எனது பதிநான்கு நூல்கள்

சனி, 12 செப்டம்பர், 2009

காந்தப்புலன்

சூரியனும் வெளிச்சமுமாய்
உலகைப் புணர்ந்து
உயிர்கள் பெருக்கி...

வால்நட்சத்திரங்கள்விழுங்கும்
வியாழன் கோளாய்
என்னைப் பதுக்கி...

நிலவாய் வந்து
அலையான என்
உன்மத்தம் பெருக்கி...

மழையாய்ப்பொழிந்து
தாகம் அடக்கி
எழிலாய் ஆக்கி ...

காற்றுக்கவசமாய்
என் சுயம் போர்த்தி
கருகி விடாமல்...

பனிமுத்தம் ஈந்து
உயிர்விதை தந்து
துளிர்விடச்செய்து...

தட்பவெப்பம்
தாளாத என்னை
உள்ளங்கையில் வளர்த்து...

உலகம் உள்ளளவும்
உருளச்செய்யும்
அச்சாணியாய்...

ஆதாரமாய்
ஈர்ப்புவிசையாய்
காந்தப்புலனான உன்னுள் நான்...!!

5 கருத்துகள்:

 1. அற்புதமாய் வந்திருக்கிறது தேனம்மை. செறிவும் தெளிவும் கலையழகும் இணைந்த அருமையான உள்ளடக்கம் பொதிந்த நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பார்வை பட்ட பேரானந்தத்தில்
  உயரப் பறக்கும் தேன் சிட்டாய்...

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...