எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

நிலைத்தன்மை4.4.86.

6. எத்தனை சாவிகள்
எண்ணற்ற வடிவத்தில்
சிறிதும் பெரிதுமாய்
பூட்டுக்கு ஒத்துவராமல்.

அரைகுறையாய்
அங்கங்கே
பல கட்டிடங்கள்.

நிலத்துள்ளே
கழிவுத் திட்டுகள்

நதியும்
பிளவுகளுடன்

இடமும் வலமும்
சாயும் சூரியன்.

ஒளிந்தும் கரைந்தும்
நிலா.

நிலைத்தன்மை
எதற்குமே இல்லை
ப்ரியம் உட்பட. 

5 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. அருமை......அதுவும் இறுதியில் வரிகள் அருமை ...கொஞ்சம் சோகம் எட்டிப்பாரத்து விட்டதோ இறுதி வரிகளில்...

  பதிலளிநீக்கு
 3. நிலைத்தன்மை எதற்குமே இல்லை.... உண்மை...

  ஏனோ மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பது நினைவுக்கு வந்தது!

  பதிலளிநீக்கு
 4. ஆம் டிடி சகோ !

  ஆம் துளசி சகோ :)

  ஆம் வெங்கட் சகோ :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...