எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 ஜெயங்கொண்டத்தில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அம்மாவின் அறுபத்தெட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்குப் புடவை பரிசாக வழங்கப்பட்டது. 100 புடவைகள் இருக்கலாம். டோக்கன் வழங்கப்பட்டு சுமார் பத்துமணி அளவில் அவர்கள் அனைவரும் அங்கே மடைப்பள்ளி அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள்

சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது  நம் உறவினர்  விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.


அதிமுகவின் ஜெயங்கொண்டம் மாவட்டச் செயலாளர்  மற்றும்  மாவட்டப் பால்வளத்தலைவருமான  திரு தாமரை எஸ் இராஜேந்திரன் வருகைக்காக  அவர்கள் காத்திருக்க நாம் சுவாமி தரிசனம் செய்ய உள்ளே சென்றோம். கோயிலில் காயத்ரி மண்டபம் என்று பெருமாள் சந்நிதியிலும் தாயார் சந்நிதியிலும் இருக்கின்றது. தியானம் செய்ய அருமையான இடம். அமைதி பொலிய அழகான அருளாட்சி கிட்டியது. ( கோயில் பற்றிய மேலதிக விவரங்கள் இன்னொரு இடுகையில் போடுவேன் . )

மிக அருமையான கோயில். பிரம்மாண்டமாக ஸ்ரீதேவி பூதேவியுடன் வீரநாராயணர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். அபிஷேகப் பொருட்கள் வந்தாச்சா என்று யாரிடமோ பட்டர் விசாரித்துக் கொண்டிருந்தார். நாம் ஜெயங்ககொண்ட சோழீசரைத் தரிசிக்க வந்து பாதி வழியில் இக்கோயிலில் புகுந்திருந்தோம். எனவே இன்னொரு பட்டர் தீபம் காண்பிக்க தரிசித்து வெளிவந்தோம். 

திரும்பி வந்தபோது பாக்குமட்டைத் தொன்னையில் அருமையான தயிர்சாதம் கிடைத்தது. நோட்டவுன் த முந்திரி இன் தயிர்சாதம். மடைப்பள்ளியில் செய்ததால் மிகப் பிரமாதமாக இருந்தது.  தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தாமரை ராஜன் வந்தார். பின்னே அவரது குழாமும் வந்தார்கள்.

அவர் மேடையேறியதும் உட்கார்ந்திருந்த பெண்கள் நாலாதிசையிலும் பரவி மேடையேறி ஆக்கிரமித்தார்கள். அவர்கள் ஒருபக்கமாக வந்தால்தான் சரியாகத் தர முடியும் என அங்கு ஒழுங்குபடுத்திகொண்டிருந்த சிலர் சொன்னதும் ஒரு பக்கம் மாறி வரிசையில் வந்து வாங்கி மற்றொரு பக்கமாக இறங்கினார்கள்.

புடவைகளைப் பார்த்து ரசித்தாலும் நம்ம பட்டுப் புடவையைப் பார்த்துவிட்டு அங்கே ஓசியில் கொடுக்கப்படும் இந்தப் புடவைக்கெல்லாம் சின்னப் புள்ளமாதிரி ஆசைப்படக்கூடாது என்று ”கண்ட்ரோல்” சொல்லிக் கொண்டு திரும்பி வந்தோம். ஹாஹாஹா.

திரும்பி வரும்போதுதான் அந்த பேனரையே பார்த்தோம். ஆனால் காரில் - பயணத்தில் இருந்ததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

நல்ல விஷயம்தான் செய்கின்றார்கள். கோயில்களும் தற்போது மிக அருமையாகப் பராமரிக்கப்படுவதாகவும், பல கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் நம்மோடு கூட வந்த உறவினர் சொல்லிக் கொண்டே வந்தார்.

நாம் வெளியே போகும் தருணங்கள் குறைவு என்பதாலும் அதிலும் இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்ததில்லை என்பதாலும் ஒரு எக்ஸைட்மெண்டில் படங்களை எடுத்து அப்லோட் செய்திருக்கிறேன். அம்மா விசுவாசி என்று யார் திட்டினாலும் தூற்றினாலும் போகட்டும் கண்ணனுக்கே. கண்ணன் யார் என்கின்றீர்களா அவர்தாங்க எங்க வீட்டுக்காரர். அவர்தானே அந்தக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனது. :)

ஹாப்பி பர்த்டே அம்மா. ! வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

5 கருத்துகள்:

  1. ஒரு மாற்றத்துக்குப் புடவை வாங்கி இருக்கலாம் a change can be spicey.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... கோவிலுக்குப் போய் தரிசனம் கிடைத்ததோடு புடவையும் கிடைக்க வேண்டுமென நினைத்து விட்டீர்கள்! :)

    பதிலளிநீக்கு
  3. கோயிலுக்குப் போனால் புடவையுமா...ஹஹஹஹ் தயிர்சாதம் நாவில் நீர் ஊற வைத்தது..

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாலா சார் . கிடைத்திருந்தால் வாங்கி இருக்கலாம் :)

    ஆம் வெங்கட் சகோ

    ஹாஹா ஆம் துளசி சகோ & கீத்ஸ். உண்மையிலேயே தயிர்சாதம் நெம்ப ருசி :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...