எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :- ( காற்றுவெளி இதழில் )



பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :-

இந்தக் கட்டுரை அமேஸான் கிண்டிலில் எனது பதிநாலாவது நூலான ”பெண்ணின் மரபு “ என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. 


நன்றி காற்றுவெளி 

டிஸ்கி :- இந்தக் கட்டுரை 13, அக்டோபர் 2013காற்றுவெளி இதழில் வெளியானது.   http://issuu.com/kaatruveli/docs/_______________________________oct_/33?e=1847692/5206191

7 கருத்துகள்:

  1. கண்டிப்பாக... சட்டத்தின் பிடி எதற்கும் வளையாமல் இறுக வேண்டும்...

    காற்று இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பெண்களுக்கு தனி பள்ளி, தனி பஸ்.. தனி விடுதி தனி ரெயில் பெட்டி......

    இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு தனி ஊர், தனி ரோடு தனி மருத்துவ மனை தனி சுடுகாடு கொண்டு வந்துவிட்டால் முடிந்தது பிரச்சனை..

    பதிலளிநீக்கு
  3. இந்திய ராணுவ அதிகாரிகள் கற்பழிப்பில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்கவே வழி வகை இல்லாத பாதுக்காப்பு சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இரும்பு பெண்மணி சர்மிளா உணவு மறுத்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றார். நாம் ஏன் அதை கவனிக்கவில்லை? நாம் ஏன் அவருக்கு உறுதுணையாக போராட முனையவில்லை. சொல்லப் போனால் இந்த அரசும், இந்த அரசுக்கு வாக்களித்து வரும் நம் சமூகமும் பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்கின்றன. நமது கலாசாரம் அதனை தண்டனைக்குரிய குற்றமாய் பார்ப்பதில்லை. ஒருவர் மீது அத்துமீறி தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் தனிமனித உரிமை மீறலாகவும், கொடிய செயலாகவும் பார்க்கப்படும் கண்ணோட்டம் இன்னும் வரவில்லை. ஏன் பெண்களில் பலருக்கே அக் கண்ணோட்டம் வரவில்லை. தாய்மார்களுக்கு வந்தால் தானே அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வரும். இது ஆபத்தான ஒரு சமூகத்தை உருவாக்கி வருகின்றது. பெண்களுக்காக தனி விடுதி, தனி ரெயில், இருக்கை என்பதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது எங்கு போய் முடியும் என்றால் பெண்கள் இறுதியில் முக்காடு இட்டு சமையலறைக்குள் போய் கொண்டு போய் விடும் ஆணாதிக்க செயல்முறை தான். பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மற்றவரின் உடல் மீது அவரின் அனுமதியின்றி ஆளுமை செலுத்த கூடாது என்பதை முதலில் உணர வேண்டும். அடுத்த நிலையில் பெண் உடலை வியாபார பொருளாக்கி வரும் ஊடகங்கள், படைப்புகள், மதங்கள் என சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் தவிடு பொடியாக்க புறப்பட்ட வேண்டும். அதனை முன்னின்று நடத்த வேண்டியவர்கள் பெண்கள் மட்டுமல்ல பெண்ணிய உரிமையை வழிமொழியும் ஆண்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் பெண் உடலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து ஏற்படும் எதிர்ப்பும் சலனமும் பெண் உடலை வியாபாரம் ஆக்கும் வியாபாரிகளை கதி கலங்கச் செய்ய வைக்கும்.

    குற்றவாளிகள் தண்டிக்கபடுவதோடு ஒவ்வொருவரின் கடமை முடிந்துவிடப் போவதில்லை. நன்னடத்தை, பகுத்தறிவு, மனிதாபிமானம் போன்றவற்றை உள்ளடக்கிய கல்வி முறையை கல்விக் கூடங்களும், வாழ்க்கை முறைகளை சமய, அரசியல் கழகங்களும் முன்மொழி வேண்டும். குறிப்பாக பிற்போக்குத்தனங்களை முன்மொழிந்து வரும் இயக்கங்களை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

    மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கையோடு

    விவரணன் நீலவண்ணன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  5. சமீப காலத்தில்தான் பாலியில் வன் கொடுமை அதிகரித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.

    1. ஆண் ஆதிக்கம் இப்பொழுது குறைந்து கொண்டு வருகிறது. இதனை விரும்பாத சில ஆண்களின் கோப வெளிப்பாடு.

    2. இன்றைய சமுகத்தில் பெண்களின் பங்கு அதிகமாய் இருக்கிறது. முன்பழக்கம் இல்லாத பெண்களோடு ஆண்கள் பழக நேரிடுகிறது. இதில் சில பேரு தவறு செய்கிறார்கள்.

    3. சில காதலர்கள் மற்றவர்களின் முன்னே அதிக நெருக்கமாய் இருக்கிறார்கள்.

    4. சில பெண்களின் உடை அலங்காரமும் அவர்களின் பேச்சும்.

    ஆண் பெண் இருவரும் சமம் என்பதை ஆண் புரிந்து கொள்ள வைக்க பட வேண்டும். இன்றைய சமூகம் இதனை நோக்கி பயணம் செய்தால் இப்பிரச்சனை குறையும்.

    பதிலளிநீக்கு
  6. ஆம் தனபாலன் சகோ

    என்ன செய்வது வினோத் குமார்

    சரியா சொன்னீங்க விவரணன் நீலவண்ணன்

    நன்றி குமார்

    ஆமாம் சீனி

    சரியான அலசல் சேகர்




    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...