எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

கார்ட்டூன் கதைகள்..

கார்ட்டூன் கதைகள்..
*********************

சில பல கோடுகளால்
கரடு முரடு வார்த்தைகளால்
குழந்தைகள் மனதில்
உருவாகி விடுகிறது
பொம்மைச் சித்திரக் கதைகள்..

அவ்வப்போது அவை
பொம்மைகள் போல
கதைப்பதும் குதிப்பதும்
களியாட்டம் தருகிறது.


பிரம்மனைப் போல
உணர்கிறேன்
ஒவ்வொரு சித்திரக்
கதாபாத்திரத்தையும் படைத்து
உலவ விட்டிருப்பவனை..

உருவாக்கத்தில்
உலவுவதை விட அவை
குழந்தைகளின்
இரவுக் கதைகளாக
உருப்பெறும் போது
முழுமையுற்றதாகின்றன..

கதை சொல்லியாக
இருந்த நான்
கதை கேட்பவளாக மாறி
குழந்தையின் கைபிடித்து
உலவுகிறேன் உறக்கத்தில்...

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 1- 15 ,2012 அதீதத்தில் வெளியானது. 


3 கருத்துகள்:

 1. குழந்தைகளுக்கு குழந்தைகதைகளை சொல்லும்போதோ, கேட்கும்போதோ நாமும் குழந்தை ஆகிவிடுவோம். அதிலொரு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. நல்லாருக்கு அக்கா.. படம் ஒன்றை இணைத்து இருக்கலாமே..

  பதிலளிநீக்கு
 3. நன்றி தவப்புதல்வன் சார்

  நன்றி ஹாரிபாட்டர்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...