எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

மாதுளம்பூ

அராபிக் மெஹந்தியும்
கோல்ட் :.பேஷியலும்
வீடியோ வெளிச்சத்தில்
பூச்செண்டுகள் சூழ ரிஸப்ஷன்....

பெற்றோர் நடத்திய
பொருந்திய திருமணம்...

ஜிகினா நாட்கள் முடிந்து
மாயைகளும் மோஹங்களும்
குறைந்த இயல்பான வாழ்க்கை...

இருந்தாலும் உனை நெருங்கி
வரும்போதெல்லாம்
வெட்கத்தில் கவிழும்
உன் கன்னத்தில்...

ரூஜ் இல்லாமலே
எப்படிப் பூத்தன
தீற்றிய சிகப்பில்
மாதுளம் பூக்கள்...

7 கருத்துகள்:

 1. // ரூஜ் இல்லாமலே
  எப்படிப் பூத்தன
  தீற்றிய சிகப்பில்
  மாதுளம் பூக்கள்...
  இடுகையிட்டது //

  அதுதான் சந்தோஷமான வாழ்க்கைக்கு அடையாளம்.

  பதிலளிநீக்கு
 2. ராகவன்
  உங்க வாழ்க்கை நினைவலை ஏதோ நினப்புல வந்துட்ட மாதிரி இருக்கே இந்த பதில்

  பதிலளிநீக்கு
 3. நன்றி சரவணன் PTC நல்ல உபயோகமுள்ள இடுகை

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. என்னாச்சு அண்ணாமலையான் இவ்வளவு கேள்விக்குறி

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...