எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2009

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது...

தாம்புக்கயிறறுந்த குடம்
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள்...

கிணற்றைப்போல என்னை
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ

வினோத மேகம் போல
என் உதடுகள்
மழை பொழியப் பொழிய
வெளுக்காமல் கறுத்து...

மீண்டும் மீண்டும்
மழை தேடும்
சாதகப்பறவையாய் நீ ...

உன் உதடுகளுக்குள்
சிப்பிக்குள் சிக்கிய
நன்னீர் சொட்டுப் போலும்
அன்னியப் பொருள் போலும்
இறுக்கி விளைந்த முத்தாய்
என் உதடு....

பாதாளக் கரண்டிகளில் மாட்டி
வெளிப்பட்ட போது நான்
பாலைவனச் சோலை
ஆகியிருந்தேன்....

பூக்களும்
வண்ணத்துப்பூச்சிகளும்
என்னைச் சுற்றிலும்......

20 கருத்துகள்:

  1. செம ரொமாண்டிக் கவிதை.
    இப்பவே வீட்டுக்குப் போய் . . . உம்ம்ம்மா..

    பதிலளிநீக்கு
  2. நிரம்ப பிடித்தது

    (சாதப்பறவையாய் நீ ... )சாதகப்பறவையாய் நீ ...
    தவறை திருத்திவிடுங்கள் அல்லது சாதப்பறவை என்று ஒன்று உள்ளதா?

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தேனம்மை

    அருமையான, உணர்ச்சியினைத் தூண்டும் கவிதை
    இயல்பாக தம்பதிகள் நடத்தும் முத்த யுத்தத்தை - இவ்வளவு அழகாக கற்பனையில் முத்த மழை பொழியச் செய்தமை பாராட்டுக்குரியது

    நல்வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  4. தேனு மக்கா,

    ஆசுவாசமாக இருக்கு.பூ, முடிந்து போய் விடுமோ என்கிற பதட்டம் இல்லை இப்போ.தொடர்ந்தார் போல் வர இயலவில்லை

    .சிவகங்கைக்கும் காரைக்குடிக்கும் எவ்வளவு தூரம்?மன்னிக்காதா என்ன?அம்மா நலமா?அம்மாவிற்கான பிளாக் திறந்தாச்சா?

    ரொம்ப பிடிச்சிருந்தது தேனு,

    //பாதாளக் கரண்டிகளில் மாட்டி
    வெளிப்பட்ட போது நான்
    பாலைவனச் சோலை
    ஆகியிருந்தேன்....

    பூக்களும்
    வண்ணத்துப்பூச்சிகளும்
    என்னைச் சுற்றிலும்.//

    அற்புதம் மக்கா.

    பதிலளிநீக்கு
  5. இதுபோல் ஒரு ரொமாண்டிக் கவிதை சமீபத்தில் படித்ததாக நினைவிலில்லை. மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆர் செல்வகுமார் சார்

    ஒரே நேரத்துல 5 6 வலைத்தளமா

    எம்மாடி கலக்குறீங்க

    பதிலளிநீக்கு
  7. நன்றி விஜய்

    தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி விஜய்

    சாதப்பறைவைதான் திருத்தி விட்டேன்

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் தவறு நிகழ்ந்து விட்டது

    "சாதகப் பறவைதான் " விஜய் சரி

    பதிலளிநீக்கு
  9. நன்றி சீனா சார்

    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராகவன் சார்

    உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி

    நீங்க இல்லாம என் இடுகைகளே இல்லை

    பதிலளிநீக்கு
  11. நன்றி பா ரா

    ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க
    வாங்க

    புது புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து மக்கா

    அம்மா காரைக்குடியில் நான் சென்னையில்

    எனவே அவங்க இங்க வரும்போதுதான் கலந்து கொண்டு ஆரம்பிக்கணும்

    பதிலளிநீக்கு
  12. நன்றி நவாஸுத்தின் உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

    உங்க அன்புக்குழந்தை நலமா

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நன்றி தேனு..

    நம் நேசன் தளத்தில்,உங்கள் கருவேலநிழலில்,என் சும்மாவில்,இப்படி எல்லா இடத்திலும் புத்தகத்தின் விசாரணை ரொம்ப நெகிழ்வாய் இருக்கு.அடர்த்தியான பிரியங்களுக்கு என்னிடம் எப்பவும் பதில் இருந்ததில்லை.கண் கலங்கி நிற்பவனிடம் என்ன வார்த்தையை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?எனக்கு இந்த தருணங்களில் வாழ்வது பிடிக்கும்.ஊமையாகவேனும்...

    நன்றி என்கிற வார்த்தையை சொல்ல இயல்வதில்லை தேனு மக்கா,வீட்டு மனுஷிகளிடம்.

    சாருக்கு என் அன்பையும்,அம்மாவிற்கு என் வணக்கத்தையும் தாருங்கள் தேனு.

    பதிலளிநீக்கு
  14. முத்தச் சத்தத்தாலேயே நிரம்பிக் கிடக்கிறது கவிதை.எத்தனை அற்புதமான சொற்கோர்வைகள் தேனு.எல்லாம் அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி பாரா
    என்னை நெகிழவைத்துவிட்டீர்கள் உங்கள் அன்பு தோய்ந்த வார்த்தைகளால்

    நல்லா இருங்க மக்கா எல்லாரும்

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஹேமா
    அண்ணன் குடும்பத்தார் நலமா
    விசாரித்ததாகக் கூறுங்கள்
    உங்கள் வருகைக்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...