எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகள்.



பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் இருந்திருக்கு. இப்போ எல்லாம் ஈ கார்ட்தான். அதுவும் வாட்ஸப்பில் எக்கச்சக்கமாகக் குவியும்.

ஆனா போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும்போது அந்தக் கார்டை வாங்கி யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்த்து மகிழ்வதில் ஒரு சஸ்பென்ஸும் த்ரில்லும் இருந்ததை மறுக்க முடியாது. நாம் ரொம்ப ஸ்பெஷல் ஆயிட்டமாதிரி ஃபீல் பண்ண வைப்பவை இந்த பர்த்டே கார்ட்ஸ்தான். 

அதுவும் கல்லூரிப் பருவத்தில் அசெம்ப்ளியில் நம்ம பிறந்தநாளை அனௌன்ஸ் செய்து கார்ட்ஸை கலெக்ட் செய்துக்குங்கன்னு ப்ரசிடெண்ட் கத்தையா கார்ட்ஸைக் காட்டும்போது ஏற்படுற உற்சாகத்துக்கு அளவில்லை. பந்தாவாப் போய் வாங்கிட்டு அன்னிக்குப் பூரா கெத்தா அலையிறது J

ரொம்ப முன்னே எல்லாம் தீபாவளிக்கு விதம் விதமா தீபம் கார்ட்ஸும்., பொங்கலுக்குப் பொங்கல்பானை, கரும்பு, விவசாயி, சூரியன் கோலங்கள் ஆகிய கார்ட்ஸும் , புத்தாண்டு கிறிஸ்மஸ் அப்பிடின்னா கிறிஸ்மஸ் தாத்தாவும் மெழுகுவர்த்திகளும் ஸ்பெஷலா இடம் பெற்றிருக்கும்.

அதுவும் பொங்கல் தீபாவளின்னா அநேகமா சாமி பட கார்ட்ஸ்தான். முருகன் ரொம்ப கார்ட்ல இருப்பார். உள்ளே பிரிச்சா ஆறு தாமரையும் முருகனும் இதழ் இதழா எழுந்து வர்றமாதிரி கட் பண்ணி வைச்சிருப்பாங்க. அதுமாதிரி இயற்கைக்காட்சிகள்ல பறவைகள் பூக்களை கட் செய்து தத்ரூபமா நகர்றமாதிரி கட் பண்ணி இருப்பாங்க. அது ஒரு த்ரில் அனுபவம். 

அதே போல் சில மியூசிக் பர்த் டே கார்ட்ஸ திறந்தா அது ஆட்டோமேட்டிக்கா ஹாப்பி பர்த்டே பாட்டெல்லாம் பாடும். ஓராயிரம் தரம் எல்லாரையும் ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே அந்தக் கார்டை மடக்கி மடக்கிப் பிரிச்சு ஹாப்பி பர்த்டே பாடலை ரசிக்கிறது உண்டு.  J
 
மத்த நாட்கள்ல அதிகம் பேசாத அல்லது லெட்டர் காண்டாக்ட் இல்லாத  உறவு முறைகள் கூட இந்த விசேஷ தினங்கள்ல ஒண்ணு கூடி கார்ட் அனுப்பிருவாங்க. ’உங்கள நாங்க மறக்கல’ங்கிறமாதிரி.
அப்பிடி வந்த பல கார்டுகள சேமிக்கல.. இது ஏதோ மிச்சம் மீதி இருந்தத எடுத்துப் போட்டிருக்கேன். J

ஒன்றிரண்டு இதுல திருமண மற்றும் திருமணநாள் வாழ்த்தும், பரிட்சைக்கு வாழ்த்தும், முதல் தரத்தில் வெற்றிபெற்றதுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கு. 

அதுவும் வசந்திக்கா, சுசீலாம்மான்னு என் மனசுக்குப் பிடிச்சவங்க அனுப்புன கார்டைப் பார்த்ததும் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். சுசீலாம்மாவோட பல கடிதங்கள் வேற இன்னிக்குப் படிச்சேன். இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நின்னுச்சுன்னு நினைச்சா திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகள்ல குறைஞ்சிருக்குன்னு தோணுது. 1998 லேருந்துதான் செல்ஃபோனே உபயோகிக்கிறேன்..அதிலும் 2016 லேருந்துதான் செல்ஃபோனில் இண்டர்நெட் பார்க்கிறேன். இப்போ ஒரு செகண்ட்தான். எல்லாரையும் ரீச் பண்ணிடலாம். ஆனா அப்போ எல்லாமே லெட்டர்தான். J






இந்தப் ஸ்பெஷல் அக்கேஷனல் வாழ்த்துக்களை என் நாத்தனார்கள், கொழுந்தனார்கள் & அவர்கள் குடும்பத்தினர், மாமனார், மாமியார், தோழிகள் ( மீனா, மீனாக்ஷி, உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) , சுசீலாம்மா, வசந்திக்கா, எனது மாமா ( மலேஷியாவிலிருந்து மற்றும் உறவினர்கள் அனுப்பி இருக்கிறார்கள். !

வியாழன், 14 நவம்பர், 2013

புஜ்ஜியும் பொம்மைகளும். :-

1. அட்டைப்பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்..
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை..

சனி, 17 அக்டோபர், 2009

மத்தாப்பூ

'""என் வலைத்தளத்துக்கு வருகை தந்து என்னை
ஊக்குவித்தும் தவறுகளைத் திருத்தியும்
ஆலோசனைகள் கூறியும் ஆற்றுப் படுத்தும்
அன்பு உள்ளத்தினர் அனைவருக்கும் என் மனம்
கனிந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ...... '""

தீப ஒளித்திருநாளில்
உள்ளமெல்லாம் பெருந்தீபம்
மகர ஜோதியும்
அண்ணாமலைஜோதியுமாய் ...
Related Posts Plugin for WordPress, Blogger...