எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிப்பியில் மழை மேகங்கள்.

ஊரெல்லாம்
வழிந்தோடும் தண்ணீருக்கு
எங்கள் பெற்றோரின் கன்னங்களே
நிரந்தரக் குடியிருப்பு.

நரகாசுரன் கூட அறத்திற்குப்
பயந்து அடிபணிந்துவிட்டான்.
இந்தக் கலியுக நரகாசுரர்களை
ஒழிக்க ஆரம்பித்தால் வருடம்
முழுவதும் தீபாவளி
கொண்டாட வேண்டிவரும்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சுவரோவியங்களும் குட்டீஸ் ஓவியங்களும்:-

சும்மா மோட்டு வளையை அல்லது சீலிங் பானைப் பார்த்தபடி படுத்திருக்கும் போது சுவத்துல குட்டீஸ் கலர் பென்சில், க்ரையான்ஸ்ல கிறுக்கி இருப்பதை பார்க்கலாம் . இது போக சுவத்துல தானே தண்ணீர் பட்டோ, கீறல் பட்டோ வெடிப்பு விழுந்தோ இயற்கையான உருவங்கள் தெரியும்..

எங்க தெரியுதுன்னு கேக்கிறீங்களா.. அதுக்கெல்லாம் கொஞ்சம் கலைக் கண் வேணுங்க..! ( ஹிஹி ).

எனக்குத் தெரிஞ்ச சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.

இது சித்தன்ன வாசல், குடுமியான் மலை  ஓவியங்களை ஞாபகப்படுத்துது இல்லையா. எதிர் காம்பவுண்டுல மண் சுவர் வீடு பேர்ந்து உருவான ஓவியம் இது. சிலருக்கு ஒரு படத்துல வடிவேலு தலை இப்படி இருந்தது ஞாபகம் வரலாம்.

புதன், 6 பிப்ரவரி, 2013

தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில் .



தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி

சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ளல் ,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது.

மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும்  ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல அவ்வப்போது திறந்து மூடும் கனவுகள் நிரம்பியவை. யதார்த்த உலகை மறுப்பவை. இவற்றையும் பதிவு செய்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்

ப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்க ( 3 ஆண்டுகளில் ) தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கும் நேரம் நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புறேன்.

நம்ம ஊரைச் சேர்ந்த கே. ஆர் . ஸ்ரீதர் கண்டுபிடிச்ச ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலமா ஆக்சிஜனும் ( ஆக்சிஜனையும் தயார் செய்து  அனுப்பணும் ) இயற்கை எரிபொருள் அல்லது சூரிய சக்தி சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்தை  நாமே தயாரிச்சுக்கலாம். ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கா..

திங்கள், 4 பிப்ரவரி, 2013

நிலங்களுக்கும் ரேஷன்.

நிலங்களுக்கும் ரேஷன்.

சென்ற சில மாதங்களாக தொடர்ந்து பயணங்கள் செய்யும் போது ஒரு விஷயம் பளிச்செனக் கண்களில் அறைந்தது. அது என்னவெனில் நம் தமிழ்நாடு முழுமைக்கும் ரியல் எஸ்டேட்டாக துண்டு போடப்பட்டிருக்கும் காட்சி. காடு, மலை, மேடு, கம்மாய் ஊரணி , அருவி  போன்ற சில இடங்களைத் தவிர எல்லா இடங்களும் கற்களாலும் காம்பவுண்ட் சுவர்களாலும் கட்டம் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

நிறைய விவசாய நிலங்கள் மற்றும் தூர்ந்த குளங்கள், ஏரிகள் கூட. இதனால்தான் மழை வரும் நேரம் அந்த வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. நிறைய மரங்கள் வைப்பதன் மூலம் காற்றை உற்பத்தி செய்யலாம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கலாம் ஆனால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று என்றால் அது நிலம் மட்டுமே.
Related Posts Plugin for WordPress, Blogger...