எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். சண்முக வடிவு -- யோகா ஒரு வைப்புநிதி.


முகநூல் தோழி சண்முக வடிவு அவர்கள் யோகக் கலை பயிற்சியாளர். அவங்க ஒரு முறை ஒரு போஸ்டுக்கு பதில் சொல்லி இருக்கும்போது மாமியாராயிட்டதைக் குறிப்பிட்டு இருந்தாங்க. இவ்ளோ சின்ன வயசிலேயே மாமியாராயிட்டீங்களான்னு நான் அவங்கள ஆச்சர்யமா கேட்டிருந்தேன். திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு அவர்களின் ஃபிட்னெஸ்ஸுக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணம் யோகாதான்.

யோகா என்பதால் , அது அனைவருக்கும் முக்கியமானது என்பதால் ஜாலி கார்னரா கேக்க முடியல..


எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டா பொதுவா ஜாலியா கேலியா கிண்டலா பதில் சொல்ல சொல்லுவேன். பட் யோகா ரொம்ப இம்பார்ட்டெண்ட் என்பதால் நோ கிண்டல்.. ஒன்லி மேட்டர்.

 /////யோகா ஏன் அவசியம். இதுனால என்னென்ன நன்மைகள்.. ////



யோகா என்றால் என்ன..?

 உடல் மனம் ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைப்பதே யோகக்கலை .

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட யோகக் கலைதான் இன்று சில சில வேறுபாடுகளுடன் கற்பிக்கப் படுகிறது.

யோகா என்பது யோக ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய மூன்று நிலைகளும் சேர்ந்ததே ஆகும் .

உடலையும் மனதையும் வலுவாக்க ஆசனங்கள், நுரையீரலின் கொள்ளளவை முழுதுமாய்ப் பயன்படுத்தி அதிகப் படி ஆக்சிஜனை உள்ளிழுக்க மூச்சுப் பயிற்சி , மனதை லேசாக்கி ஒருமுகப் படுத்த தியானம் .

 இன்று இருக்கும் அவசர யுகத்தில் எல்லாவற்றிற்கும் போட்டி .. ஒரு நிதானமின்மை . இதன் காரணத்தால் உண்டாகும் மன அழுத்தம் கவனச்சிதறல்  உண்டாகிறது. மனதில் ஏற்படும் அழுத்தம் உடலையும் பாதிக்கிறது . யோகாவை முறையாகப் பயின்று பயிற்சி செய்வதன் மூலம் இவை சரி செய்யப்படுகிறது .


ஆசனங்கள் உடலை வலுவாக்குகிறது இளமையைத் தக்க வைக்கிறது .மூச்சுப் பயிற்சி யும் தியானமும் மனதை தூய்மைப் படுத்தி கவனிக்கும் திறனையும் புத்திக் கூர்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.

.தினமும் இதற்காக ஒதுக்கப் படும் நேரம் நம் வாழ்நாள் ஆரோக்கியத்திற்கு நாம் சேர்த்து வைக்கும் வைப்பு நிதி போல .

 முந்தைய காலத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை .பகிரவும் மகிழவும் மனித உறவுகளின் நேசம் . மன இறுக்கம் இல்லாத ,.  இருந்தாலும் இறக்கி வைக்க சுற்றிலும் நமக்கான சொந்தங்கள் .

இன்று யாரோடும் நின்று பேச யாருக்கும் நேரமில்லை . பகிர்தல் இல்லாமல் இறுகிப் போன மனதோடு பாவப் பட்ட மனிதர்கள் .

அந்தக் கால வாழ்க்கை முறையில் உடலுழைப்பும் அதிகம் இருந்தது . உண்ணும் உணவு செரித்தது. உடலுறுப்புகளும் ஆரோக்கியமாய் இருந்தன

இன்று எல்லா இடங்களிலும் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு . சமையலறை முழுக்க சாதனங்கள் . மிக்சி கிரைண்டர் கேஸ் அடுப்பு குக்கர் மைக்ரோவேவ் அவன் என்று .

வாசலை விட்டு இறங்கினால் வாகனம் . இவை அத்தனையும் வேலைகளை சுலபமாக்கி இருக்கலாம்.

ஆனால் பதிலுக்கு நம் உடல் மன ஆரோக்கியத்தை அல்லவா எடுத்துக் கொண்டன ? 

உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று குடிக்கும் தண்ணீர் என்று எல்லாமே polluted ஆகி நம் ஆரோக்கியம் என்பது கேள்விக் குறியாகி விட்டது .  அப்படி இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு யோகா அவசியமாகிறது .

  • --- நன்றி சண்முக வடிவு மேடம். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி பற்றிய உங்க அருமையான கருத்துக்களைத் தேவையான நேரத்தில் எடுத்து உரைத்தமைக்கு. யோகம் பயில்வது வைப்புநிதி வைத்திருப்பதைப் போலப் பாதுகாப்பான வாழ்வைக் கொடுக்கும்.  என்பது உண்மை.. !!! வாழ்க வளமுடன். 

9 கருத்துகள்:

  1. சண்முக வடிவு மேடத்தின் யோகா பற்றிய கருத்துக்களை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. சண்முக வடிவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. //திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு // நானும் இப்பதான் அவங்களை சந்தித்தேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக உண்மை. அதுக்கு காரணமாய் நீங்க சொல்லியிருப்பதுவும் உண்மையே :)
    A right time posting (y)

    பதிலளிநீக்கு
  4. நன்றி குமார்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி காயத்ரி.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. சண்முகவடிவு அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
    மிக யதார்த்தமாக,ஜாலியாக எழுதும் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும்.யோகா பற்றி மிக நல்ல கருத்துக்களையும்,அதன் அவசியத்தினையும் பகிர்ந்தமைக்கு நன்றியக்கா.
    கார்னரில் அறிமுகப்படுத்திய தேனக்கா உங்களுக்கும் ரெம்ப நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. கருத்துச் சொன்னால் தப்பாயிடுமோனு யோசனையா இருக்கு. பதஞ்சலியின் யோகக்கலையில் ஒரு சின்னத் துளி தான் இந்த யோகாசனங்கள். அவர் சொல்லும் யோகமே வேறு. இந்த ஆசனப் பயிற்சி அதற்கான அடிப்படைனு கூடச் சொல்ல முடியாது. அடிப்படியில் ஒரு சின்னச் செங்கல். அவ்வளவு தான். மேலதிகத் தகவல்களுக்கு http://anmikam4dumbme.blogspot.in/2010/07/blog-post_08.html இது கிட்டத்தட்ட நான்கு பகுதிகள் வந்திருக்கின்றன. ஆரம்ப அத்தியாயத்தின் சுட்டி மட்டுமே கொடுத்திருக்கேன். ஆசனம் என்ற முறையில் எனக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும் யோகம் என்பது இது அல்ல என்று என் யோக ஆசானே போதித்திருக்கிறார். :)))))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...