எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

முல்லை

வரவேற்பறையில்
முகமகன்கள்கூறி
அவரவர் ப்ரபஞ்சத்தில்
ஆழ்ந்திருந்தோம்...

கணினித்திரையில்
அவசரச் செய்திகள்..
மயில் மேல் முருகனாய்
உலாவியில் சுற்றி
உடனுக்குடன் முடித்து
உலகு மீண்டோம்...

களைத்த கண்களும்
களைத்த கைகளும்
எந்திரம் போல
தினசரி வாழ்க்கை...

வீடு புகுதலும்
அலுவலகம் புகுதலும்
வருமானம் வரும்
வேட்கையில்லா உயிர்ப்பு...

கேபினில் இருந்து
நிமிர்ந்த ஒரு கணம்
உத்யோக நிமித்தம்
சிரிப்பதை விடுத்து
உள்ளன்போடு புன்னகைத்தாய்...

தெறித்த மின்னலில்
பச்சரிசிப்பற்களில்
உதிர்ந்த முல்லைகளில்
வசந்தத்தின் வாசனையில்
வாழும் வேட்கையில்
உயிர்த்தேன் நான்....

13 கருத்துகள்:

 1. //பச்சரிசிப்பற்களில் உதிர்ந்த முல்லைகளில் //

  இது நல்லா இருந்துச்சுங்க. ஆனால் முல்லையின் வாசத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லாம விட்டுடீங்களே... எனக்கு ரொம்ப பிடித்த வாசனைகளில் ஒன்று முல்லை பூ வாசனை.

  பதிலளிநீக்கு
 2. சந்தன முல்லை நன்றாக மணக்கும் பூக்களில் ஒன்று
  இடுகையில் திருத்தி வெளியிட்டுள்ளேன் திரு இராகவன்

  பதிலளிநீக்கு
 3. நன்றி. என்னுடைய பின்னூட்டத்தை மதித்து திருத்தம் செய்ததற்கு.

  பதிலளிநீக்கு
 4. நான் மட்டும் சும்மாவா? கணனி இல்ல கணினி திருத்துவீங்களா இல்லயா?

  பதிலளிநீக்கு
 5. அண்ணாமலையான் உங்க வார்த்தையை ஏற்று தவறைத் திருத்தி விட்டேன்..

  சந்தோஷமா..!!

  பதிலளிநீக்கு
 6. நன்றி. என்னுடைய பின்னூட்டத்தை மதித்து திருத்தம் செய்ததற்கு.இராகவன் நைஜிரியா சொன்னது… (சார் உங்க பேர் பாத்தீங்களா? 3 தடவ வந்துருக்குது? )
  ரிப்பீட்டேய்...
  (வேறென்ன copy, paste-தான்) காலயிலேயே யாரையாவது கலாய்ச்சாத்தான் பொழுது நல்லாருக்குது....

  பதிலளிநீக்கு
 7. நான் திருத்த சொல்ல ஒன்றும் இல்லை. உயிர்ப்புள்ள கவிதை உள்ளத்தை தொட்டது.

  பதிலளிநீக்கு
 8. கணினித்திரையில்
  அவசரச் செய்திகள்..
  மயில் மேல் முருகனாய்
  உலாவியில் சுற்றி
  உடனுக்குடன் முடித்து
  உலகு மீண்டோம்...

  நாங்க பிள்ளையார் மாதிரி மவுஸ் வச்சு சுத்தறோம்.. மெயில் வச்சு சுத்தாம..
  நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
 9. proffessor -ke certificate-aa? appa neenga periya proffessor -thaane?(hi hi hi athu raathiriyilaum kalaaichaathaan nallaarukkuthu...)

  பதிலளிநீக்கு
 10. oru professor ee ippadi panna avar kita padikira pasanga eppadi irupanga parthukunga makkalee

  aamaa thungave mattigala ANAMALAIYAN pc screen leyee kudi irukiinga pola !!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...