எனது பதிநான்கு நூல்கள்

புதன், 23 செப்டம்பர், 2009

மல்லிகை

கல்லூரி வகுப்பறை
நண்பர்கள் பேப்பர்
அம்புகளை எய்து
கொண்டிருந்தபோது...
நீ பார்வை
அம்புகளை எய்தாய்...

உன் பார்வை விடு
தூதில் ஒவ்வொன்றும்
மல்லிகையாய் மெத்தென்று
என் மனதில்...

உன் பார்வைகளில்
உதிர்ந்த மல்லிகைகளை
என் பார்வைகளில்
வாங்கிக் கோர்த்தபோது,
நம் காதலின் கிரீடம்
ஆனது அது..

அதை அணிந்து
உலா வந்தோம்
ஒளி வட்டம் போல
பார்வை வட்டம் சூடி...

5 கருத்துகள்:

 1. // உன் பார்வைகளில்
  உதிர்ந்த மல்லிகைகளை
  என் பார்வைகளில்
  வாங்கிக் கோர்த்தபோது,
  நம் காதலின் கிரீடம்
  ஆனது அது.. //

  நான் மிகவும் ரசித்த உருவகம்.

  பதிலளிநீக்கு
 2. திரு ராகவன் நைஜீரியாஅவர்களே
  தொடர்ந்த வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்த வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி
  முனியப்பன் ஸார்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...