எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2009

முகமூடி

பஞ்சுமிட்டாய்க்காரனும்
ஜவ்வுமிட்டாய்க்காரனுமாய்
ஈர்க்கும் கதைசொல்லி...

தெரு கடந்து சென்றபின்னும்
கைக்கெடிகாரம் ஒட்டிய
கையெல்லாம் சர்க்கரைப்பாகு...

தோல்பாவைக்கூத்துக்களில்
கயிறு கட்டி அவன் ஆட்டுவிக்க
காண அமரும் நானும் முகமூடியுடன்...

கதகளி ஆட்டத்திலே
ஒப்பனையாய் அவன் ஆட
காணும் நானும்
வர்ணங்கசியும் முகத்துடன்...

பாலைவனத்திலே ஒட்டகத்தில்
அவன் பயணித்தால்
என் முகமெல்லாம் மணல்
நறநறப்பாய்...

அருவிக்கரை மழையில்
அவன் நனைந்தால்
என் முகமெங்கும் ஈரம்
பிசுபிசுப்பாய்...

என்னுடைய எண்ணங்களையும்
வண்ணங்களில் குழைத்து
அவனே மீட்டுவதால்
வீணை உருவிலிருந்த நானும்
கொட்டாங்கச்சி வாத்தியமாய்
உருவுக்கொவ்வா சத்தத்தோடு...

சமேலியைப் போன்ற
பலநிற முகங்காட்டும்
ஹோலியின் சஹேலி நான்...

எந்தக் கதைசொல்லி வந்தாலும்
ஊருக்கென்றும் ஆளுக்கென்றும்
அணிந்து கதை கேட்க
விதவிதமாய் முகமூடி....

பொய்யான புனைவோ, நிஜமோ,
வகுப்பிலோ, வீட்டிலோ, வெளியிலோ,
நண்பனோ, யாத்ரீகனோ
கதை சொல்லியின்
சூத்திரக்கயிற்றில்
பொம்மையாய் நான்...

வீட்டில் குவிந்து கிடக்கும்
முகமூடிகளுக்குள்ளே
கழற்றிப்போட்டஎன் முகம்
எதுவென்று தேடுகிறேன்....

7 கருத்துகள்:

 1. sabalaksh: lots of fans it seems. balaji says : vasthu post sooper
  utra says : tamil kavithai .. nice.
  aruna says : i lik tamil. happy :D

  பதிலளிநீக்கு
 2. வீட்டில் குவிந்து கிடக்கும்
  முகமூடிகளுக்குள்ளே
  கழற்றிப்போட்டஎன் முகம்
  எதுவென்று தேடுகிறேன்....

  உண்மையின் வரிகள்.......

  வாழ்க்கையின் உண்மையை தேடும்
  உங்கள் தேடலில்
  வலிமை அதிகம் தெரிகிறது....

  பதிலளிநீக்கு
 3. நன்றி தினேஷ் உங்க விமர்சனத்துக்கு

  பதிலளிநீக்கு
 4. நன்றி கதிர் உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...