159. காரைக்குடியில் பல்வேறு 1691*படைப்பு வீடுகள் உண்டு. 1692*அக்கினியாத்தா, 1693*மெய்யாத்தா, 1694*பாப்பாத்தி, 1695*அடைக்கியாத்தா, 1696*மாறத்தி படைப்பு வீடு என்று. இங்கு நான் அக்கினியாத்தா படைப்புவீடு பற்றி எழுதி உள்ளேன்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 10 நவம்பர், 2020
படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.
வெள்ளி, 6 நவம்பர், 2020
யுவைடிஸ்
யுவைடிஸ்
அடுப்படிப் பத்தியில் ஐயாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள் ஒமையா. அப்பத்தா இல்லாததால் ஐயா வீட்டில் தங்குவதில்லை. கிணற்றடிக் காளியம்மன் கோவில் பக்கம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் ஐயா. அங்கே நண்பர்களோடு அவ்வப்போது சீட்டுக் கச்சேரியும், அரட்டைகளும், தினசரிகள் பார்த்து அரசியல் அலசல்களும் நடக்கும். எப்போதும் எல்லாரும் சீட்டு விளையாடும் இடம் என்பதால் அதற்கு சங்கம் என்று பெயரிட்டு இருந்தார்கள் ஐயாவின் நண்பர்கள்.
கீழ்வாசலில் நின்று கண்ணைச் சுருக்கியபடி ”சீக்கிரம் கொடாத்தா “ என்று பரபரத்து கொண்டிருந்தார் சோமண்ணன்.
வெற்றிலை பொகையிலை போட்டுச் சிவந்திருந்த வாய்க்கு ஈடாக ராத் தூக்கமில்லாமல் செக்கச் செவேலனக் கிடந்தன சோமண்ணனின் கண்கள்.
எப்போது பார்த்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மாநிறம்தான் என்றாலும் சூரியனை உலவ விட்டதுபோல் இரண்டு கண்ணும் ஜொலிக்கும். எல்லாருக்கும் வாய் சிரிக்கும் என்றால் சோமண்ணனுக்குக் கண்ணுதான் முதலில் சிரிக்கும். ஐயாவுக்கு அமையும் ஆட்களும் ஐயாவைப் போலவே.
ஐயாவின் கண்கள் போல சாந்தமானவை அண்ணனின் கண்களும். ஒற்றை நாடி சரீரம். லேசாய் வழுக்கை விழுந்த தலை. ஒரு ப்ளெயின் சட்டை, கட்டம்போட்ட லுங்கி இதுதான் அவர் அணிவது.
வியாழன், 5 நவம்பர், 2020
யுத்தம் செய் - சில நினைவுகள்.
யுத்தம் செய் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை எங்களுக்குத் தனியாக ( முகநூல் நண்பர்கள் ) போட்டுக்காட்டினார்கள் நண்பர் சேரனும் இயக்குநர் மிஷ்கினும்.
தன் மகளுக்குத் தீங்கு நேரும்போது மத்யதர வகுப்பைச் சேர்ந்த ஒரு சாத்வீகத் தாய் சீறியெழுந்து நியாயம் கேட்பதுதான் கதை. இதற்கு என ஒரு கலந்துரையாடலும் கலைஞர் டிவியில் நடைபெற்றது. அதிலும் பங்கேற்க அழைப்பு வந்தது.
இயக்குநர் மிஷ்கினிடம் கறுப்பு உடை பற்றியும், மஞ்சள் உடைப் பெண்களின் நடனம் பற்றியும் கேட்டோம். அது பற்றி எல்லாம் முன்பே எழுதி இருக்கிறேன்.
டாக்டர் ஷர்மிளா, கயல், இயக்குநர் நந்தினி, ஐஸ்வர்யா ராகவ் ஆகியோர் பங்கு பெற்றோம். இந்த நிகழ்வு சத்யம் தியேட்டர் மாடியில் நடைபெற்றது.
புதன், 4 நவம்பர், 2020
நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.
158. 1661. இன்று கோட்டையூரில் உள்ள ஒரு வீட்டை முழுமையாகப் பார்ப்போம் வாங்க. இந்த வீட்டுக்கு பனா ஆனா ஆனா சித வீரப்ப செட்டியார் வீடு என்று பெயர். இது நாலு கட்டு உள்ளது.




