எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 12 அக்டோபர், 2009

லில்லிப்பூ

ப்ளூ க்ரீன் அல்கே
போல் தண்ணீருக்குள்...
உடல் மறைத்த
லில்லிப் பூவாய்...

வெண்மையாய்க் குவிந்து
மென்விரிந்த முகத்துடன்...
கருப்புச் சிப்பியில்
வெண்முத்தாய்...

ராப்லேக்ஸியா
பூப்போன்ற
பெரிய கண்களுடன்
அராபிய அழகே...

பாலைவனம் தோறும்
நீ நடக்க ...
நான் உன் பின்னே
மணல் காற்றாய்,,,

பேரீச்சைச் சாறாய்
நீ இனிக்க...
சிவந்த கன்னக்கதுப்பில்
சாக்லேட் காஸ்மாஸ் போல்
வனப்பின் வாசம்...

அரேபியன் கோப்ரா போலும்
மணல் மீன் போலும்
உன் பின்னே அலைந்து
திரிந்து நான்...

தொன் படிமங்களும்
பாறைப் படிவங்களும்
டைனோஸர் எலும்புக்கூடுகளும்
செறிந்து கிடந்த
மியூஸியத்துக்குள்ளே....

உயிர்ப் பதுமையாய் நீ ...
குளிரூட்டப் பட்ட
காற்றில்....

யுகங்களாய்க்
காத்து இருந்து
ஏங்கித்தவித்த நான்
எங்கெங்கோ சுற்றி....

ஷவர்மாவுடன்
ஒரத்து டேபிளில்
ஒதுங்கி...

சிறிது தூரத்தில்
பாஸ்தாக்களை போர்க்கில்
உன் குழந்தைகளுக்கு
ஊட்டியபடி நீ,,,,

மணலை உதறி
மனதையும் உதறி
எழுந்து நடந்தேன்....

16 கருத்துகள்:

 1. //மணலை உதறி
  மனதையும் உதறி
  எழுந்து நடந்தேன்...//

  நல்லாயிருக்குங்க

  பதிலளிநீக்கு
 2. ஒற்றைப் பூவையாவது விடேனடி தோழி எனக்காக.
  அரேபியப்பூ,பிலிப்பைன்ஸ் பூ,சைனிஸ் பூ என்றே தொடர்கிறாய்.பூவுக்கும் பேசத் தெரிந்தால் பாடிவிடும் புன்னகைப் பூ உன்னைப் பற்றியும்.

  பதிலளிநீக்கு
 3. என்னங்க நேசமித்ரன் மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நாங்கெல்லாம் ரொம்ப அறிவு கம்மியானவங்க. கொஞ்சம் பாத்து எழுதுங்க.

  நீலபச்சைபாசி, ராப்லேக்சியா, காஸ்மாஸ், ஷவர்மா சயின்ஸ் பின்றீங்க.

  நானெல்லாம் எழுதரதா வேண்டாமா ?

  பூக்களின் ராணி என்ற பட்டதை அளிக்கிறேன்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. விஜய் சத்தமிலாமல் இன்னொரு வலைத்தளம்....
  நல்லது நண்பரே மிக அருமையான முயற்சி

  புற்று நோய்க்கு பூச்சி மருந்துகள் காரணம் என்பதை அறிந்தேன்

  மிக உபயோகமுள்ள நல் முயற்சி

  பாராட்டுக்கள் விஜய் உங்கள் அகசூலின் மகசூலுக்கு


  உங்கள் பாராட்டுக்கு நன்றி விஜய்

  பதிலளிநீக்கு
 5. //மணலை உதறி
  மனதையும் உதறி
  எழுந்து நடந்தேன்.... //

  நல்லாயிருக்குங்க‌

  பதிலளிநீக்கு
 6. Blogger thenammailakshmanan said...

  //காலப்புள்ளிகள் சாட்சியமாய்
  எத்தனை சில்லாய்
  உடைந்து கிடக்கிறேன் பார்.
  அத்தனையிலுமே உன் விம்பம்.
  நீ இல்லை என்பது தெரிந்தும்
  ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

  முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
  எட்டாத பழம் புளிக்கும்
  என்றுணர்ந்த நரியை விட
  மோசமாய் !!!//

  பின்னீட்டீங்க ஹேமா

  யாரை மனசை யார் முன்மொழிவது ஹேமா

  என் மனமும் மனசாட்சியும் நீதானா


  trhanks hema for ur comments

  பதிலளிநீக்கு
 7. //தேனம்மைலட்சுமணன்..யாரை மனசை யார் முன்மொழிவது ஹேமா

  என் மனமும் மனசாட்சியும் நீதானா//

  தோழி இப்போதான் மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது.
  5 நிமிடங்கள் கூட இல்ல.எங்கே தேனுவைக் காணோமே என்று.அதே கணம் நீங்கள் என்னிடம் இருப்பது உண்மையில் என்ன நடக்கிறது இங்கே என்பதுபோல.சுகம்தானே தேனு.
  பயண அலுப்புகள் எப்பிடி !

  பதிலளிநீக்கு
 8. அருமை புதிய ஒப்பீடுகள் அழகான குறியீடு ரசிக்க வைக்கிறது பூ
  வணக்கம் விஜய் (கவிதைகள் )

  பதிலளிநீக்கு
 9. Its a great honour to me Nesamithiran

  Am I writing like U?

  Nice Vijay and Thanks for ur comments

  பதிலளிநீக்கு
 10. பூக்க்களைப்பத்திய கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அக்கா!!

  பதிலளிநீக்கு
 11. Hema naam iruvarum unarval ondruthaan

  udalthan vevveru idaththil iyangukirathu

  niraiya murai naanum ungal irupai unarnthu irukiren Hema

  பதிலளிநீக்கு
 12. நன்றி ஞானசேகரன், ஹேமா, விஜய் இயற்கை, நேசன்,மேனகா, முனியப்பன் சார்.

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...