எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2009

மகிழம்பூ

அக்ரஹாரத்தின்
நீண்ட தெருக்களில்
வாழையும் தென்னையும்
மாடும் கன்றும் செறிந்த
உன் வீட்டின் எல்லைச்
சுவரோரம் மகிழமரம்...

பூத்திருப்பது தெரியாவிட்டாலும்
முற்றத்தில் அமர்ந்து
உதிர்ந்த மகிழம்பூக்களை நீ
கோர்த்துக்கொண்டிருப்பது தெரியும்...

நெக்லஸ் வட்டங்களைப் போல
லாவகமாய் முடிச்சுப்போட்டுத்
தெருவின் விளிம்பில் இருக்கும்
ஆஞ்சநேயருக்கு கிழமை தவறாமல்
சாற்றி வந்தாய்...

பேதை பெதும்பை
அரிவை தெரிவை கடந்து
இளம்பெண்ணாய் மணமுடித்து
சென்றபின் ஹனுமார்
தனிமையிலே...

நெஞ்சினிலே உன் பூ அல்லாது
வெறும் வெண்ணைக்காப்புடன்...

உன் வீட்டைக் கடந்து செல்லும்
போதெல்லாம் உன் வாசமாய்
மகிழம்பூ வாசம்...

7 கருத்துகள்:

 1. மகிழம்பூவிற்கு ஒரு குணம் உண்டு. காய்ந்த பின்னும் வாசம் இருக்கும் பூ அது. அது போல மகிழம் பூ பற்றி எழுதும் போது, நினைவளைகளில், // உன் வாசமாய் மகிழம்பூ வாசம் //

  மைலத்தில் படிக்கும் போது, மலைக் கோயிலுக்கு போகும் வழியில் நிறைய மகிழம் மரம் இருக்கும். அதை பொறுக்கி எடுத்துக் கொண்டு வருவோம். ம்... பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன்..
  காய்ந்த பின்னாலும் வாசம் வரும் பூ அது என்று..
  நினைத்துக் கொண்டே இருந்தேன்
  எழுதும்போது விட்டுப் போய்விட்டது.. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி..
  மைலம் என்றால் எந்த ஊர்?
  மயிலாடுதுறையா?

  பதிலளிநீக்கு
 3. // மைலம் என்றால் எந்த ஊர்?
  மயிலாடுதுறையா? //

  இல்லீங்க. இது திண்டிவனத்துக்கு பக்கத்தில் இருக்கு. முருகன் கோயில் இருக்குங்க. அழகான முருகன் கோயில். பொம்மபுர ஆதினத்தைச் சேர்ந்த கோயில்.

  3, 4 மற்றும் 5 வகுப்புவரை அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. ""நெஞ்சினிலே உன் பூ அல்லாது
  வெறும் வெண்ணைக்காப்புடன்...""
  அழகாய் வருகிறது. இன்னும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அழகாய் இருக்கிறது, தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி டாக்டர் ருத்ரன்
  முதல்முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க
  நன்றி
  உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமா எழுத முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...