தென் தமிழ்நாட்டுச் சமையல் விருந்துகளில் செட்டிநாட்டுக் கைப்பக்குவத்துக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தஞ்சாவூர் தாட்டிலையில் கூட்டுக்கறி, துவட்டல், பச்சடி, மண்டி, மசியல், பிரட்டல், சிப்ஸ், கட்லெட், ஊறுகாய், அப்பளம், கலவை சாதம், அக்கார அடிசில், புலவு, தயிர்ப்பச்சடி, இனிப்பு, முக்கனிகள், கெட்டிக் குழம்பு , சாம்பார், இளங்குழம்பு/தண்ணிக் குழம்பு, சூப், மோர்க்குழம்பு, ரசம், தயிர், பாயாசம் ( பழப் பாயாசம்/பாதாம் கீர் ) என மதியச் சாப்பாடு ப்ரமாதமாக இருக்கும்.
விருந்து மட்டுமல்ல விருந்தோம்பலிலும் செட்டி நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். வீட்டின் வாயிலில் வரவேற்பதில் இருந்து முறைகளில் சடங்குகள் செய்ய விட்டு விடாமல் அழைப்பதில் இருந்து உணவருந்தும் இடத்தில் ஒவ்வொருவரையும் விசாரித்து ஒவ்வொரு பதார்த்தத்தையும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்குப் பிரியத்தோடு பரிமாறுவார்கள். இதற்குப்
301. பந்தி விசாரணை என்று பெயர்.
முதலில் சில ஸ்பெஷல் பலகாரங்களைப் பார்ப்போம்.
302. பாதாம் அல்வா. இனிப்புகளின் அரசன். இன்னும் இங்கே தம்ஃப்ரூட் அல்வா, காரட் அல்வா எல்லாம் ஃபேமஸ்.
303. கல்கண்டு வடை. தீபாவளிப் பலகாரம்.
304. கந்தரப்பம். திருமண வைபவத்தின் முதல் நாள் இரவில் கட்டாயம் இடம் பெறும் இனிப்பு.