வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பெண்ணாதிக்கம்..

கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த
கோபமோ என்னவோ.,
கர்ப்பக்கிரகத்துள்
அடக்கிப் போட்டாய்..
சில நூற்றாண்டுகளுக்கு முன்
நிலவறையிலும்..

தீட்டென்றும்
கற்பென்றும்
கண் அறியா
வேலியிட்டாய்..
தப்புவித்துக் கொண்டே
இருக்கிறேன்..
வேலிகளுக்குள்
சிக்கித் தவிக்கும்
உன்னையும்..


கண்நிறைந்த அழகோடு
கைநிறைய சம்பாதிக்கிறேன்..
எனக்குமுண்டு
தனித்த சிந்தனைகளும்
விழைவுகளும் இச்சைகளும்..
கர்ப்பப்பையும்
நான்தான் சுமக்கிறேன்
உன்னிடம் ஒப்புவிக்காமல்..

இரட்டைக் குதிரை
சவாரி செய்தும்
சேவை செய்கிறேன்..
அதில் பாதி நீ
செய்யுமுன்னே
பெண்ணாதிக்கம்
என்கிறாயே..

டிஸ்கி :- இந்தக் கவிதை 10, ஜூலை 2011 திண்ணையில் வெளியானது. 

4 கருத்துகள் :

கீதமஞ்சரி சொன்னது…

சீற வேண்டிய நேரத்திலும் சிந்திக்கச் சொல்லி மன்றாடும் மனதை இப்போதேனும் புரிந்துகொள்ளட்டும் அவர்கள். மனம் தொட்டக் கவிதை. பாராட்டுகள் தோழி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

யோசிக்க வைக்கும் வரிகள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதமஞ்சரி

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...