எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 நவம்பர், 2012

விடுவிப்பு.

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.


குழந்தைகளைப் படிக்கவைக்கும்
வித்தை கைவருகிறது.
அவள் செய்வதை விடவும்
அட்டகாசமாய் செய்வதாய்
மமதை வருகிறது உங்களுக்கு.

இதுவரை வாழ்ந்ததற்கான
பணத்தைக் கணக்கிட்டுத்
தூக்கி வீசுகிறீர்கள்..
அவள் முன்.. அவளைப் போல..

இரவுகளில் உங்கள் கழிவுகளையும்
பகலில் உங்கள் பேச்சுக்களையும்
உள்வாங்கியவள் அவள்.
உங்களிடம் இருக்கும் பணத்துக்கு
அவளை விட இளமையானவர்கள்
கிடைக்கிறார்கள் இரவைக் கழிப்பதற்கு.

உங்களை எதிர்த்துப் பேசினாள் என்றோ
உங்களைப் போல நடக்க முற்பட்டாள் என்றோ
வெறுக்கத் துவங்குகிறீர்கள்.
எந்தச் சொத்துக்களும் அவள் பேரில்
வாங்கவில்லையென பூரிக்கிறீர்கள்.

எல்லாவற்றிலிருந்தும் நீக்கிவிட்டதாக
செய்தித்தாள்களில் பிரகடனப்படுத்துகிறீர்கள்.
உங்களால் நிறைவேற்ற முடியாத
ஸ்தானம்  ஒன்று மட்டும் உறுத்துகிறது
அவள் உங்கள் குழந்தைகளின் தாய் என்பது.

டிஸ்கி:- இந்தக் கவிதை 17, அக்டோபர் 2011 திண்ணையில் வெளிவந்தது.


12 கருத்துகள்:


 1. நமது திருமண சம்பிரதாய நிகழ்விலே முக்கியமானது சப்தபதி . திருமணம் எனும் பந்தத்துக்குள் வர ஒத்துக்கொண்டு
  அக்னியை ஏழு தரம் சுற்றி வருகிறார்கள். சுற்றி வருகையிலே இந்த ஏழு உறுதிகளை ஆணும் பெண்ணும் அளிக்கின்றனர்,
  ஒருவர் இன்னொருவருக்கு. இதைப் படிக்கவும்.

  http://www.bnaiyer.com/Hindu-Special-Articles/d-saptapadi.html
  கிருத்துவ கத்தோலிக்க திருமணங்களிலும் ஏறத்தாழ இதுபோன்ற ஒரு உறுதி மொழிதான் மணமகனும் மணமகளும் சொல்கிறார்கள்.
  அங்கும் டைவர்ஸுக்கு இடமில்லை.

  எந்த விதமான சூழ் நிலைகளிலும். இந்த கால நிர்ப்பந்தங்களுக்கு இந்த கோட்பாடு
  கொடுமையாகத் தோன்றிடினும், விதியைத் தளரவிட்டால் நேரிடும் விபரீ தம் தான் நீங்கள் எழுதியது.


  தற்கால சட்டம் விவாக ரத்துக்கு இடம் தருகிறது எனினும், மனச்சாட்சியின் படி ஒரு உறுதி அளித்தவன் அல்லது
  அளித்தவள் அந்த உறுதியை மீறி செய்கிறாள் எனின் அந்த விசித்திரம்
  காலத்தின் கட்டாயம் , இல்லை, பன்னாட்டு கலாசாரங்களின் பாதிப்பால் விளையும் கோரம் என்றே சொல்லவேண்டும்.

  இனி இவனுடன் அல்லது இவளுடன் இருக்க இயலாது என்ற நிலை பல இல்லங்களில் நடக்கிறது. மறுக்க இயலாது.
  மன உடன்பாடு இல்லை எனின் ஒரு பௌதீக வாழ்வு தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. அதுவும் ஒப்புக்கொள்ள இயலும்.
  இருப்பினும்,
  பிரிவோம் என்ற நிலை வந்து விடின், ஒன்று சொல்லவேண்டும்.

  PART GRACEFULLY AND WITH DIGNITY.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.pureaanmeekam.blogspot.in

  பதிலளிநீக்கு
 2. Ethirkaalam aanum pennum thanithaniyaga vazhum nilamai urivahikondu than ullathu. Appuram enge kuzhanthaigal, avargalin nalan ellam. Kattril than. Athai kaapparatra vendumenil vittu kodukkum ennam aan pen iruvarukkum vendum. Court, katta panchayathu, appavin panakaratham ellaam intha prachinaiyai viraivil theerga mudiyathu. Intro adigam sappathikkum pengal thimir pidithu kanavanai aatti vaipathaivum aankanke kaana mudikirathu. Aangal tharkoli seithu kolvathaiyum kanamudikirathu. Ithu oru nall samuthathin kuri alla. Thiruntha vendiyathu aangal mattum alla pengalum than in tha vizhayathil.

  பதிலளிநீக்கு
 3. இன்னும் சில இடங்களில் இந்த கொடுமைகள் நடைபெறுகின்றன...

  ஆழ்ந்த நல்ல கல்வியால் பெண்களின் நிலை மாறி வருகின்றன... மாறும்... மாற வேண்டும்... மாறியே தீரும்...

  நீங்கள் சொன்னது போல்... இப்படி ஏன் (சேர்ந்து) வாழ வேண்டும்...?

  பதிலளிநீக்கு
 4. இப்போதெல்லாம் இது சர்வசாதாரமான ஒன்றாக இருக்கிறது பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறிவருகின்றனர் இனியும் வருவார்கள்

  பதிலளிநீக்கு
 5. மனதைக் கனக்கச் செய்யும் கவிதை தேனக்கா.

  சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையாய்த் துப்பி விடும் இப்படிப்பட்ட மானுடர்களை என்ன செய்யலாம்..

  பதிலளிநீக்கு
 6. உண்மைதான் சுப்பு சார். நன்றி மிக விரிவான அலசலுக்கும், பின்னூட்டத்துக்கும்.

  நன்றி மணவாளன்.. இன்னொரு கோணத்தில் உங்கள் ஆதங்கத்தை ஏற்கிறேன்.

  நன்றி தனபால். உண்மைதான் இருவரும் புரிந்து கொள்ளும் காலம் வரவேண்டும்.

  நன்றி தொழிற்களம்

  நன்றி சாரல்

  பதிலளிநீக்கு
 7. அவளை திருப்பி அனுப்ப உரிமையுண்டு
  அவளை அப்படியே..........
  அவள் எப்படி வந்தாளோ
  அப்படியே
  அனுப்பும் சக்தி இருந்தால்
  ...............................................

  பதிலளிநீக்கு
 8. manasu valikkirathu....... thenammaa...mannitthukkol. un vaartthaikalin veeryam ennai pesa vaikkirathu.... : ithai aanaaga aanaadhikka unarvukal illaamal solkiren.. naaye un valiyin veeryam kuraiya veandumaa? enakku un kaiyaal konjam visham kodu.. un kobam kuraiyaattum en maranatthil.!

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் வேலைக்கு செல்வதற்கு தகுதியான படிப்பை பெற்றோர்கள் வழங்கி விட்டால் வேலைக்கு சென்ற பிறகு அவளை திருமணம் செய்து கொடுத்தால் இந்த மாதிரி விஷயங்கள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடும் சரிதானே

  பதிலளிநீக்கு
 10. அவரவர் சுயதேவைகளை அவர்கள்தான் செய்து கொள்ளவேண்டும். குடும்பம் என்று வந்தபிறகு
  சேர்ந்தோ, ஒருவரோ அவ்வேலைகளை செய்து
  கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை

  ஒரு கழிவில் மட்டும் உயிர் தோன்றும் என்று எனக்கு தெரியவில்லை

  பிரிதலில் பெரும்பான்மை ஆண்கள், அப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள், இன்னொரு பெண் ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது அடங்கி வாழ பழகி கொள்கிறாள்

  பதிலளிநீக்கு
 11. நன்றி புதுகை செல்வா

  கல்யாண்குமார் ஏன் இப்படி..:(

  நன்றி ராஜி

  நன்றி வேல்முருகன்

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...