எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2009

மேரி கோல்டு [தங்க அரளி]

நாட்டியப் பள்ளி வாசலில்
பூத்துஇருந்தது
மேரி கோல்டு...

உன் சாரதியாய்
வந்த நான்
வெளியில் காரில்...

உள்ளே சலங்கை கட்டி
நீ ஜதிஸ்வரத்துக்கேற்ப
ஆடிக் கொண்டிருந்தாய்...

விஜயதசமியில்
தேவிகளுக்கு
அர்ப்பணமாய்...

நெற்றியில்
வியர்வை
சந்தனமாய்..

ஒரு எல்லையில்லா
பெருவெளிக்கு
உன் பாதச்சந்தம் ஒரு
சுருதிலயத்தோடு குழைத்தது...

கூட்டுப் புழுவிலிருந்து
வண்ணத்துப் பூச்சியாக
உருமாறியிருந்தாய்...

ஜல் ஜல் என்ற உன்
சலங்கை ஒலிக்கேற்ப
விழுந்து கொண்டிருந்தது...

வெளியில் அமர்ந்திருந்த
என்மேல் மேரி கோல்டு
ஒவ்வொன்றாய்...

11 கருத்துகள்:

 1. நெற்றியில்
  வியர்வை
  சந்தனமாய்..

  உயரிய கற்பனை, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஔவையின் பேரனே ..
  நன்றி..
  உங்களைப் போல் சின்ன வார்த்தைகளில்
  எழுத வேண்டும் விஜய் ..

  பதிலளிநீக்கு
 3. // நாட்டியப் பள்ளி வாசலில்
  பூத்துஇருந்தது
  மேரி கோல்டு...

  வெளியில் அமர்ந்திருந்த
  என்மேல் மேரி கோல்டு
  ஒவ்வொன்றாய்..//

  இந்த இரண்டு வரிகளையும் மிகவும் ரசிச்சேன்.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் மணம், தமிழிஷ் என்று இரண்டு திரட்டிகள் இருக்கின்றன. அதில் உங்க படைப்புகளை இணையுங்களேன். வருகை அதிகரிக்கும்.

  பதிலளிநீக்கு
 5. பாலா தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்து இங்கு வந்தேன்,தேனம்மை.ரொம்ப புதுசா இருக்கு பூக்கள் தலைப்பிட்டு அதை சம்பவங்களுடன் இணைப்பது-அழகான மொழி வளமையுடன்.!தங்க அரளிக்கு மேரி கோல்டு இன்று அறிய நேர்ந்தது.நல்லா இருக்குங்க கவிதையும்.

  பதிலளிநீக்கு
 6. நன்றீங்க ராகவன்
  தஸரா கொண்டாட்டங்கள் முடிஞ்சுருச்சா

  பதிலளிநீக்கு
 7. நீங்களே நன்றாக எழுதுகிறீர்கள் ராஜாராம்
  என்னை ஊக்குவிப்பதற்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கு நன்றி தோழி. நான் தொடர்ந்து அதை காப்பாற்ற முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. // thenammailakshmanan சொன்னது…
  நன்றீங்க ராகவன்
  தஸரா கொண்டாட்டங்கள் முடிஞ்சுருச்சா //

  இங்கு தசரா எல்லாம் கிடையாதுங்க. மனசுக்குள்ளேயே கொண்டாடியாச்சு.

  பதிலளிநீக்கு
 10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...