எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மார்ச், 2026

சுவையான 50 வகை கீரை சமையல்


முன்னுரை


  கீரை சாப்பிடணும்னா குழந்தைங்க காத தூரம் ஓடுவாங்க. இந்தக் கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்வீங்க.



குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி சில வெரைட்டீஸ். லஞ்ச் பாக்ஸ் மெனு கூட இதுல இருக்கு. ஞாபகசக்திக்கு வல்லாரை ரெசிப்பீஸும் இருக்கு.

  நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு, அப்புறம் இரும்புச்சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்குத் தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம். அதுக்குன்னு கீரைபோண்டா, கீரை கட்லெட், கீரை வடைன்னு எண்ணெயில் குளிச்சு எந்திருக்காம சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்களைப் பார்ப்போம்.

  பெரியவங்களுக்கு ஏத்தமாதிரி ஹெர்பல் ரசம், சூப் வகைகள் கீரையில் ஸ்பெஷலா இதுல இருக்கு. தைராய்டு, பிபி, டயபடிக், ரத்தசோகை  அப்பிடின்னு எந்தப் பிரச்சனை வந்தாலும் டாக்டர்கள் கீரையை சாப்பிடும்படிப் பரிந்துரைக்கிறாங்க. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து அதுலதான் அதிகமா இருக்கு. ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்தும் இருக்கு.

  முடி கொட்டுது என்ற பிரச்சனை உள்ள அனைவரும் இந்த கீரை வெரைட்டீஸை செய்து சாப்பிட்டா தீர்வு கிடைக்கும். நல்ல கண்பார்வை கிடைக்கும். செரிமானம் எளிதாக இருப்பதால் நன்கு பசி எடுக்கும்.

  பொன்னாங்கண்ணி, முடக்கத்தான், கற்பூரவல்லி, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, பாலக், முருங்கைக்கீரை, கடுகுக் கீரை, முள்ளங்கிக் கீரை, வல்லாரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இதிலெல்லாம் புலவு, தோசை, சப்பாத்தி, செய்து சாப்பிட்டுட்டு பாருங்க. எல்லாத்துலயும் நம்ம உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து இருக்கு. எனவே வாரம் ஒன்றிரண்டு முறையாவது கீரைகளைச் சேர்த்துக் கொள்வோம்.

  கீரை குளிர்ச்சியும் கூட. முடி நன்கு வளரும். இந்தக் கோடையில் தினமும் சேர்த்தாலும் நல்லதுதான். சுத்தம் செய்ய சோம்பல்பட்டு எளிய செலவில் குடும்பத்துக்குக் கிடைக்கூடிய சத்தை இழக்காதீங்க. சத்துள்ள கீரைகளைத் தினமும் சாப்பிடுங்க.

  எப்பிடி இருந்ததுன்னு உங்க கருத்தை இந்த ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. honeylaksh@gmail.com.

  வாழ்க வளமுடன். !

 

என்றும்  உங்கள்ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள தேனம்மைலெக்ஷ்மணன்.

 

1. கருவேப்பிலைக் குழம்பு

2. கொத்துமல்லி தோசை

3. வெற்றிலை ரசம்

4. வல்லாரை சூப்

5. வல்லாரைத் துவையல்

6. வல்லாரை வத்தக்குழம்பு

7. கீரைப் பொரியல்

8. பச்சைப் புதினாத் துவையல்

9. புதினா தேங்காய்த் துவையல்

10. புதினா/கொத்துமல்லித் தொக்கு

11. மணத்தக்காளிக்கீரை மண்டி (நீர்ச்சாறு)

12. தூதுவளை ரசம்

13. கொத்துமல்லி தேங்காய் சம்பந்தி

14. வெந்தயக்கீரை சாம்பார்

15. மேத்தி பரோட்டா

16. மேத்தி தால் வெஜ் சேமியா

17. கருவேப்பிலைத் துவையல்

18. புதினா புலவ்

19. கருவேப்பிலைப் பொடி

20. பசலைக்கீரை மசியல்

21. முருங்கைக்கீரை சாம்பார்

22. கீரைக் காம்புகள் சூப்

23. முருங்கைக்கீரை ராகி அடை

24. அகத்திக்கீரை பொரியல்

25. முள்ளங்கிக்கீரை சப்ஜி (மூலி சப்ஜி)

26. வெங்காயத்தாள் கூட்டு

27. பருப்புக்கீரைக் கடைசல்

28. சேம்பு இலை உசிலி

29. கடுகுக்கீரை சப்ஜி

30. பாலக்கீரை சப்பாத்தி/பூரி

31. பாலக் பனீர்

32. பாலக் கோஃப்தா

33. பாலக் பனீர் தோசை

34. கோங்குரா சட்னி

35. முடக்கத்தான் தோசை

36. முள்ளு முருங்கை அடை

37. கீரை போண்டா

38. கீரை வடை

39. முளைக்கீரை தயிர்க்கூட்டு

40. கீரை பொரிச்ச குழம்பு

41. கீரை பொரிச்ச குழம்பு (இன்னொரு வகை)

42. கொத்துமல்லி கட்லெட்

43. அரைக்கீரை ஆம்லெட்

44. கீரைக் கூட்டாஞ்சோறு

45. பச்சை மிளகாய் கொத்துமல்லித் துவையல்

46. கொத்துமல்லி தேங்காய்ச் சட்னி

47. பொன்னாங்கண்ணிக்கீரைப் பொரியல்

48. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா துவையல்

49. குறிஞ்சான்கீரை தண்ணிச் சாறு

50. கொத்துமல்லி வெஜ்  ஊத்தப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...