எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஏப்ரல், 2016

மும்பையில் நகர விடுதி.

முகநூல் நண்பர் திரு. சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் மும்பையில் (Mulund West - ஜான்சன் & ஜான்சன் பக்கம் ) நகர விடுதி கட்டப்படப் போவதால் அதற்கான உதவிகளைச் செய்ய அனைவரிடமும் தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர் மலர் குழுவுக்கான பொறுப்பாளராகவும் இருக்கின்றார். எனவே அனைவரும் எளிய கட்டணத்தில் தங்கிச்ச்செல்ல ஏற்ற விடுதி அமைய பெருமனமுள்ளோர் இயன்றவற்றைச் செய்ய நானும் வேண்டுகிறேன். 

////மும்பையில் நகர விடுதி

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்...

மும்பையில் ஒரு மிகப்பெரிய நகர விடுதி வரவிருக்கிறது என்கிற வார்த்தைகளை கேட்கையிலே மிகவும் ஆவலாக இருக்கிறது. உலகமெங்கும் நகரத்தார்கள் சென்றவிடமெல்லாம் கோவில்களும், நகர விடுதிகளும் கட்டினார்கள். பல தான, தருமங்களையும் செய்து வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றளவும் பல ஊர்களில் நகர விடுதிகள் கட்டப்படுகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன. தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தான தருமத்திற்கு அளிப்பதில் நகரத்தார்களுக்கு ஈடு இணையே இல்லை.
மும்பையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் தற்போது 5000 சதுர அடியில் நகர விடுதி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 12 முதல் 18 மாதத்தில் இந்த நகர விடுதி கட்டி முடிக்கப்படும் என்று முடிவு செய்து கட்டிடக் குழு மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த நகர விடுதி கட்டப்படவுள்ளது.
இந்த நல்ல செய்தி ஒவ்வொரு நகரத்தாருக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம். மலர் குழு பொறுப்பை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.

681. சின்னச் சின்ன விஷயங்களால் சின்னச் சின்ன விசாரிப்புக்களால், அக்கறையால் வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகிறது.. :)

happy weekend makkas.

682. எப்ப பார்த்தாலும் ஒரு சாக்ஸ் மட்டும் காணாம போயிடுதே.. கால் முளைச்சு போயிடுதா.. பசங்க போட்டா வாஷிங் மெஷின் தின்னுடுதா..

683. கை வைக்கிற இடத்துல எல்லாம் கோக் டின்னும், சிதறிக் கிடக்கும் சிப்ஸும், வாஷிங் மெஷின்ல போட்டதா இல்லையான்னு தெரியாத துணிகளும், ஆயிரம் செண்ட் பாட்டில்களும், 10 விதமான ஹேர் ஆயிலும் இருந்தா நிச்சயம் நீங்க இருக்கது பாச்சிலர்ஸ் வீடா இருக்கும். பேலசைக் கூட குப்பைத் தொட்டியா மாத்தும் இவங்க உங்க பசங்களாயிருக்கும் பட்சத்துல அந்த கோக் டின்னாலேயே ரெண்டு போடலாமான்னு வரும்.. :)


684.  /// Chinniah Kasi
March 18, 2012 at 1:22pm ·
தேனம்மை ஆச்சிக்கு வணக்கமும், நன்றியும்!
"அது ஒரு கனாக்காலம்" .....பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சில நாட்களுக்குக் குடிக்கவும்,சமைக்கவும்.நல்லவேளை தண்ணீர் தூக்க குடிதண்ணீர் ஊரணிக்கு பித்தளை குடமும் புளியுமாக போக வேண்டாம்.அங்கெ செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளேபோய் தெளிந்த தண்ணீர் மோந்துக்கிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்த்தை இல்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதை இருந்தது. (இது அவர் தினமணி கதிரில் எழுதியுள்ள சிறப்பு பரிசு பெற்ற சிறு கதையின் ஆரம்பம். ...... இது கதை அல்ல நிஜம். அந்த கதையே நிஜம்தான்! அதற்கு சிறப்பு பரிசு என்பதைத்தான் ஏற்க இயலவில்லை- பரிசுகளுக்கே சிறப்பு சேர்க்கும் எதார்த்தம் அது!, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பங்களில் ஆண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் ஒவ்வொரு நாட்களிலும் நடைபெறும் மனங்களை பதறக் கரைக்கும் நிகழ்வுகளே)!

புதன், 6 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! பார்ட் 4 - 6 ( நாடகம் )



 காட்சி – 4.

[சத்துணவுக் கூடம் ]

[ ஜான் அமல் கென்னடி உருட்டி உருட்டித் தர பகாசுரன் மாதிரி உணவை விழுங்கிக் கொண்டிருக்கின்றான். ஏறக்குறைய பெரிய அண்டாவில் இருந்த உணவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருந்தன. ]

ஜான் அமல் கென்னடி :- ( தனக்குள் ) முனியம்மா வந்தா என்னைப் பார்வையாலே எரிச்சிடுவாளே ! பயம்மாயிருக்கே !

 ( சத்தமாக ) ஸார் ! நீங்க தப்பா நினைச்சுக்கப்படாது. உணவு அவ்வளவுதான். !. ஸார் ஒரு விஷயம் ! நீங்க அந்த விஷயத்தைப் பத்தி மறந்துடுங்க. ! நானும் மறந்துடுறேன். ! தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. !

[ என்றவரைப் பார்த்து ]

செந்தில்நாதன் :- ( தனக்குள் ) சரியான லூசாயிருப்பார் போலிருக்கே !. அன்றைக்கு ஒரு கடையில் நான் கடைக்காரனுக்குத் தெரியாமல் பொட்டுக்கடலையை அமுக்கிப் பையில் போட்டுக்கிட்டு ஒவ்வொண்ணாத் தின்னுகிட்டு வர்றதைப் பார்த்தாரே. அதனால இவர் அவன்கிட்ட சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தா இவர் என்கிட்டேயில்ல பயப்படுகின்றார். நம்மளுக்கு விஷயம் ஒண்ணும் தெரியாட்டாலும் சும்மா நடிக்க வேண்டியதுதான்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் . வயல் கம்பளம்.

3.வயல் கம்பளம். :-


மேகப்பஞ்சு அவிழுது

மழை நூலை உதிர்க்குது

நீர்ப்புடவை நெய்யுது

மின்னல் சரிகை சேர்க்குது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 1 - 3. ( நாடகம் )



சத்துணவு கல்யாண வைபோகமே !

காட்சி – 1.

[அனந்த ராம விலாஸ் தொடக்கப் பள்ளியின் சத்துணவுக் கூடம். திருமதி முனியம்மா சத்துணவுக் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். முனியம்மாவின் ‘பற்களை விடக் கூரானது நாக்கா அல்லது நாக்கை விடக் கூரானது பற்களா’ என்கின்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பவர் சத்துணவு அமைப்பாளர் ஜான் அமல் கென்னடி ]

ஜான் அமல் கென்னடி : அம்மா, முனியம்மா கொஞ்சம் அந்த இடத்தை நல்லாப் பெருக்கேன். குழந்தைகள் உக்கார்ந்து சாப்பிடற இடம்.

[ஹூங்காரம் செய்துகொண்டு கையில் விளக்குமாற்றுடன் திருமதி முனியம்மா தன் திருமுகத்தைக் காட்டியதுதான் தாமதம் ஜான் அமல் கென்னடியின் தாத்தா முதல் பிறக்கப்போகும் பேரன் வரை அனைவரும் அவளின் திருவாயால் வாழ்த்தப்பட்டார்கள். ]. பிறகு

முனியம்மா : ஏன்யா ! பெருக்குறது கண் தெரியல. இது நொள்ளை அது நொட்டைங்கிறியே ! உன் ரகசியத்தை அம்பலப்படுத்திடுவேன். நேராய்ப் போய்ச் சொன்னேன்னா அப்புறம் நீ படும் பாடு. என்னய நீ அதிகாரம் பண்றியா ? உன்னய எப்பிடிப் பார்க்கணுமோ, எங்க பார்க்கணுமோ, அங்க பார்த்துக்கறேன். அறிவுகெட்ட மூதி , சோமாறி .

[இப்படியாக முனியம்மா பல சில சொல்லக்கூசும் வார்த்தைகளை வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் அடுக்கு மொழியில் இரைச்சலிட ,’டங், டங்’ என்ற பள்ளியின் மணீ ஒலிக்கிறது. ]

முனியம்மா : ( கோபமாக ) ஹூம். ! இப்ப பெல்லடிச்சிடுச்சு. மீதியை அப்புறம் திட்டறேன். (வறட் வறட் என்று பெருக்கிக் குப்பையை ஜான் அ. கென்னடியின் முகத்தில் வீசுவதுபோல் தள்ளிவிட்டுச் செல்கிறாள். )

{திரை விழுகிறது.}

காட்சி – 2.
பிள்ளைகள் கசமுசவென்று சத்தம்போட்டுக் கொண்டே அமர்கின்றனர்.

மாணவன் – 1. இன்னிக்கு என்னோட பிளேட் கொண்டு வரலை.

சங்கரன் :- ஐயோ எங்க மாமா இங்க வந்துடுமே !.அதுக்குள்ள சாப்பிட்டுடணுமே ! லபக் லபக் என்று விழுங்குகிறான்.

{திரை }.