எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 அக்டோபர், 2009

மத்தாப்பூ

'""என் வலைத்தளத்துக்கு வருகை தந்து என்னை
ஊக்குவித்தும் தவறுகளைத் திருத்தியும்
ஆலோசனைகள் கூறியும் ஆற்றுப் படுத்தும்
அன்பு உள்ளத்தினர் அனைவருக்கும் என் மனம்
கனிந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ...... '""

தீப ஒளித்திருநாளில்
உள்ளமெல்லாம் பெருந்தீபம்
மகர ஜோதியும்
அண்ணாமலைஜோதியுமாய் ...

ஊரனந்தம் பெற்ற
பேரனந்தம் என்றிருந்தேன்
என்னருகே நீயிருந்தாய்....

தகப்பனாய் சகோதரனாய்
வகுப்புத்தோழனாய் நண்பனாய்
காதலனாய் கணவனாய் ...

ஏன் வழித்துணைவனுமாய்
தெய்வமாகவும் நீ...
எல்லாரூபத்திலும்...

நான் டால்பினைப் போல
எனக்கான உலகத்தில்
கவலையேதும் அற்று
மிதந்து திரிந்து விளையாடி
மகிழ்ந்திருந்தேன் ....

என் கவலைகளை எல்லாம்
உன் தோளில் நீ சுமந்து
என்னைப் பேரன்பால்
பெருஅரணாகப் பாதுகாத்து...

நான் துயிலும் போது கூட
என் மனம் எங்கும் புன்சிரிப்பு
மத்தாப்பாய்....

புஸ்வாணம் பெருகி எழுந்து
ஒளிக்கற்றை வானவில்லாய்...
மேகம் உடைத்துக்
கிழித்த மழை....

என் மன அணையில்
உனக்கான அன்பு வெள்ளம்
தளும்பிக் கொண்டே..

என் வாழ்வெங்கும்
உனக்குமட்டுமேயான
என் பேரன்பு உனைச் சூழ்ந்து ....

9 கருத்துகள்:

 1. அன்புச் சகோதரிக்கு

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். வாழ்க்கையில் எல்லாம் நலமும், வளமும் பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. என் வாழ்வெங்கும்
  உனக்குமட்டுமேயான
  என் பேரன்பு உனைச் சூழ்ந்து ....

  பின்னிட்டீங்க

  வாழ்த்துக்கள்.

  எனது கணினி கண்திறக்க மறுத்ததால் இரண்டு நாட்களாக அவதியுருகிறேன்.

  சரியானதும் வந்து பொறுமையாய் பார்க்கிறேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 4. தேனு என்றென்றும் இதே சந்தோஷத்துடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...