பாடுவார் முத்தப்பர் விருது பெற்றுள்ளேன்.
நாளை *தை வெள்ளி* *நேமம் கோவிலில்* தெய்வப்புலவர்
*பாடுவார் முத்தப்பர் விருது* வழங்கும் விழா, *திருக்கல்யாணம்* , *திருவிளக்கு பூஜை*
___________________
நாளை *24/01/25* வெள்ளிக்கிழமை காலை *9.30* மணிக்கு நேமம் கோவிலில் அமைந்துள்ள *பாடுவார் முத்தப்பருக்கு* சிறப்பு *அபிஷேகமும்* அதனைத் தொடர்ந்து நேமம் *நகர விடுதி* வளாகத்தில் ராங்கியம் *வி.என்.சிடி.குடும்பத்தினர்* சார்பாக *6* ம் ஆண்டு *திரு.வி.என்.சிடி.வள்ளியப்பன்* அவர்கள் தலைமையில் *தெய்வப்புலவர் பாடுவார் முத்தப்பர் விருது* பெண் எழுத்தாளர் *திருமதி.தேனம்மை லெஷ்மணன்* அவர்களுக்கு சொல்லோவியர் பொற்கிழி கவிஞர் பேராசிரியர் *சொ.சொ.மீ.சுந்தரம்* ஐயா அவர்கள் வழங்கவும் தமிழ்செம்மல் கோவில் மாமணி டாக்டர் *வ.தேனப்பன்* அவர்கள் *வாழ்த்துரை* வழங்க உள்ளார்கள்.
மாலை *4* மணி அளவில் *திருக்கல்யாணம்* அதனைத் தொடர்ந்து மாலை **6** மணி அளவில் *திருவிளக்கு பூஜை* நடைபெறும்...
அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்..
அழைப்பிதழும்
மேடை பின்னணித் திரையும் நண்பர்கள், உறவினர்களின் புகைப்படங்களும் கருத்துக்களும்.
**வாழ்த்துகள்


** Wow... congratulations Achi....wishing you to get more accolades in the coming days
**Dr M S Shri Lakshmi: வாழ்த்துகள் தேனு
**இதுபோல் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தேனம்மை ஆச்சி ஜெயம்கொண்டான்.
**Dr Soma Valliappan: சிறப்பு.
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள்.
சோம வள்ளியப்பன்
**தங்களைத்
தேடி வந்துள்ள
பாடுவார் விருதுக்கு
தகுதியான
ஆளுமை நீங்கள்!
உங்களின் விருதுப் பட்டியலில் மற்றுமொரு மதிப்புமிகு விருது!
வாழ்த்துக்கள்!
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா,
19-01-2025.
**KalyaniSridhar: அருமை ம்மா ! மனம் மகிழ்கிறது ! வாழ்த்துகள் !
** Visalakshi Palaniappan: ரொம்ப சந்தோஷம்.வாழ்த்துகள் தேனம்மை
**Kanagu Aachi: வாழ்த்துக்கள்.மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
**மனமார்ந்த பாராட்டுக்கள்
**மனமார்ந்த வாழ்த்துகள்
**Mubeen Sadhika: வாழ்த்துகள் பா
** மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனும்மா
**Valthukkal to Thenammai Lakshmanan
**மகிழ்ச்சி. வாழ்த்துகள்
**ARUN Writer: பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
**சிறப்பு.வாழ்த்துக்கள் ஆச்சி!
**Vazhthukkal akka
**வாழ்த்துக்கள் தேனு
**Congratulations Achi.
**Congrats Anni
**Durai Arivazhagan: வாழ்த்துக்கள்
**தென்றல் சாய்: பாராட்டுகள் அக்கா
**வாழ்த்துகள் ஐயை
**அருமை வாழ்த்துக்கள்
**வாழ்த்துகள் ஆச்சி
**Valli Narayanan: வாழ்த்துக்கள் ஆச்சி
**பாடுவார் விருது பெற்றமை பெருமைக்குரியது. பாராட்டுக்கள்.
இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
கரு.முத்தய்யா.
**வாழ்த்துகள்
**அருணா: அருமை தேனு. வாழ்த்துகள்
** Congratulations THENU.
**Sala Selam: Very Proud Of You Dear Aithiyandi...
**Mayil Soundaram: Congratulations achi.
**விருது பெற தகுதி நிரம்பப் பெற்றுள்ளாய் தேனு. மனமார்ந்த வாழ்த்துகள்.
** Congratulations
Keep it up and thank MrLetchumanan for the support
**Convey the message to Thenammai Letchumanan
சரோஜா ஆச்சி
**வர கவி பாடுவார் முத்தப்ப செட்டியார் அவர்களின் நல்லாசியுடன், அவரது திரு
பெயரால் விருது பெற்ற தேனுவின் தமிழ் புலமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... குமார் ரேடியோஸ் முருகப்பன்
**பெரிதுவக்கிறேன்...
**வாழ்க,வளர்க..
என் மகள்..சீரும் சிறப்புமாய்!
**Congratulations anni! You’re reaching so many heights!
**அருமை congrats to Thenu Aythiandi
**ஆச்சி யின் தமிழுக்கு அஸ்திவாரம் தாங்களின் எழுத்துக்கள் தானே
பெரியம்மா பெரியப்பா வின் பாசம்
அய்தானின் பொருமை
பிள்ளைகளின் சப்போர்ட்
இன்று ஆச்சிக்கு விருது
**அண்ணன் ஆவலுடன் பார்ப்பது நன்றாக இருக்கிறது. தகுதி வாய்ந்த எழுத்தாளர் நமது தேனு என்பது மிகப் பெரிய பெருமை. மனமார்ந்த வாழ்த்துகள் தேனு.
**உன் ஒளியில் நான் மின்னுகிறேன்
**பாடுவார் முத்தப்பர் விருது பெறும் எங்கள் தேனம்மைக்கு இனிய வாழ்த்துகள்
**நேமம் எங்க நாத்தனார் கிராமத்தில் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
**மென்மேலும்,இன்னும் மேலான பரிசுகள் பெறத்தகுந்தவர் நீங்கள்.வாழ்த்துக்கள்
**மா கவி பாடுவார் முத்தப்பர் விருது பெற்றது கலைவாணியின் அருளே.பொற்கிழி கவிஞர் சோ.சோ.மீ
அய்யா திருக்கரங்களில் உயரிய விருது பெறுவது தங்களது
எழுத்து திறமைக்கு
கிடைத்த சிறந்த வெகுமதி.மென்மேலும்
பல விருதுகள் பெற
மனமார்ந்த வாழ்த்துகள்
**நான் கொஞ்சம் வீடியோ எடுத்துருக்கேன்.யூட்யூப்ல போடணும்.மகளோட யூட்யூப்.அவளுக்கனுப்பி அவ எடிட்செய்து போடணும்.கொஞ்சம் டைம் ஆகும்
https://youtu.be/SjvBRuSnPn0?
---பேரன்பும் பெருமகிழ்ச்சியும் நன்றியும் ஆச்சி.
**I had a huge amount of very positive feedback from all over. The gen feeling is that this was an எழுச்சி function and this kind of crowd was never gathered in Nemam even for Sandhis and other functions. A lot of people appreciated the overall function.
I hope Mr Lakshmanan, your Father and mother and your FIL enjoyed it too.
**சும்மாவா தனவணிகன் டீம், முத்தப்பர் டீம், நேமம் டீம் மற்றும் ஊர் ஊராக ஃப்ளெக்ஸ் போர்ட்ஸின் மகிமை. இதை எல்லாம் சாத்தியமாக்கியது.
**மதுரை நகரத்தார், லேடீஸ், நேமம் பள்ளிப் பிள்ளைகள், நேமம் கோயிலார்,என் என் எல் சர்வீஸ் இன்னும் விழாவைச் சிறப்பித்த பலரும் பொழிந்த பொன் மழையில் நானும் நனைந்து வைர மங்கையானேன்
**ஆச்சி,
பாடுவார் முத்தப்பர் விருதுபெற்ற தஙகளு க்கு எங்களது. மேலும் சிறக்க வாத்துக்கள்
**அண்ணன்,
பாடுவார் முத்தப்பர் விருதுபெற்ற தங்கள் மகள் தேனம்மை லக்ஷ்மணன் க்கு எங்களது வாத்துக்களை தெரிவிக்கவும்.
** Congratulations... You
தேனு விருது வாங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்
**அண்ணன் மிக மிக மகிழ்ச்சி. ஆச்சியிடமும், தங்கள் மகளிடமும் எங்கள் சந்தோசத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறோம். தமிழ் இலக்கியத்தில் மேன்மேலும் உயர்ந்து, பல பட்டங்களையும், பேரும் புகழும் பெற்று, நல்ல உடல் நலமும் வளமும் பெற எல்லாம்வல்ல எம்பெருமான் கருணையை வேண்டிப் பிரார்த்திக்கிறோம். "ஈன்ற பொழுதில் தன் மக்களை சான்றோன் எனக் கேட்ட பெற்றோர் " என்பதற்கு இணங்க, தாங்கள் நன் மக்களைப் பெற்று நன்றாக வளர்த்திருக்கின்றீர்கள். தாங்கள் இருவீரும் உடல் நலமும் வளமும் பெற்று தங்கள் ஆன்மீகப் பயணம் மேன் மேலும் வளர அருள்மிகு வைத்தியநாத சுவாமி உடனாய தையல்நாயகி அம்பாளைப் பிரார்த்திக்கிறோம்.
** "பாடுவார்
முத்தப்பர்
விருது!"
வழங்கும்
விழா!!!
++++++++++++++++++++++
ஏகலைவன்:
வ.தேனப்பன்
பாடுவாருடைய
பெருமைகளைப்
பாடப் பாட
வாய் இனிக்கும் !
தேனினும் இனிய
அவர் கவியைப்
படிக்கப் படிக்க
மனம் இனிக்கும் !!
திண்ணைப் பள்ளியில்
படித்தாலும்
திருவருட் பா போல்
கவி பொழிந்தார்!
எண்ண இனிக்கும்
காவியமாய்
ஜெயங்கொண்டார் சதகத்தை
நமக்களித்தார்!
நூறு பாடல்கள்
ஒவ்வொன்றிலும்
நூதனமாகப்
பழமொழியைச்
சேர்த்து வழங்கிய
பேரழகை
சிகரம் என்றே
நான் புகழ்வேன்!!
ஆசு கவி என்ற
பட்டத்திற்கு
அற்புதச் சான்று
பாடுவாரே !
மேலாய் மழை பொழியப்
பாடல் சொன்னார்!
"போதும் !"என்றதும் மழை
நிற்கப் பாடினார் !!
அதிசயம் மிக்க
பேராற்றல்
அருட்கவி ஐயா
ஒருவரிடமே
இதிகாசம் போல்
பெருகக் கண்டோம்!
இவர்களுக்கு
ஈடு இணை
எவருமில்லை !!
குன்றக்குடி முருகன்
பதிகமுடன்
கோமகன் பழனி
முருகனுக்கும்
பண்புறு பதிகம்
பாடியுள்ளார்!
பாற்கடல் போல் அவை
தித்திக்குமே!!
நேமம் கோயிலில்
சிலை நாட்டி
நீடு புகழ் பெருக
விருது அளிக்கும்
"திருப்பணிச் செல்வர்"
வி. என். சிடி.
வள்ளியப்பர் தலைமை
ஏற்கின்றார்!!!
இந்த ஆண்டு
பாடுவார் விருதைப்
பெறுபவர்
தேனம்மை
லெட்சுமணன் தான்
பல சாதனைகள்
புரிந்துள்ளதால்
விருதுக்கு விருதாய்
அமைந்துள்ளார்!
சொல்லோவியராம்
சொ.சொ.மீ.
சுந்தரனார் ஐயா
விருதை வழங்க ....
என்னை வாழ்த்துரை
வழங்க அழைத்தார்.
நீங்களும் அவசியம்
வந்து வாழ்த்துவீர்!!!
**என் மகன் வெங்கட்டின் சேனலில்.
https://www.youtube.com/watch?v=QCfNOGR0s-g
நன்றி அனைவருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)