எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அந்நியன் விக்ரம்

 அந்நியன் விக்ரம்


மாலை என் வேதனை கூட்டுதடி, காதல் தன் வேலையைக் காட்டுதடி, வீசும் காற்றுக்கு என்னைப் புரியாதா, என்றெல்லாம் மென்மையாக மெலோடியில் கவர்ந்தவர் விக்ரம். சீயான், கென்னி என்றழைக்கப்படும் விக்ரம் நடிப்பு அசுரன். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி தலைமுடி, தோற்றமனைத்தையும் மாற்றிக் கொள்வார். நடிப்புலகில் கமலுக்கு அடுத்தபடியாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டவர்.

வசீகரக் கண்கள் காதலில் மென்மையாகும் அதே சமயம் க்ரோதத்தில் ஜொலிக்கும்,உருளும். நடுத்தர உயரம், அளவான தலை முடி, சிரிக்கும் போது ஏற்படும் கன்னக்குழி எல்லாம் இவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். எந்தப் பாத்திரமானாலும் அதற்கேற்ற பாடி லாங்க்வேஜ் இவரின் ஸ்பெஷாலிட்டி.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

 தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

காரைக்குடியில் இருந்து அம்பத்தூருக்கு ராமு ட்ராவல்ஸ் என்ற பெயர் கொண்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இது மட்டுமல்ல இன்னும் பல ஊர்களுக்கும் ராமு ட்ராவல்ஸ் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் யார் எனத் தெரிந்தால் வியப்படைவீர்கள். அவர் இராமகிரி சுப்பையா. 73 வயதுடைய நகரத்தார் பெண்மணி. இவர் பிறந்ததும் வாக்கப்பட்டதும் தேவகோட்டைதான். இரணிக்கோவிலைச் சார்ந்தவர். பேருந்துகள் மட்டுமல்ல, திருமண மண்டபங்களுக்கும் சொந்தக்காரர். அதற்கு முன் ஐஸ் கம்பெனி, கார் வேன் சர்வீஸ் என நடத்தியவர். என்னை மிகவும் கவர்ந்தது இந்த வயதிலும் அவரது தன்னம்பிக்கையும் ஆளுமையான குரலும்தான்.

இவரது குழந்தைப் பருவம், குடும்பம் பற்றியும், பொதுவாகப் பெண்கள் ஈடுபடாத இத்தொழில்களில் இவர் எப்படித் தடம்பதித்துள்ளார் எனக் கேட்டபோது, ”எனது பெற்றோர் ராமநாதன் செட்டியார், தாயார் முத்துச் சிகப்பி ஆச்சி. எனக்கு ஒரு தம்பி உண்டு. அவன் பெயர் லட்சுமணன். திருவேங்கடமுடையான் வித்யாலயா (இப்போது மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி) பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தேன். 9,10,11, (எஸ் எஸ் எல் சி) பெத்தாளாச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தேன்.

யூ ட்யூபில் 3061 - 3070 வீடியோக்கள்

3061.தித்திக்கும் திருப்புகழ் - 144 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ahlh2vaKuZA


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3062.தித்திக்கும் திருப்புகழ் - 139 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rmpiCuLtAxo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 6.

9.

உத்தரவு - சம்மதம். அனுமதி, ஆசி

பொங்கச்சீர் - பொங்கப்பானை கொடுத்தல்.

மொறைச்சிட்டைப்படி - பெண் பார்த்ததிலிருந்து அனைத்தும் மாப்பிள்ளை பெண் வீடுகளில் முறைச்சிட்டையில் குறித்தபடியே கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

எத்தைத்தண்டி - எவ்வளவு பெரிசு.

ரெட்டை வீடு - இரண்டு வீடுகள் இணைந்தது.

ரெட்டை வளவு - இரண்டு வீடு இணைந்து இருந்தால் இரட்டை வளவு என்பார்கள்.

மருகிக் கொண்டு - மனதில் கவலையை மறைத்துக் கொண்டு.

யூ ட்யூபில் 3051 - 3060 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்.

3051.நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள் l  ஃபஸ்லூர் ரஹ்மான் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l6bf7OHU1qk


#நீங்களும்ஆங்கிலமருத்துவராகுங்கள், #ஃபஸ்லூர்ரஹ்மான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NEENGKALUMAANGILAMARUTHUVARAGUNGKAL, #FASLURAHMAN, #THENAMMAILAKSHMANAN,



3052.தலித் சிறுகதைத் தொகுப்பு l ப.சிவகாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=49KrXyGjEhk


#தலித்சிறுகதைத்தொகுப்பு, #பசிவகாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DALITSHORTSTORIESCOLLECTION, #PSIVAGAMI, #THENAMMAILAKSHMANAN,