எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மகப்பேறு நிலையங்களா, மரணக் கிடங்குகளா..

நாலு நாளா டிவியை பார்க்க முடியல, ரேடியோ கேக்க முடியல, பேப்பர் படிக்க முடியல. முகநூலுக்கு சென்றாலும் இதே டிபேட்தான். என்னுடைய தோழி கவிதா சொர்ணவல்லி 106.4 ஹலோ எஃப். எம்மில் பணி புரிகிறார். அவரோட வார்த்தைகள்ல இந்த வலிகளைப் பதிவு செய்றேன்..

///ரெண்டு வருஷமா நானும் பாலாஜியும் ப்ரைம் டைம் ஷோ பண்ணிட்டு இருக்கோம். நிறைய நிறைய...நிறைய Awareness விஷயங்கள் பேசி இருக்கோம். எல்லாமே அதீத Involvement-ட தான் பண்ணி இருக்கோம். ஆனா எந்த ஷோ அன்னைக்கும்...இன்னைக்கு நடந்த ஷோ அளவுக்கு கை கால் நடுங்கி, தலைல கை வச்ச, கண்ணீர் கட்டுபடுத்தி.....என்னைக்கு பண்ணினதில்லை.


 "கோஷா" - ஹாஸ்பிடல்ல இறந்த குழந்தைய எலி கடிச்சு குதரினது பத்தின ஷோ. அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்தான் ??? கேள்வி. என்னைக்குமே இல்லாத அளவுக்கு இன்னைக்கு பேச பேச வந்த Callers அத்தனையும் பெண்கள். அவங்களோட வலி, அழுகை, ஆவேசம் தாங்க முடியாம பாட்டை குறைச்சு, நிறைய பேருக்கு பேச வாய்ப்பு கொடுத்து எவ்வளவு பண்ணினோம். ஒன்றரை மணி நேரத்துல ஐநூறு பேராவது வந்திருப்பாங்க பேசறதுக்கு. முடிஞ்ச அளவுக்கு எல்லாரையும் பேச வச்சோம்.

லீலானு ஒரு அம்மா பேசுறப்ப " இதே கோஷா ஆஸ்பத்திரியில பிரசவத்துக்கு அட்மிட் ஆனப்ப அவங்க கொடுத்த மருந்துல பனி குடம் உடைஞ்சு தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. டாக்டர்ஸ் யாருமே பாக்க வரல. கொட்டுற தண்ணியோட , டிரஸ் எல்லாம் நனைஞ்சு போய் நானே டாகடர் முன்னாடி நின்னப்ப அங்க இருந்த அத்தனை ஆம்பள டாகடரும் சிரிச்சாங்க. இதை மாதிரி எத்தன கேஸ் பாத்துருப்போம். போ...போய் படு....அப்படி சொல்லிட்டாங்க. ஒரு நாள் முழுக்க எந்த treatment-ம் கொடுக்காம மறுநாள் ஆபரேஷன் பண்ணி குழந்த எடுத்தாங்க. ரெண்டே நாள்ல என் குழந்த இறந்துருச்சு. என் குழந்தை இறந்தத விட, பனி குடம் உடைஞ்சு தண்ணியோட நின்ன என்ன பாத்து அந்த டாகடர்ஸ் சிரிச்சது இன்னும் வலிக்குது" னு அவங்க அழுதுட்டே சொன்னப்ப உசுர் போய்டுச்சு எனக்கும் பாலாஜிக்கும்.

படமா-னு ஒருத்தவங்க இதே "கோஷா" ஹாஸ்பிடல்ல டாக்டர்சோட பொறுப்பில்லாதனத்துனால, பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன தன்னோட Twins நினச்சு அழுதப்பா வயித்தெரிச்சலா இருந்தது.

அடுத்து பேசின கீதானு ஒருத்தவங்க சொன்னது இது "குழந்த பிறக்கிற வலி பொறுக்க முடியாம கத்தினப்பா அங்க இருந்த நர்ஸ் எல்லாம் - புருஷன் கூட படுக்க்ரப்பா வலிக்கலையா... இப்ப மட்டும் கத்தர அப்படின்னு அசிங்கபடுத்தினாங்க பாலாஜினு" சொல்லிட்டு அழுதப்ப என்னாலயும் பாலாஜியாளையும் பேசவே முடியல.

இதெல்லாம் FB-ல என்னால எழுத முடிஞ்சா விஷயங்கள். Govt. Hospitals-ல நடக்குற இன்னும் நிறைய நிறைய நிறைய வலிகளையும் அசிங்கங்களையும் அவங்க சொன்னதா என்னால எழுத முடியல. இதெல்லாம் கேட்டப்ப புள்ள பெத்துகனும் அப்படிங்கற ஆசையே என்ன விட்டு போச்சு. சத்தியமா. ஆனா எல்லா அம்மாக்கள் மேலையும் ரொம்ப மரியாதை வந்துருக்கு. நிஜம்மா.////

கவிதா இதெல்லாம் கேட்டு நீங்க புள்ள பெத்துக்கணும்னு ஆசையே விட்டுப் போச்சுன்னு சொன்னதுதான் எனக்கு திக்குன்னுது. ஒரு நிகழ்வு எப்படி எல்லாம் மனுஷங்க மனசுல பயத்தைப் பதிய வைக்குது. அந்த அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். நினைக்கவே கஷ்டமா இருக்கு.

இதையே முகநூலில் இருக்கும் இன்னொரு டாக்டர் நண்பர் இந்தவிதமா தன்னோட ஸ்டேடஸ் மெசேஜ் ல பகிர்ந்திருந்தார். என்னன்னா அவருக்கே இதே போல ஹவுஸ் சர்ஜனா இருக்கும்போது ஒரு முறை நைட் டூட்டியில் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்ரியில் தூங்கும்போது எலி கடித்ததா குறிப்பிட்டு இருக்கார்.மேலும்

 ///பொதுவா அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். அங்கே இருக்கும் சுகாதாரக் கேடு மிக அதிகமானது. கழிவுகள் அடையும் இடங்கள் எலியை வளர்க்க ஊக்குவிக்கும் இடமாக இருக்கின்றன. சரியாக கவனிக்கப்படாமல் ஒரு குழந்தை எலி கடித்து இறந்ததாக சொல்லப்படுவது வருத்தத்துக்கு உரியது. குழந்தைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தில் ஐயமேதுமில்லை.

ஆனால் மீடியாக்கள் அரசு மருத்துவமனைகள் பற்றி இப்படி ஒரு அபிப்ராயத்தைப் பெரிது படுத்தி பொது ஜனத்தின் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியதே அதிகம். மிக அதிகமான வசதிகளும், மருத்துவ சாதனங்களும் அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு தனியார் மருத்துவமனையைவிட எல்லா மக்களுக்குமான மருத்துவ சிகிச்சை செலவுகள் குறைவு. இப்படி செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் மக்கள் கடனை உடனை வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்.

எலிகளும், நாய்களும் சுற்றித் திரிவதாக சொல்றாங்க. இன்னிக்கு இந்தியாவில் இவை க்ளப்புகள், ஸ்டேடியங்கள், பள்ளிகள், ஏன் பார்லிமெண்ட் இருக்கும் இடத்திற்கு அருகிலும் கூடத்தான் சுற்றித் திரிகின்றன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். மீடியா இப்படியான விஷங்களோடு இதற்கான சரியான தீர்வு என்ன என்பதையும் பொதுமக்கள் அபிப்ராயமாகக் கேட்டு வெளியிட வேண்டும். ஒரு தனிப்பட்ட நிகழ்வை வைத்து சமூகம் அதற்கான தீர்வு கண்டுபிடிக்கவும் உதவ வேண்டும். ///

பார்க்கலாம். பிள்ளை பிறந்ததுக்கே பணம் வாங்கிக் கொண்டு சொல்லும் செவிலியர்கள், பணியாளர்கள் அரசு ஆஸ்பத்ரிகளில் பணி புரிவதாக சொல்றாங்க டிவியில். இன்னும் எல்லாவற்றுக்கும் காசு காசு என்று.. காடு அழைக்கும் வரை இவர்கள் சேர்க்கப் போவது என்ன , யாருக்கு, எதற்கு என்று சிந்தித்துப் பார்க்கட்டும்.

டாக்டர்களை தெய்வங்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களின் உயிர்காக்கும் கோயில்களாக இருக்கின்றன. மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.மகப்பேறு மருத்துவமனைகள் மரணக்கிடங்குகளாக இல்லாமல் மனிதம் பெருகும் இடமாக மாறட்டும்.

8 கருத்துகள்:

 1. //டாக்டர்களை தெய்வங்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களின் உயிர்காக்கும் கோயில்களாக இருக்கின்றன. மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.மகப்பேறு மருத்துவமனைகள் மரணக்கிடங்குகளாக இல்லாமல் மனிதம் பெருகும் இடமாக மாறட்டும். // ;)

  அருமையான பதிவு.

  நல்ல ஆரோக்யமான மாற்றங்கள் ஏற்படட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. Madam,

  Ungalukku oru Salute. Ungalapola ullavangal than neraya ezuthi awarness konduvaranum. Ellorum koral koduthalthan itharku theervu kedaikkum. neenga ezuthiyathai padithapothu manam pathaithatu.

  Karunakaran
  Chennai

  பதிலளிநீக்கு
 3. அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ விடுதிகள் சுத்தமாக இருப்பது எதிர்பார்க்கமூடியாது. அங்கு
  வழியும் கூட்டத்தை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு இருபது
  நபர் கூடவே இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்களெல்லாம் மருத்துவ வளாகத்திலேயே தங்கி இருப்பதால்
  அவர்களுக்குத் தேவையான டீ, காபி, டிபன் கொடுக்கும் கையேந்தி பவன்கள் வளாகத்துக்குள்ளேயே அல்லது
  வாசலிலேயே பரந்து கிடக்கின்றன. அங்கே எறியப்படும் மிச்சம் மீதி, கை கழுவும் நீர், எல்லாமே கொசு, ஈ, எலி,
  பெருச்சாளி, பன்றி, நாய் முதலியவைகளுக்கு ஜீவாதாரமாக இருப்பதால்,

  யாரைக் குற்றம் சொல்வது என்றே புரியவில்லை.

  அரசாங்க மருத்துவகங்கள் பற்றிய மக்கள் பார்வை (public perception) சரியில்லை என்பதால்தான்
  தனியார் மருத்துவகங்களில் கூட்டம் . உண்மையிலே, அரசாங்க மருத்துவகங்களில் பணி புரியும்
  மருத்துவர்களது தொழில் முறை தகுதியும் அவர்களது அணுகுமுறையும் தனியார் மருத்துவகங்களில் இருக்கும்
  மருத்துவர்களுக்குச் சற்றும் குறைந்தது இல்லை. அரசாங்க மருத்துவகங்களில் லாப் வசதிகளும் போதுமானதாகவே
  இருக்கிறது. இருந்தாலும் நடுத்தர மக்கள் கூட தற்பொழுது தனியார் மருத்துவகங்களையே நாடுகின்றனர். காரணம்
  சுத்தம். டாக்டர்களின் ப்ரத்யேக கூடுதல் கவனிப்பு. தேவையில்லாத பணம் கொடுக்கவேன்டிய நிலை இல்லை.

  அரசாங்கம் மருத்துவகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை முதல் நோக்காக எடுத்துக்கொள்ள‌
  வேண்டும். ( எல்லா வற்றிலும் )In fact, if service in Govt.hospitals improves, then there will be drastic reduction in the number of patients visiting doctors doing also private practice.

  பதிலளிநீக்கு
 4. //அங்க இருந்த நர்ஸ் எல்லாம் - புருஷன் கூட படுக்க்ரப்பா வலிக்கலையா... இப்ப மட்டும் கத்தர அப்படின்னு //

  எல்லா ஊர் அரசு மருத்துவமனைகளிலும் இந்த டயலாக் உண்டுபோல!! எங்கூர் ஆஸ்பத்திரிக்குப் போன ஒரு உறவுப் பெண்ணும் இதைச் சொன்னார். :-((((

  //இப்படி செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் மக்கள் கடனை உடனை வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்.//
  இது சரியான பார்வைதான் என்றாலும், சரிப்படுத்த வேண்டிய எத்தனையோ - சுத்தம், சுகாதாரம், ஊழல், லஞ்சம், கனிவான வார்த்தைகள், கஸ்டமர் கேர் - என்ற் எத்தனையோ குறைகளால்தானே மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்.

  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுப்பதால் மட்டும், அவர்கள் நோயாளிகளை மரியாதையோடு நடத்திவிடுவதில்லை. அங்கேயும் ஏறத்தாழ இதே நிலைதான் என்றாலும், ஆஸ்பத்திரி பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவாவது (ஓரளவு) சரியான சிகிச்சை கொடுப்பார்கள் என்ற ஒன்றுதான் ஆறுதல்!!

  பதிலளிநீக்கு
 5. நெஞ்சே நடுங்குது தேனக்கா.. இப்படிக்கூடவா நடக்கும்!!

  பதிலளிநீக்கு
 6. நன்றி கோபால் சார்

  நன்றி கருணாகரன்

  நன்றி சூர்யநாராயணன் சிவா

  நன்றி ராஜி

  நன்றி ஹுசைனம்மா நீங்க சொன்னதெல்லாம் உண்மை உண்மை..

  நன்றி தனபால்

  நன்றி சாரல்.. ஆமாம்டா. :(

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...