எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையைப் பார்த்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு அசதியுடன் வந்து சேர்ந்தோம். 

ஏழாம் நாள் இரவு ஞாயிறன்று இரவு. மிக அருமையான இரவு உணவை உண்டுவிட்டு உறங்க இந்த ஹோட்டலுக்கு வந்தோம். பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளபடியே பெஸ்ட் ஹோட்டல்தான்.





ஃபயர் எக்ஸ்டிங்ஷருடன் மிக நீளமான காரிடார்கள். யூரோப் டூர் முழுவதிலும் நாங்கள் பார்த்ததிலும் தங்கியதிலும் மிக மிக வசதியான ஹோட்டல் மட்டுமல்ல, இங்கே உள்ள அறையில் சமைத்துத் துவைத்துக் குடித்தனமே செய்ய முடியும். அதற்கு ஏற்ற பொருட்கள் அனைத்துமே உள்ளன. 




நால்வர் அமரும் டைனிங் டேபிள். கண்ணாடி மேசை கொள்ளை அழகு. 




இங்கே ஹாலிலேயே ஒரு சோஃபாவும் ஒரு குட்டி பெட்டும். பெட்ரூமில் டபிள் பெட். 

இதுதான் கிச்சன். அஹா. மேலே ஓவன். கப்போர்ட்ஸ், எலக்ட்ரிக் சிம்னி. கீழே இண்டக்‌ஷன்/ ஹாட் ஸ்டவ். பக்கத்தில் வாஷ்பேஸின். 




இதுதான் மாஸ்டர் பெட்ரூம். இந்த புகைப்படங்களில் இருக்கும் மாடல்/நடிகை யாரெனத் தெரியவில்லை. 

படுக்கைகளில் தலையணையாக சதுரத் திண்டுகள். குளித்தவுடன் துடைக்க துவாலைகள். 




நால்வர் அமரும் டைனிங் டேபிள் போக இது சர்வீஸ் டேபிள். இதில் எலக்ட்ரிக் கெட்டில் அதனருகே பால் குட்டி டப்பாக்களில், இன்ஸ்டண்ட் காஃபி பவுடர், டீ பேக்ஸ், சுகர் சாஷேக்கள். தண்ணீர் பாட்டில். 




கிச்சன் மேடைக்குக் கீழே டிஷ்வாஷர் & ஃப்ரிட்ஜ். ! முழுவதும் மரத்தரை. தண்ணீர் எல்லாம் போட்டு வீணாக்கிவிடக்கூடாது. 




இது பாத்ரூமேதான் !!!

இங்கேயும் டவல்கள், டிஷ்யூக்கள், ஆளுயரக் கண்ணாடி. 




எதிர்த்தாற்போல் குளியல்தொட்டி. இதற்கு ஹாஃப் கண்ணாடிக் கதவு. உள்ளே ஹாண்ட் ஷவரும் உண்டு. ரைட்டில் திருப்பினால் குளிர் நீர், லெஃப்டில் திருப்பினால் வெந்நீர்.




துவாலை போடும் கைப்பிடி & துணி காயப்போடும் ஸ்டாண்ட் !




இங்கு டாய்லெட் மட்டும்தான். இத்தாலி ஹோட்டல்கள் போல் இரண்டு டாய்லெட் சீட் இல்லை. டிஷ்யூவிலேயே சுத்தம் செய்து கொள்ளணும். 

அப்படியே குளித்து விட்டு வந்துவிடலாம்.




மூவபிள் ஷேவிங் கண்ணாடி. :) 

கீழே எலக்ட்ரிக் ஷேவர் & நாம கொண்டு போன மக்.. ( டாய்லெட்டில் தண்ணீர் பிடித்து உபயோகிக்கக் கைவசம் கொண்டு சென்றிருந்தோமாக்கும் :)




பாத்ரூமுக்கு வெளியே வந்ததும் ட்ரெஸ் செய்துகொள்ள ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி. நம்ம லக்கேஜுகள். 




கிச்சன் மேலேயே காஃபிக் கோப்பைகளும் மதுக்கோப்பைகளும் :) 




இந்த ஹோட்டலின் இன்னொரு சிறப்பம்சம். பெட்ரூமில் இருந்து வெளியே உள்ள தோட்டத்து லானுக்குச் சென்று அமர்ந்து கொள்ளலாம். இரவில் குளிரியது. 

காலையில் செம வெய்யில். வெளியே சேர் எல்லாம் போட்டிருந்தார்கள்.  ஒரு இனிய சர்ப்ரைஸ்தான். பெரியவர்கள் வந்து தங்கி சமைத்து சாப்பிட்டுச் செல்லலாம். :) 




காலையிலும் அதே நீளக் காரிடார்களைக் கடந்து ப்ரேக்ஃபாஸ்டுக்கு சென்றோம். 

காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட். 




ரிஷப்ஷனுக்கு முன்னால் இந்த ஃபஸ்பால் விளையாடலாம். !  


ரிஸப்ஷனில் வெயிட் செய்ய சோஃபாக்கள்.

முதல்நாள் இரவு உணவு. ரொம்ப ருசியான வட இந்திய உணவு. சப்பாத்தி, பாசுமதி அரிசி சாதம், சிக்கன் க்ரேவி, தால், வெங்காயம், காய்கறிகள், ஊறுகாய், அப்பளம், ஏதோ ஒரு பாயாசம். செம டேஸ்ட்.

இந்தியர்கள் உணவு வகைகள் கறிகள் நிரம்பியது என்பதால் டைனிங் ஹால் எல்லாம் வெளியே தனித்து இருக்கின்றன. இங்கும் முன் பக்கம் தனியே இருந்தது மட்டுமல்ல கிச்சன் கூட அதன் பக்கமாக தனியாக இருந்தது !!!


மறுநாள் காலை உணவு.

ஆரஞ்ச் ஜூஸ். ப்ரெட் டோஸ்ட், பட்டர். ஸ்ட்ராபெர்ரி ஜாம், ஆப்பிள் ஜாம், வெஜ் போண்டா, பூண்டுப் பொடி, அவித்த முட்டை.

மிக அருமையான ஹாஸ்பிட்டாலிட்டி. மிக்க நன்றி பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். :)
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார் *****

இதன் முகவரி :- 

BEST WESTERN PARK HOTEL. THOIRY,
RESIDENCE DE TOURISME ET AFFAIRES 185,
AVENUE DU MONT BLANC, 01710 THOIRY, GENEVE,
TEL: +33 4 50 99 50 00.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. அழகான தங்குமிடம். வசதிகளும் சிறப்பு. உணவும் ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி வெங்கட் சகோ

    மிக்க நன்றி சிவா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...