எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகள்.



பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் இருந்திருக்கு. இப்போ எல்லாம் ஈ கார்ட்தான். அதுவும் வாட்ஸப்பில் எக்கச்சக்கமாகக் குவியும்.

ஆனா போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும்போது அந்தக் கார்டை வாங்கி யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்த்து மகிழ்வதில் ஒரு சஸ்பென்ஸும் த்ரில்லும் இருந்ததை மறுக்க முடியாது. நாம் ரொம்ப ஸ்பெஷல் ஆயிட்டமாதிரி ஃபீல் பண்ண வைப்பவை இந்த பர்த்டே கார்ட்ஸ்தான். 

அதுவும் கல்லூரிப் பருவத்தில் அசெம்ப்ளியில் நம்ம பிறந்தநாளை அனௌன்ஸ் செய்து கார்ட்ஸை கலெக்ட் செய்துக்குங்கன்னு ப்ரசிடெண்ட் கத்தையா கார்ட்ஸைக் காட்டும்போது ஏற்படுற உற்சாகத்துக்கு அளவில்லை. பந்தாவாப் போய் வாங்கிட்டு அன்னிக்குப் பூரா கெத்தா அலையிறது J

ரொம்ப முன்னே எல்லாம் தீபாவளிக்கு விதம் விதமா தீபம் கார்ட்ஸும்., பொங்கலுக்குப் பொங்கல்பானை, கரும்பு, விவசாயி, சூரியன் கோலங்கள் ஆகிய கார்ட்ஸும் , புத்தாண்டு கிறிஸ்மஸ் அப்பிடின்னா கிறிஸ்மஸ் தாத்தாவும் மெழுகுவர்த்திகளும் ஸ்பெஷலா இடம் பெற்றிருக்கும்.

அதுவும் பொங்கல் தீபாவளின்னா அநேகமா சாமி பட கார்ட்ஸ்தான். முருகன் ரொம்ப கார்ட்ல இருப்பார். உள்ளே பிரிச்சா ஆறு தாமரையும் முருகனும் இதழ் இதழா எழுந்து வர்றமாதிரி கட் பண்ணி வைச்சிருப்பாங்க. அதுமாதிரி இயற்கைக்காட்சிகள்ல பறவைகள் பூக்களை கட் செய்து தத்ரூபமா நகர்றமாதிரி கட் பண்ணி இருப்பாங்க. அது ஒரு த்ரில் அனுபவம். 

அதே போல் சில மியூசிக் பர்த் டே கார்ட்ஸ திறந்தா அது ஆட்டோமேட்டிக்கா ஹாப்பி பர்த்டே பாட்டெல்லாம் பாடும். ஓராயிரம் தரம் எல்லாரையும் ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே அந்தக் கார்டை மடக்கி மடக்கிப் பிரிச்சு ஹாப்பி பர்த்டே பாடலை ரசிக்கிறது உண்டு.  J
 
மத்த நாட்கள்ல அதிகம் பேசாத அல்லது லெட்டர் காண்டாக்ட் இல்லாத  உறவு முறைகள் கூட இந்த விசேஷ தினங்கள்ல ஒண்ணு கூடி கார்ட் அனுப்பிருவாங்க. ’உங்கள நாங்க மறக்கல’ங்கிறமாதிரி.
அப்பிடி வந்த பல கார்டுகள சேமிக்கல.. இது ஏதோ மிச்சம் மீதி இருந்தத எடுத்துப் போட்டிருக்கேன். J

ஒன்றிரண்டு இதுல திருமண மற்றும் திருமணநாள் வாழ்த்தும், பரிட்சைக்கு வாழ்த்தும், முதல் தரத்தில் வெற்றிபெற்றதுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கு. 

அதுவும் வசந்திக்கா, சுசீலாம்மான்னு என் மனசுக்குப் பிடிச்சவங்க அனுப்புன கார்டைப் பார்த்ததும் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். சுசீலாம்மாவோட பல கடிதங்கள் வேற இன்னிக்குப் படிச்சேன். இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நின்னுச்சுன்னு நினைச்சா திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகள்ல குறைஞ்சிருக்குன்னு தோணுது. 1998 லேருந்துதான் செல்ஃபோனே உபயோகிக்கிறேன்..அதிலும் 2016 லேருந்துதான் செல்ஃபோனில் இண்டர்நெட் பார்க்கிறேன். இப்போ ஒரு செகண்ட்தான். எல்லாரையும் ரீச் பண்ணிடலாம். ஆனா அப்போ எல்லாமே லெட்டர்தான். J






இந்தப் ஸ்பெஷல் அக்கேஷனல் வாழ்த்துக்களை என் நாத்தனார்கள், கொழுந்தனார்கள் & அவர்கள் குடும்பத்தினர், மாமனார், மாமியார், தோழிகள் ( மீனா, மீனாக்ஷி, உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) , சுசீலாம்மா, வசந்திக்கா, எனது மாமா ( மலேஷியாவிலிருந்து மற்றும் உறவினர்கள் அனுப்பி இருக்கிறார்கள். !

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அக்கா அம்மாவானாள் !

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு வகையான வாழ்த்துகள். முன்பு எல்லாம் அக்கா என வாழ்த்துவார்கள். இந்தச் சில வருடங்களில் சிலர் அம்மா என்றும் வாழ்த்துகின்றார்கள்.

இனிமையான வாழ்த்துகள் கண்டு மனம் நெகிழ்ந்த தருணம் அதை வலைப்பூவிலும் பதிவு செய்யும் எண்ணம் வந்தது.

உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துகளும் சுமந்து இதயம் திகைத்து நிற்கிறது. நட்பெனும் பேறு பெற்றேன். சிரம்தாழ்த்தி ஏற்கிறேன். என் பிறந்தநாளில் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றி. . வாழ்க வளமுடன்.
அன்பரே ! வணக்கம் . உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! “ அறிவைத் தேடிக்கொண்டே இரு! அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு ! சாதியை உதறு ! மதத்தை மற! மனிதனை நினை! உழைப்பை நம்பு! அன்புடன், சு.பொ.அகத்தியலிங்கம்

Subramaniam Chupoo

அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Advance birthday wishes

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
நலமா .? எப்படி இருக்கிறீர்கள் .?.உங்கள் அன்பு
தோய்ந்து நானும் நலம் அம்மா...

உங்கள் எழுத்துப்பயணத்தில் எங்கேனும் இளைப்
பாற வேண்டுமெனில் எங்கள் இதயம் இருக்கிறது
அம்மா.. அருவி போல அணைத்து ஓடி கூழாங்
கற்களாய்க்கிடந்த எங்களை ( நான்., உமாமகேஸ்.,
சிகப்பி., இன்னும் பலர்) சாளக்கிராமமாய்
மாற்றினீர்கள்...கனவுச் சிறகு பொருத்தி திசை
யற்றுத்திரிந்த பறவைகளான எங்களை புலம்
பெயர் பறவைகளாக்கி பெயர் பெறும் பறவை
களாக்கினீர்கள்..நிமிர்ந்த நன்னடை., நேர்கொண்ட
பார்வை.,கம்பீரக்குரலால் எங்களை ஆட்சி செய்த
பேரரசி ...!!!குறைவொன்றுமில்லை அம்மா.
உங்களின் நிறைவான அன்பில் நான் ...!!!
.