தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்.
தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்
வெப்சைட் மூலமா வெற்றிகரமா மசாலா விற்க முடியுமா.? அதுவும் இங்க இல்ல ஐக்கிய பிரிட்டன்
ராஜ்யத்தின் எரித் என்னும் இடத்திலிருந்து ..! வித்யாசமா வடிவமைச்சுக் கொடுத்தா, தரமா
இருந்தா, தாராளமா விற்க முடியும் என்கிறார் திருமதி சீதா தேனப்பன். ! அறுபட்டைக் கண்ணாடிச்
சாடிகளில் அணிவகுக்கும் மசாலாக்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பார்க்கும்போதே
அவற்றின் மணமும் சுவையும் நாசியையும் சுவை மொட்டுக்களையும் ருசிகரமாகத் தாக்குகின்றன.
