எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஜூலை, 2015

வலம்புரியாம்.எல்லாம் குப்பை. !
எழுதாதே என்று சொல்ல
உனக்கேது அதிகாரம்
சர்வாதிகாரம்,
அதி காரம்.

அனைத்தும் வலம்புரியானால்
வல்லமை இழந்துபோகும்

முத்துக்கள் சித்தித்தால்
விட்டெறியவா முடியும்.?

பாதையிலோ மேடுபள்ளம்
பாணனுக்கோ அறிவு குள்ளம்.

கருடன்களின் கர்வத்துக்காய்
குருவிச் சிறகைச் சிதைக்கலாமா


ஒவ்வொரு வசந்தத்திற்கும்
இலையுதிர்காலம் உண்டு
உதிர்ந்துவிடுவோமோவென்ற
பயத்தில் பெட்டைப் புலம்பல் ஏன்

புலமைக்கு ஏது தடை
புலவனுக்கு உள்ளே படை

எல்லாச் செடிகளும்
திசைதொறும் கிளைபரப்பும்
உயர்ந்துகொண்டே செல்ல
அவை என்ன வெட்டிப் பனைகளா.

உயர்ந்த மதில்சுவர் மட்டுமே
கோட்டையாகாது
அதில் அகழியும் காடுகளும்
அவசியம் அவசியம்.

பல்லக்கு ஏறமட்டுமல்ல
தூக்கவும் கற்றுக்கொள்

பா(அ)வலனே புலம்பாதே
பா ’வலங்கள்’ தடுக்காதே

அறிவுரைகள்
பிறருக்கு மட்டுமல்ல
நமக்கும்தான்
நடந்த நாடகங்களை மறந்தாயோ.

புற்களின் வளர்ச்சிகூடத்
தடுக்கும் ஆலமாய் விரிந்து
நிழல்விரித்துப் பயனென்ன

பச்சையங்கள்
நீர்க்கப்பட்டால்தான்
நெல்மணி காணலாம்.

இராஜபாட்டையில்
இராஜன் மட்டுமல்ல
வழிப்போக்கனும் பயணப்படலாம்

பக்கத்து இலைக்காரர்களுக்கு
நீர் பந்தி விசாரிக்காமல்
உம் இலை விருந்து ருசியும்.


-- 84 ஆம் வருட டைரி.

டிஸ்கி 1.  :- டிசம்பர் 17, 2014  அவள் பக்கத்தில் வெளியானது. 

டிஸ்கி 2. அவள்பக்கத்தில் என்னுடைய படைப்புகளை மொத்தமாக இங்கே படிக்கலாம்.
 

7 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. படைப்புலகின் ஒரு மின்னும் தாரகை.. பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  பதிலளிநீக்கு
 4. நன்றி டிடி சகோ

  நன்றி குமார் தம்பி

  நன்றி துளசி சகோ

  நன்றி ஜி எம் பி சார்

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...