என் அம்மாவழிப் பாட்டி ( ஆயா) க்கு 87 வயதாகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் கூட குந்தாணியில் உலக்கையால் இடித்து நெல் குத்துவார், மாவு இடிப்பார். என்னால் கூட அப்படி எந்த உடல் உழைப்பும் செய்ய இயலாது. ஏனெனில் நான் யந்திரங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். தண்ணீர் இறைத்தல், மாவு ஆட்டுதல், அம்மியில் அரைத்தல் , துணி துவைத்தல் போன்ற எல்லாச் செயல்களும் எனக்காக எந்திரங்கள் செய்கின்றன. இன்னொரு காலத்தில் எனக்காக மூச்சு விடுதலைக் கூட எந்திரங்கள் நீட்டித்துக் கொடுக்கலாம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 6 நவம்பர், 2012
திங்கள், 5 நவம்பர், 2012
ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஸ்பெஷல் பதிப்பு ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் ரஜனி பற்றிய கருத்துக்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தார்கள். என்னுடைய கருத்து இதோ..
“ ரஜனி என்றால் நம் மனதில் வரும் பிம்பம் என்ன. ஸ்டைல் என்றால் ரஜனி ரஜனி என்றால் ஸ்டைல். என் சகோதரர்கள் முரட்டுக்காளையில் வரும் , ”பொதுவாக என்மனசு தங்கம். ஒரு போட்டி”யின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலை பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பாடி ஆடுவார்கள்.

வெள்ளி, 2 நவம்பர், 2012
பூனைகள்..
அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.
முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.
வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.
தொழில் செய்கின்றன.
கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.
முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.
வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.
வியாழன், 1 நவம்பர், 2012
REVIEW OF "LOOPER".. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.
LOOPER.. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.
கோபாலன் சினிமாஸில் லூப்பர் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிசின் படம். 2074 இல் காலப் பயணம் கண்டுபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல அது கிரிமினல் கூட்டங்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கப் பயன்படுத்துகிறது. கான்சாஸில் இருக்கும் மாஃபியா கும்பல்கள் 30 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று தங்களுக்கு எதிரியாக மாறப்போகிறவர்களை வாடகைக் கொலையாளி அதாவது லூப்பர் மூலம் தீர்த்துக் கட்டுகிறது.

வீடழகு.
எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.
வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.
நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.
வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.
நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)