எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தாமரைப்பூ

அல்லியும் ஆம்பலும்
குமுதமும் கொட்டிக்கிடக்கும்
குளத்தில் இறங்கி
என்னை மட்டும்
பறித்துச் சென்றாய்...

தனிமைப் படுத்தப்பட்டதாய்ப்
பதறினேன் நான்...

இதழ் இதழாய்
எனை விரித்து
சந்திர கலைகளும்
கங்கையும் வழியும்
உன் சிரசில் சூடினாய்.... .

தீபாராதனை ஒளியில்
கண்ணாடி மாளிகையில்
என் அழகே
எனக்கு வியப்பாய்....

13 கருத்துகள்:

 1. இன்று மட்டும் மூன்று இடுகைகள். அதில் முத்தாய்ப்பாய் தாமரைப் பற்றிய இடுகை.

  // தீபாராதனை ஒளியில்
  கண்ணாடி மாளிகையில்
  என் அழகே
  எனக்கு வியப்பாய்... //

  உங்கள் பார்வையின் வித்யாசம் நன்குப் பளிச்சிடுகின்றது.

  ஒரே ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு நாளைக்கு இரண்டு இடுகைகள் மட்டும் போடுங்களேன். வாசகர் வட்டம், நிறைய இடுகைகள் போட்டால், கடைசியாகப் போடப் பட்ட இடுகைகள் மட்டும்தான் படிப்பார்கள். தவறாக நினைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 2. Now I came to know that how u able to read all those endless lists of blogs...
  Once again thanks for ur guiding and advice,
  Thiru Raagavan

  பதிலளிநீக்கு
 3. இந்த வலைப்பூ பேரையும் பாருங்களேன்... சும்மா உங்கள் பார்வைக்காக..

  http://chummaah.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. "தீபாராதனை ஒளியில்
  கண்ணாடி மாளிகையில்
  என் அழகே
  எனக்கு வியப்பாய்...."


  azhagu ungal rasanai........

  பதிலளிநீக்கு
 5. ம்ம்ம்.. ஃபுல் ஸ்பீட்ல போவுது.. என்ன விஷயம்?

  பதிலளிநீக்கு
 6. சிதம்பரத்துல தாமரைப்பூ இல்லையா அண்ணாமலயானே

  பதிலளிநீக்கு
 7. அடேங்கப்பா எல்லாருக்கும் கிடைக்குமா அந்த இடம் ...?? கோவிலில் பார்த்து ரசித்திருக்கிறேனே தவிர ... மிக அழகு.. உங்க கவிதை.

  பதிலளிநீக்கு
 8. நெறய இருக்கு.. அதுவும் உண்டு பூஜைக்கு...

  பதிலளிநீக்கு
 9. நீங்க ஒரு பல்கலைக் கழகம்னு சொல்லுங்க அண்ணாமலையானே

  பதிலளிநீக்கு
 10. நன்றி பலா பட்டறை உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

  நகத்தைக்கூட நேசிக்கிறவரை இப்பத்தான் பார்க்கிறேன் அருமை பலா பட்டறை

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...