எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்காக.

கரை கடப்பதும்
அணை கடப்பதும்
அவள் நிர்ணயித்ததல்ல
கரையேறவிடாத அழுத்தம்.

துளியாய் முத்தமிடுவதும்
வெள்ளமாய்ப் பொங்குவதும்
அவள் தேர்ந்தெடுப்பதில்லை
சூழ்நிலை மேகம்.


கடலாய் விரிவதும்
குட்டையாய்க் குறுகுவதும்
அவளின் முடிவுதான்
ஆளடித்துப்போடும் ஆயாசம்.

கிளைகளை விரிப்பதும்
வேர்களை விரிப்பதும்
அவளின் தேர்வுதான்.
விசுவரூப வேதாளம்.

யாரும் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை.
நிரூபிக்கவேண்டியதில்லையெனும்போதிலும்
தனக்காக தனக்காக
ஏதேனும் எல்லாமும்.


7 கருத்துகள்:

 1. யாரும் யாருக்காகவும்
  காத்திருப்பதில்லை.
  நிரூபிக்கவேண்டியதில்லையெனும்போதிலும்
  தனக்காக தனக்காக
  ஏதேனும் எல்லாமும்.//

  அழகான வரிகள்!

  பதிலளிநீக்கு
 2. அருமை. படித்த நினைவாய் இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 3. தனக்காக எல்லாமே -- அருமை---------சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 4. நன்றி டிடி சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி ஸ்ரீராம். சில காலம் முன்பு இது முகநூலில் பகிர்ந்ததுதான். :)

  நன்றி குமார் தம்பி

  நன்றி சரஸ் மேம். :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...