எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செட்டிநாட்டு விருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செட்டிநாட்டு விருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2017

உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-


காரைக்குடி வீடுகளில் சுவரில் 801*வரந்தை ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். ஜன்னல்களில் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். 802*ரவிவர்மா ஓவியப்படங்கள் 803*தஞ்சாவூர் ஓவியங்கள் ஃப்ரேமிடப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஒரு வீட்டில் 804*உத்தரத்தில் ஓவியத்தைப் பார்த்தேன்


நடுவில் இருக்கும் சாண்ட்லியரும் மத்த ஓவிய வேலைப்பாடுகளும் அருமையாக இருந்தன. எனாமல் பெயிண்டிங்கா தெரியவில்லை.



வீடுகளின் 805*மேங்கோப்புக்களை ( சீலிங் ) தேக்கு மரத்தால் அமைத்திருப்பார்கள். அந்த மேங்கோப்புகளுக்கு சப்போர்ட்டாக மர உத்தரங்கள் இருக்கும். இந்த உத்தரங்களில் நான்கு ஓவியங்களை மட்டும் ஒரு இல்லத்தில் பார்த்தேன். இன்னும் கூட இருக்கலாம்.


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

தென் தமிழ்நாட்டுச் சமையல் விருந்துகளில் செட்டிநாட்டுக் கைப்பக்குவத்துக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தஞ்சாவூர் தாட்டிலையில் கூட்டுக்கறி, துவட்டல், பச்சடி, மண்டி, மசியல், பிரட்டல், சிப்ஸ், கட்லெட், ஊறுகாய், அப்பளம், கலவை சாதம், அக்கார அடிசில், புலவு, தயிர்ப்பச்சடி, இனிப்பு, முக்கனிகள், கெட்டிக் குழம்பு , சாம்பார், இளங்குழம்பு/தண்ணிக் குழம்பு, சூப், மோர்க்குழம்பு, ரசம், தயிர், பாயாசம் ( பழப் பாயாசம்/பாதாம் கீர் ) என மதியச் சாப்பாடு ப்ரமாதமாக இருக்கும்.

விருந்து மட்டுமல்ல விருந்தோம்பலிலும் செட்டி நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். வீட்டின் வாயிலில் வரவேற்பதில் இருந்து முறைகளில் சடங்குகள் செய்ய விட்டு விடாமல் அழைப்பதில் இருந்து உணவருந்தும் இடத்தில் ஒவ்வொருவரையும் விசாரித்து ஒவ்வொரு பதார்த்தத்தையும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்குப் பிரியத்தோடு பரிமாறுவார்கள். இதற்குப் 301. பந்தி விசாரணை என்று பெயர்.

முதலில் சில ஸ்பெஷல் பலகாரங்களைப் பார்ப்போம்.

302. பாதாம் அல்வா. இனிப்புகளின் அரசன். இன்னும் இங்கே தம்ஃப்ரூட் அல்வா, காரட் அல்வா எல்லாம் ஃபேமஸ்.

303. கல்கண்டு வடை. தீபாவளிப் பலகாரம்.
304. கந்தரப்பம். திருமண வைபவத்தின் முதல் நாள் இரவில் கட்டாயம் இடம் பெறும் இனிப்பு.
Related Posts Plugin for WordPress, Blogger...