எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 மே, 2013

வெளிநாட்டு ஷாப்பிங்.

வெளிநாட்டு ஷாப்பிங்.


















.





வெளிநாட்டு ஷாப்பிங்.

வெளிநாட்டுக்கு அடிக்கடி போறீங்க. அல்லது அவ்வப்போது போறீங்க. இன்னிக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது எல்லா மக்களாலும் தொழில் அல்லது வேலை நிமித்தம் மேற்கொள்ளப்படுது. அதுனால அங்க உபயோகமா சில பொருட்கள்  பத்தி இந்தக் கட்டுரை.

வீட்டுல பெரியவங்க இருப்பாங்க. அவங்களுக்கு குளிர்காலத்துல வீட்டுக்குள்ளேயே நடக்க இந்த  செருப்ப வாங்கலாம். வெல்வெட் மாதிரி பஞ்சாவும், கதகதப்பாவும் வச்சிருக்கும் காலை. ஹீல்ஸ் எல்லாம் இல்ல. அதுனால நடக்கவும் எளிது. இது துபாய், ஷார்ஜா (லூலூ, எமிரேட்ஸ்)ஷாப்பிங் மால்களில் கிடைக்கும். ஐந்து திர்ஹாம் ஷாப்புகள்ல வாங்கலாம். நம்ம ஊர் பணத்துக்கு 65 லேருந்து 70 ரூபாய் வரைதான்.

இந்த ஊசியில என்ன ஸ்பெஷல்னா இதுல நூல் கோர்க்கிறது ஈஸி. ஏன்னா இது தையல் மெஷின் ஊசி மாதிரி நூல் கோர்க்கும் காதுப் பக்கம் லேசான இடைவெளி இருக்கு. அது நூலை உள்வாங்கி வைச்சுக்குது. எனவே வெள்ளெழுத்துக் கண்ணாடி எல்லாம் தேட வேண்டாம். பட்டன் தைக்க, ஹெம்மிங் பண்ண நூல் கோர்க்க பேரப்பிள்ளங்களையோ, வேற யாரையுமோ கேக்க வேண்டாம். இதுவும் 5 திர்ஹாம்தான்.அதாவது 65 - 70 ரூபாய்தான். 10 ஊசி.

இந்த அக்யுபஞ்சர் செருப்பும் பெரியவங்களுக்கு மட்டுமல்ல. சின்னவங்களுக்கும் நல்லது. பவர் பாயிண்டுக்கள்ல அழுத்தம் கொடுப்பதால செரிமானம்  ஆகும். மத்த கோளாறுகளும் வராதுஇப்போ இந்தியாவிலும் கிடைக்குது.

குழம்புக் கரண்டி வைக்கும் கரண்டி . இதை அமெரிக்காவுல இருந்து ஒரு உறவினர் வாங்கி வந்தாங்க. நாம சமைக்கும்போது கிண்டுற கரண்டிய அடுப்பு மேலயோ, பாத்திரத்திலயோ வச்சிட்டு , அம்மாடி சுடுதுன்னு கைய ஒதறுவோம்அல்லது மேடையில் வச்சா மத்த பொருட்களேருந்து சிந்தும் தூசி ஒட்டலாம். எனவே  ஒரு கிண்ணி அல்லது தட்டு  உபயோகிப்பேன் நான். இந்த கரண்டி வைக்கும் கரண்டி வந்ததும் இதுலதான் வைக்கிறேன். நல்ல உபயோகம்.

கால் மிதி. இதுவும் ஐஞ்சு திர்ஹாம்தான்ரெண்டு மூணு வருஷமா வருது. வாக்யூம் க்ளீனர்ல க்ளீன் பண்ணலாம். ரொம்ப அழகு மற்றும் சௌகர்யம் பாதத்துக்கு.

தலையணை மற்றும் திண்டு உறை. சோஃபாக்களில் நாம் உபயோகப்படுத்தும் திண்டு மற்றும் மெல்லிசு தலையணைகளுக்கு இந்த உறை அட்டகாசமாக  அழகாக இருக்கு. வசதி மற்றும் அழகு கூட.

சாப்பிடும் பொருள் அப்பிடின்னா இத வாங்கிக் கொடுக்கலாம். [இது சால்ட்டட் அண்ட் பெப்பர்டு  ஃப்ரைட் பாதாம்ஸ்].   பொதுவா பாதாம்ல குறைந்த அளவு கொழுப்புச்சத்து இருக்குன்னு சொல்வாங்க. அதுவும் நல்ல கொழுப்புச்சத்து. இத தினமும் 2 - 4 சாப்பிலாம். எனவே இத வாங்கிக் கொடுக்கலாம். ரெண்டு யூரோதான். அதாவது 140 ரூபாய் கிட்ட.

எந்த வெளிநாடு போனாலும் பிஸ்கட்ஸ், சாக்லெட்ஸ், செண்ட் பாட்டில்கள்தான் நாம பெரும்பாலும் வாங்குறோம். ஆனா இத எல்லாம் சாப்பிட முடியாத பெரியவங்களுக்கு நாம இந்த மாதிரி பொருட்கள் வாங்கிட்டுப் போனா உபயோகமா இருக்கும். அவங்களும் பிஸ்கட் , சாக்லெட்ஸை சாப்பிட முடியாம மத்தவங்களுக்குக் கொடுக்குற மாதிரி இதைக்கொடுக்காம உபயோகிப்பாங்க. அப்புறம் உங்கள வாழ்த்துவாங்க.. :)


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


7 கருத்துகள்:

  1. அனைத்தும் உபயோகப்படும் பொருட்கள் தான்... விலையும் பரவாயில்லை... அடுத்தமுறை திண்டுக்கல்லுக்கு ஒரு பார்சல்... ஹிஹி... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. Antha naatuku poranvanga ithai kavanathil vaithu vaangi tharalam periyavargalukkum veetu upayogathukkum.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு.

    வெளிநாடுகளில் பலரும் வீட்டில் அந்த செருப்புதான் பாவிக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  4. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


    தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன்.

    நன்றி சீனி

    நன்றி மணவாளன்

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...