எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 நவம்பர், 2012

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

இன்றைய இந்தியாவின் மிக அத்யாவசியமான தேவை எது என்றால் கழிப்பிடங்கள் என்றுதான் சொல்வேன். ஏனெனில் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்யும்போதுதான் தெரியும் எத்தனை பெரிய நீளமான டாய்லெட்டை அரசாங்கம் அமைத்துள்ளது என்று. அது போக சுற்றி இருக்கும் வயல்வெளிகள், கம்மாய்கள் எல்லாமே இயற்கை உபாதையைத் தீர்க்கும் இடமாகவே திகழ்கின்றன.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் செல்லும்போது அங்கே ஒரு செம்மொழி நூலகம் திறக்கப்படக் காத்திருந்தது. இந்த முறை அது திறக்கப்பட்டு செயல்படுவதாகத் தோன்றியது. ஆனால் அடுத்தே ஒரு முகம் சுளிக்கும் காட்சியைக் காண நேர்ந்தது. அதன் பக்கமிருந்த வயல்களில் சிலர் அங்கேயே போய் அதன் பக்கம் தேங்கி இருந்த மழைத்தண்ணீரையே அள்ளிக் கழுவிக் கொண்டிருந்தனர்.


பொதுமக்கள் இவ்வாறு செய்யக்காரணம் வீடுதோறும் கழிப்பிட வசதிகள் இல்லாததே. கழிப்பறைகள் எங்கோ அரசின் மானியத்தோடு கட்டித் தரப்படுவதாகப் படித்தேன். சில சுய உதவிக் குழுக்களும் இதில் முயற்சி எடுத்து வீடுகள் தோறும் கழிப்பறைகள் அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக அறிந்தேன். இது இன்னும் சீக்கிரம் முடுக்கி விடப்பட வேண்டும்.

நூலகங்கள் மக்களைப் புதுப்பிக்கின்றன் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேதுமில்லை. ஆனால் ஒவ்வொரு நூலகத்திலும் போதுமான புத்தகங்கள் வாங்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட 3 வருடங்களாக. அது போக இருக்கும் புத்தகங்களும் மிகப் பழமையானதாகி விட்டன. போதுமான செய்தித்தாள்கள், தினசரிகள், வாராந்திரிகள், மாதாந்திரிகள் வாங்கப்படுவதுமில்லை.

மிகப் பெரும் சங்கங்களின் செயல்பாடு பரிதாபகரமானது. தினசரி பத்ரிக்கை வாங்கிப் போட்டால் அங்கே கூடிப் படிப்பவர்களை விட அதன் வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கேள்வி கேட்பவர்களே அதிகம் என்பதால் இதுப்போல் புத்தகங்கள் வாங்கி பொதுமக்கள் அறிவை வளர்த்து வந்த பாரம்பரியச் சங்கங்கள் , நூலகங்கள், கிளப்புகள் செயலற்று இருக்கின்றன.

பொதுமக்களுக்கும் நூலகங்களை எப்படிப் பயன் படுத்திக் கொள்வது என்ற விழிப்புணர்வும் இல்லை. அஞ்ஞானத்தை அகற்றி அறிவு ஒளி ஏற்றுவதில் புத்தகங்களின் பங்கு சிறப்பானது. ஒரு கல்வி அறிவு பெற்ற சமூகம் வன்முறையற்ற சமூகமாகத் திகழ முடியும்.

பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். படிக்கும் பழக்கத்தைத் திரும்பக் கொண்டு வர வேண்டும். வாரம் ஒரு புத்தகம் வழங்கப்பட்டு வாசிக்கப்படச் சொல்லவேண்டும். கல்விக் கண் தான் ஞானக் கண். என்பது உணரப்பட வேண்டும்.

பொதுமக்களின் அன்றாடத் தேவைகள் நிறைவேறாத வரை இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என நாம் போதிப்பது அர்த்தம் கெட்டதாகவே அமையும் . எனவே நூலகங்கள் நீண்டநாள் வாழ்வைப் புதுப்பிக்கும் என்றால் உடனடி அத்யாவசியத் தேவைகள் வழங்கப்பட்டாக வேண்டும். உணவு, உடை, உறையுள் என்பது போல சுகாதாரமான சமூகத்துக்கு சுத்தமான கழிப்பறைகளும் அத்யாவசியமே.

நூலகங்கள் புதுப்பிக்கப்படவேண்டும். கழிப்பறைகளும் கட்டித்தரப்படவேண்டும். பொது ஜனத்தின் இந்த அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையே. இவை அனைத்தும் நிறைவேறும்போதுதான் நாம் ஒரு சமச்சீரான சமூகத்தைப் பார்க்க முடியும்.


12 கருத்துகள்:

  1. நன்றாகச் சொன்னீர்கள்... விரைவில் நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு அவசியமான பதிவு...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. //நூலகங்கள் நீண்டநாள் வாழ்வைப் புதுப்பிக்கும் என்றால் உடனடி அத்யாவசியத் தேவைகள் வழங்கப்பட்டாக வேண்டும். உணவு, உடை, உறையுள் என்பது போல சுகாதாரமான சமூகத்துக்கு சுத்தமான கழிப்பறைகளும் அத்யாவசியமே.//

    ரொம்பச்சரி.

    பதிலளிநீக்கு
  4. //நூலகங்கள் புதுப்பிக்கப்படவேண்டும். கழிப்பறைகளும் கட்டித்தரப்படவேண்டும். பொது ஜனத்தின் இந்த அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையே. இவை அனைத்தும் நிறைவேறும்போதுதான் நாம் ஒரு சமச்சீரான சமூகத்தைப் பார்க்க முடியும்.//

    நிச்சயமாக..

    விரைவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. டவுன் பஞ்சாயத்துகளிலேயே கழிப்பறை வசதி இல்லை எல்லாமே...ஏனோதானோதான். 2020 ல் இந்தியா வல்லரசு என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு தானோ? மக்களை ஓட்டு எந்திரமாக மட்டுமே பார்க்கும் நடைமுறை ஒழிக்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கழிப்பறைகள் எங்கோ அரசின் மானியத்தோடு கட்டித் தரப்படுவதாகப் படித்தேன். சில சுய உதவிக் குழுக்களும் இதில் முயற்சி எடுத்து வீடுகள் தோறும் கழிப்பறைகள் அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக அறிந்தேன். இது இன்னும் சீக்கிரம் முடுக்கி விடப்பட வேண்டும்.

    - Ippothu ithan avasiyatthai pattri ellorukkum sovathu mattum illamal athai kattiya piraku athai kazhiparaiyaga mattume kattayam payanpaduthavum solla vendum, palar ithai ethavathu vendathathai adithu vaikum roomaga payan paduthikindranar entrum solkintranar.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும், கழப்பறைகள் இந்தியாவில் வராது...காரணம், நம் மக்கள் தெரு இருக்கும் பொது எதுக்கு தனியா கக்க்கூஸ் என்ற கொள்கை...

    பதிலளிநீக்கு
  8. நன்றி தனபால்

    நன்றி மலர்

    நன்றி சாரல்

    நன்றி கோவை2தில்லி

    நன்றி கலாகுமரன்

    நன்றி வெங்கட்

    நன்றி மணவாளன்

    நன்றி நம்பள்கி

    நன்றி ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்வது சரி தான் ,ஆனால் நம் நாட்டில் இன்றும் பலக்கிராமங்களில் வீடு தோறும் தண்ணீர் வசதியில்லையே,எனவே கழிவறைக்கட்டி ,தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய?

    பஞ்சாயத்துகளில் அரசு நிதியில் இருந்து பொது கழிவறை கட்டுகிறார்கள் ,ஆனால் அவர்களும் தண்ணீர் வசதி செய்வதில்லை,மக்கள் சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கழிவறை சென்றால் போதாது என இயற்கை வழியில் செல்கிறார்கள் :-))

    அனைத்து வீடுகளுக்கும் குழாயில் தண்ணீர் வரும் சூழல் வந்தால் தான் வீட்டுக்கு ஒரு கழிப்பறை திட்டம் சாத்தியமாகும்.

    நூலகங்கள் பெருகவும் நிதி ஆதாரம் போதவில்லை. சென்னையில் கட்டப்பட்ட நவீன நூலகத்திற்கு அனைத்து மாவட்ட நூலக வளர்ச்சி நிதியினை எடுத்து செலவழித்துவிட்டார்களாம்,எனவே இன்னும் கொஞ்சகாலத்துக்கு கிளை நூலங்கள் மேம்பாடு நடக்காது எனப்படித்தேன் ,புதுசா நிதி ஒதுக்கினால் உண்டு.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...