செவ்வாய், 16 மே, 2017

கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.

நல்ல டிஃபனை நிறைவு செய்வதே நல்ல காஃபிதான்.  
 

பொள்ளாச்சியிலிருக்கும் கௌரிகங்காவுக்கு பல ஊர்களில் கிளைகள் இருக்கின்றன. ஆனால் அங்கே கிடைக்கும் காஃபிபோல் ருசியாக எங்குமே இல்லை. நல்ல பசுமாட்டுப் பாலில் டிக்காக்‌ஷனை அப்படியே விட்டு லேசாக சீனி போட்டு ஆற்றிப் பதமாகக் குடிக்கும் சுவை ( ஒரு படத்தில் விசு சொல்வது போல ) எங்குமே இல்லை. இந்த கும்பகோணம் டிகிரி காஃபி என்று ஹைவேஸில் பத்தடிக்கு ஒரு கடை வீதம் இருக்கின்றன. தப்பித்தவறி உள்ளே போனோம் என்றால் அது சிக்ரியை ( 60:40 ) விகிதத்தில் கலந்த காஃபியாக நாக்கைவிட்டு நாலுமணி நேரம் ஆனாலும் போகாமல் உமட்டும்.


சென்னை நெசப்பாக்கத்தில் ஒரு கும்பகோணம் டிகிரி காஃபி கடையில் காஃபியின் விலை ரூ. 120. இந்த அக்கிரமத்தை எங்கே சொல்ல. காஃபிப் பிரியர்கள் ஒரு தரமாவது பொள்ளாச்சி கௌரிகங்காவில் குடித்துப் பார்க்கவும். பின்னே சொல்வீங்க இதுதாண்டா காஃபின்னு J
 
RAGI VADA, THAHI VADA & COFFEE
சரி டிஃபனுக்கு வருவோம்.
ONION RAVA & SAMBAR IDLI.
பொள்ளாச்சி கௌரி கிருஷ்ணா, கௌரி கங்காவில் காஃபி மட்டுமில்லை,
கோதுமை ரவை உப்புமா, ஆனியன் ரவா ரோஸ்ட் தோசை ரோஸ்ட், சாம்பார் இட்லி, ராகி வடை எக்ஸ்பெஷலி தயிர்வடை அட்டகாசம். தங்கியிருந்த ஒரு வாரமும் தினமும் காலையிலேயே தயிர்வடை சாப்பிட்டோம். செம சுவை. பொள்ளாச்சியில் காஃபி & தயிர் ரெண்டுமே படு சுவை.  
ராசிபுரத்தில் ரங்கவிலாஸில் சாப்பிட்டோம். இங்கே என்ன ஸ்பெஷல்னா லேடீஸ் பேரர்கள் இருக்காங்க. அவங்களே ஆர்டர் எடுத்து சர்வ் செய்றாங்க. சுவை பரவாயில்லை.மினுமினு குலாப்ஜாமூன்.இட்லி சாம்பார்பனீர் ரோஸ்ட்காஃபி. எல்லாமே கொஞ்சம் பரவாயில்லை ரகம்தான். காஃபில எல்லாம் சூடே இல்லை. ரொம்ப கூட்டமும் இல்லை ஆனா ரொம்ப லேட் சர்வீஸ். கல்லாவில் அமர்ந்திருந்த ஓனர் (!) பார்த்தும் பார்க்காதமாதிரி இருக்கார். ஒர்க்கர்ஸை சரியாக வேலை செய்ய வைப்பதில்லை. அவசரத்துக்கு சாப்பிட்டுப் போக முடியாது. வந்திட்டமே என்று இரண்டு தரம் போய் சாப்பிட்டோம். சில இடங்கள் இப்படியும் ஆயிடுது. 

சரி நான் டிஃபன் சாப்பிட்டேன். நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா. இல்லாட்டி போய் சாப்பிட்டு வாங்க. J நாளைக்குப் பார்ப்போம் மக்காஸ் J

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.  

38. கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.


6 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எஞ்சமாய்!

Nagendra Bharathi சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks Venkat sago :)

Thanks Nagendra Bharathi sago

Thanks DD sago :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

G.M Balasubramaniam சொன்னது…

ருசித்து சாப்பிடுபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

aha Thanks Bala sir !!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...