறுமி மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். இதைக் கேட்ட அந்த ஃபவுண்டேஷன் சார்பாக இந்தக் குழந்தைகளை நேர்காணல் நடத்திய என் உறவினர் கண்களிலும் கண்ணீர்.