வெள்ளி, 2 நவம்பர், 2012

பூனைகள்..

அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
 கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.

முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.

வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.


மடியில் அமர வாய்ப்புக்
கிடைக்கும்போது மடியிலும்
சிலசமயம் படியிலும்
ஜீவிதம் செய்கின்றன.

வனத்தின் மீட்சியாய்
பூச்சிகளைத் துரத்துவதும்
வேட்டையாடுவதாய்த் திரிவதும்
வம்சத்தின் மிச்சங்கள்

எல்லாவற்றையும் கூர்ந்திருப்பதாய்
காது விடைக்க கண் விரிய
கம்பீரமாய் அவை நோக்குவது
கவன ஈர்ப்புத் தீர்மானம்.

மியாவ் என்று கத்தும்போது
உறுமும் சிங்கமாகவும்
மீசையும் வரிகளும் இருப்பதால்
புலியாகவும் நினைத்துக்கொள்கின்றன.

அரைத்தூக்கம் மூடிய
தன் இருண்ட கண்களுக்குள்
மொத்த வீடும் முழுங்கி இருப்பதாய்
கனவில் மிதக்கின்றன.

பெண்களுக்குப் பிடித்தமானவை
வேறொரு விஷேஷமுமில்லை
 என்பதை அறியாமலே வாழ்கின்றன
வீடுதோறும் பூனைகள்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளியானது

9 கருத்துகள் :

Avargal Unmaigal சொன்னது…

நல்ல கவிதை

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை நல்லா இருக்கு...பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையாக முடித்துள்ளீர்கள்...

பெயரில்லா சொன்னது…

why this kolaveri towards male?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...

iyarkai anu சொன்னது…

nalla saattayadi kavithai..

iyarkai anu சொன்னது…

mikka nalla saattayadi kavithai

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அவர்கள் உண்மைகள்

நன்றி மலர்

நன்றி தனபால்

நன்றி பெயரில்லா.. எனக்கு என்னவோ அப்படி தோன்றியது.. எனவே எழுதினேன்.:)

நன்றி அனு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...