எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஏலையா பத்ரிக்கையின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.

ஏலையா என்றொரு பத்ரிக்கையின் ஆசிரியராய் இருந்து நடத்தி வந்தவர் மட்டுமல்ல. இன்றளவும் இராவணன் என்ற புனைபெயரிலும் தன் அசல் பெயரிலும் வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வருபவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர்,  ஐடிஎன் தொலைக்காட்சியின் ப்ரைம் நிகழ்ச்சிகள் நடத்துபவர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். இவரை ஜெர்மனி சென்றபின் சந்தித்தேன். புதியவர்கள் என்று கருதாமல் தம் குடும்பத்தில் ஒருவர் போல இவர்கள் குடும்பத்தினர் எம்மை நடத்தினார்கள். மிகுந்த மகிழ்வாய் இருந்தது.

2014 இல் முதன்முதலில் நண்பரானதும் உலக பெண்கள் தினத்துக்காக திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள் எம்மிடம் கேட்டதும் நான் உடனே இன்பாக்ஸில் இதை எழுதி அனுப்பினேன். ((அந்த வருடம் நிகழ்ந்த ஹம் காமாட்சி அம்மன் திருவிழாவில் எங்கள் சின்ன மகன் சபாரெத்தினம் திருமிகு முருகதாசன் அவர்களையும் திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தான். ))

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.

ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு வழிகோலிய அன்புத்தோழி ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் , மூன்று நூல்களின் ஆசிரியர், பிரபல வலைப்பதிவர் திருமதி கௌரி சிவபாலன்.  அவருக்கு முதலில் என் நன்றிகள்.



நிம்மிசிவாவின் வானில்..

2012 இல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட 24 நூல்களில் எனது நூலும் நிம்மி சிவாவின் நூலும் இடம்பெற்றிருந்தன. அவரது ” என் வானிலே “ என்ற கவிதை நூல் பற்றி நான் எனது வலைத்தளத்திலும் விமர்சனம் எழுதி உள்ளேன். மிக மென்மையான மனதுக்கும் உணர்வுக்கும் சொந்தக்காரர் , அழகிய கவி உள்ளம் படைத்தவர் நிம்மி சிவா.

பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் என்னுடைய சூலம் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியின் முடிவை ஜெர்மனியில் இருந்து எனக்கு உடனடியாக முகநூலில் இன்பாக்ஸில் அறிவித்தவர் என் அன்புத்தோழி திருமதி நிம்மி சிவா. அக்கணம் முதல் அவரோடு மிக நெருக்கமாகி விட்டேன். நிம்மிசிவாவின் வானில் நானும் உலாப் போய் வந்தேன். அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.



ஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்..

ஜெர்மனிக்குச் சென்றதும் நான் தமிழர் என்று சந்தித்தது என்னுடைய ஈழத்தமிழ்ச் சொந்தங்களையே. இவர்கள் எல்லாம் முகநூல் நண்பர்கள் என்றபோதும் என்னைத் தங்கள் உறவினராக உணரச் செய்தார்கள். சென்றதில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் விருந்துகளாலும் பரிசுப் பொருட்களாலும் தங்கள் அன்பாலும் மூழ்கடித்தார்கள்.

ஜெர்மனியில் திருமதி நிம்மி சிவா அவர்கள் , திருமிகு முருகையா கந்ததாசன் சார் அவர்கள், திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி கௌரி சிவபாலன் அவர்கள் , ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள், ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர் திருமிகு சிறிஜீவகன் அவர்கள் ஆகியோரை சந்திக்கும் பொன்னான வாய்ப்புக் கிட்டியது. அவர்களின் அன்பும் கவனிப்பும் உபசரிப்பும் அவர்கள் தமிழ்நாட்டு எழுத்தாளராக எனக்கு அளித்த கௌரவமும்  ஈழத்தமிழ் நூல்களும் மறக்க இயலாதவை.
Related Posts Plugin for WordPress, Blogger...