எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 அக்டோபர், 2014

மக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்.



போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரைப் பேட்டிக்காக எங்கள் வீட்டிற்கு மூவரும் வந்தபோது எடுத்த புகைப்படம்.
நிலையில்லா உலகினில்
நிம்மதி நிழல் தேடிடும் வேளையில்
கடந்துவந்த காலத்தின் காற்று
கனலாய் இருக்கும் சில வேளைகளில்
அதில் கருணை மழையும் பொழிந்திடும்.
நம் பருவ வயதில் – அதில் காதல் இப்போதைக்கு
அது தேவையில்லை. ஆம் வாழ்க்கைப் பயணமோ
நம் பிறப்பு இறப்பு தண்டவாளத்தில் – நாம்
பிறந்துவிட்டோம் உழலும் உலகத்தில் –
சுகாதாரம் அதில் பாதி. சீர்கேடு அதன் மீதி
இறந்துவிடுவோம் எதிர்காலத்தில்
ஏதாவது செய்திடுவோம் பெயர் விளங்கும்
விதத்தில் சுயநலமின்றி- பொதுநலன் கருதி
செய்திடுவோம் இரத்த தானம்.
செத்தாலும் பார்த்துக் கொண்டிருப்போம்
சிறந்தது கண் தானம். உடல் உறுப்புகள்
தானம் – தம்பி ஹித்தேந்திரனே முன்னுதாரணம்
மண்ணுக்கும் போகாது நெருப்பிலும்
வேகாது நமது முழு உடல்தானம், மருத்துவ
ஆராய்ச்சி மகத்துவத்திற்கு சிறந்த சாதனம்
மனிதன் மனிதனுக்காகவே ! என்றும் மனித நேயத்துடன்
உலக அரங்கில்நமது நாடு. ஆமாம்
நிலையில்லா உலகினில் நமது செயல்
என்றும் நிலையானதோடு.


இவன் தமிழரசி சாருமதி

என்று இவர்கள் பெயரில் எழுதிக் கொடுத்தவர் திரு சு. மா. வெங்கடேஷ். 


இவர் என்னுடைய சாதனை அரசிகள் நூலில் இடம்பெற்ற ஒரே ஆண் . ஏனெனில் சாருமதி தமிழரசி இருவரும் இவரின் துணையோடு தென்னக ரயில்வேயில் மனநலம் இல்லாமல் சுற்றுவோரை உரிய இடங்களில் சேர்ப்பிக்கிறார்கள். 

இவர் அங்கு மட்டுமல்ல எந்த இடத்தில் இது போல மனிதர்கள் -- (ஆதரவற்றவர்கள், அநாதைகள், நோய்வாய்ப்பட்டு சாலைகளில் கிடக்கும் முதியவர்கள், வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்கள், இளம்பெண்கள், ) பாதுகாப்பில்லாமல் தெருவில் கிடந்தாலும் சென்று அவர்களை உரிய முறைப்படி அநாதை இல்லங்களில் சேர்ப்பிக்கிறார். கிட்டத்தட்ட 700 மனிதர்களுக்கும் மேல் மீட்டுக் காப்பாற்றி இருப்பார். ஹெல்ப் லைன், அன்பாலயா சேவாலயா ஆகிய சமூக சேவை அமைப்புகளின் உதவி கொண்டும் இச்சேவையைச் செய்கிறார்.

தன் குடும்பம் தன் மனைவி தன் மக்கள் ( இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு ) என்று இருக்கும் சுயநல உலகில் இவரின் சேவை பாராட்டப்படவேண்டியது. 


பென்ஷனை வாங்கியவுடன் அம்மாவிடம் வாங்கிக்கொண்டு விட்டுச்செல்லும் மகன் போன்றோர் உலகத்தில் இருக்க அந்த முதிய பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பித்து இருக்கிறார். இவருடைய எண்ணுக்குத் தெரியப்படுத்தினால் உடனே வந்து அழைத்தும் செல்கிறார். ( இது காவல்துறையில் எஃப் ஐ ஆர் போடுவது முதற்கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து அதில் கையொப்பமிடுவது வரையிலும் அதன் பின் ஓரளவு குணமான பின்பு அநாதை/முதியோர் இல்லங்களில் சேர்ப்பது வரையும் தொடர்கிறது ) 

மனநலமற்று மிகவும் அழுக்காகத் தன்னுணர்வு இல்லாமல் இருப்பவர்களைக் குளிக்க வைத்துத் தூய்மைப்படுத்தியும் அழைத்துச் செல்கிறார். இது மிகப்பெரும் சேவையாகும். ஏனெனில் அவர்களின் அருகில் சென்றாலே தங்களுக்கு ஏதோ ஆபத்து என்று காயப்படுத்த ஆரம்பித்து விடுவார்களாம்.

பலமுறை இரத்ததானம் செய்திருக்கும் இவர் குடும்பத்தினரோடு கண் தானமும் தான் இறந்த பிறகு உடல் தானமும் செய்திருக்கிறார். அடிபட்டுக்கிடந்த 800க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றி உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

”மிஸ்டர் மனிதநேயம்” என்று தேடல் பத்ரிக்கையிலும் ”சுகங்களைத் துறந்து சேவையில் சிறந்த சு. மா வெங்கடேஷ்” என்று எண்ணங்களின் சங்கமம் என்னும் பத்ரிக்கையிலும் இன்னும் பல பத்ரிக்கைகளிலும் இவரைப்பற்றி வெளிவந்துள்ளது. பல நிறுவனங்கள் இவரின் சேவைக்காக விருதுகள் வழங்கி உள்ளன. திருநங்கைகள் நடத்திய விழா ஒன்றிலும் இவருக்கு விருது அளித்துக் கௌரவித்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லம் அமைக்கவேண்டும் என்பது இவரது கனவு. தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும்  வெங்கடேஷ் அவர்களின் சேவை சிறக்க வாழ்த்துவோம். இவரின் கைபேசி எண்.  93801 85561.இவருடைய ஈமெயில் ஐடி. agalvenkat@yahoo.co.in. மனித நேயத் தொண்டில் வாழ்க வளமுடன், நலமுடன், பல்லாண்டு.

4 கருத்துகள்:

  1. \\தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே\\

    பற்பல படாடோபங்களுக்கிடையில் உண்மையாய் சாதிக்கும் பலரும் இப்படிதான் இருக்குமிடம் தெரியாமல் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அற்புத மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி தேனம்மை. சகமானுடம் போற்றும் சாதனைமனிதருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்வண்ணன் சகோ

    நன்றி கீதா. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...