பாங்க் ஆஃப் மதுரா
:-
1943 இல் கருமுத்து
தியாகராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி இது. 2 மில்லியன் கஸ்டமர்கள், 200 க்கும்
மேற்பட்ட ப்ராஞ்சுகள், 40 ஏடிஎம்கள் கொண்டு இந்தியா முழுமையும் இயங்கி வந்த வங்கி இது.
2001 இல் பாங்கிங்
ரெகுலேஷன் ஆக்ட் 44 A யின் படி ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது.
வெளியே அனுப்பமாட்டோம்
என்ற உறுதியுடன் கையகப்படுத்தப்பட்ட இதிலிருந்து பலர் 2002 வாக்கில் கட்டாய வி ஆர்
எஸ்ஸில் வெளியேற்றப்பட்டார்கள். இந்நிகழ்வு நிறையக் குடும்பங்களைப் புரட்டிப் போட்டது.
அது ஒரு ரத்த சரித்திரம் அல்லது ரத்தக் கண்ணீர் எனலாம்.
அந்த வங்கியில்
அம்மாவின் பெயரால் ஒரு கணக்கு இருந்தது. ஏன் அதில்தான் என் தந்தை காசாளராகவும் மேலாளராகவும்
பணிபுரிந்து அதன் பின் ஐசிஐசியிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
என் கணவரும் அதில்தான்
பணிபுரிந்தார். 35 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தைப் போஷித்தது அவ்வங்கி என்றால் மிகையில்லை.
மேலும் 1972 வாகில் கிருஷ்ணன் என்ற சேர்மன் பள்ளிப்படிப்பு முடித்த நிறையப் பெண்களுக்கு
வங்கிப் பணி வழங்கியதால் நிறையக் குடும்பங்களில் பெண் திருமணம் எளிதானது. நிறையக் குடும்பங்களை
வாழவைத்தது அவரின் அற்புத உதவி.
