வியாழன், 1 நவம்பர், 2012

வீடழகு.

எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.

வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.

நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.


 மழைத் தூரிகை பூசணம்
சூரியக்குடைத் தடுப்புதாண்டி
வரவிட்டதில்லை
ஒரு தேன்சிட்டோ., குருவியோ.

காலைப் பனியும்
மதிய வெய்யிலும்
மாலை வாடையும் நுழைந்து
அள்ளி அள்ளித் தெளித்துக்
கொண்டேயிருந்தது அழகை.

ஆசையோடு மொண்டு
மொந்தையிலிட்டுக் குடித்துக்
கொண்டிருந்தேன் வீடழகை.

நீர்குடித்த ஈரத்தால்
கசிந்து முறிகிறது முதலில்
ஒற்றைச் சிலாகை
வெட்டு வாதமாய்.

வாதத்தில் படுத்தபடியே
பார்த்துக் கொண்டிருந்தேன்
அதன் ஒவ்வொரு துணுக்கும்
உதிர்ந்து கொண்டிருப்பதை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்தது


7 கருத்துகள் :

செய்தாலி சொன்னது…

நெகிழ வச்சுடீங்க மேடம்
வீடழகு சற்று சொயிக்க வைத்தது

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான கவிதை தேனக்கா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அழகு... ரசித்தேன்...

நன்றி...

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மாதேவி சொன்னது…

கவிதைக்கு இறுதிவரிகள் உரம்சேர்க்கின்றன. அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செய்தாலி

நன்றி சாரல்

நன்றி தனபால்

நன்றி மலர்

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...