எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2012

ஒன்றுமறியாத பூனைக்குட்டி

ஷாப்பிங் மால்களில்
முயல்குட்டிகளும்
பூனைக்குட்டிகளும்
கடந்த போது
அவன் கண்கள்
அவைபோல் துள்ளின.

கூட வரும் மனைவி
பார்க்கும்போது
கீழ்விடுவதும்
பின் ஏந்திக்கொள்வதுமாக
நீண்டன அவன் கண்கள்.


குறுகலான கடையில்
இருந்த காலண்டர்
சாமியின் ஆயுதம்
அவனை மிரட்டியது .

கண்களை வெவ்வேறு
கோணங்களுக்கு
உள்ளாக்கியபோதும்
தட்டுப்பட்டபடியே
இருந்தன அவை.

இடப்பக்கக் கடைவழியே
குதித்துச் சென்றவைகளை
பட்டைக் கண்ணாடிகள்
பலவாய்ப் பிரதிபலித்தன.

பர்சின் கனம் குறைந்து
பைகளின்கனம் அதிகமானபோது
அவன் உரசிச்செல்லும்
சில பூனைகளையும்
வெறுக்கத்துவங்கி இருந்தான்..

ஏதுமறியாததுபோல்
புன்னகைத்தபடி
இணைப்பூனையாய்
அடியொற்றியபடி
நடந்தாள் மனைவி..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 12 , 2011 திண்ணையில் வெளியானது. 

8 கருத்துகள்:

  1. மனைவியுடன் போகும் போது குட்டியை ரசிக்க கூடாதுங்க..!

    பதிலளிநீக்கு
  2. haha oru kutti kathai, Nalla irukku akka :)

    பதிலளிநீக்கு
  3. ஆம் மணவாளன்

    நன்றி தனபால்

    ஹிஹி சரியா சொன்னீங்க சரவணன்


    நன்றி டையானி சார்லஸ்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...