புதன், 1 ஆகஸ்ட், 2012

முதுகில் பதிந்த முகம்

பால்கனியில் தொற்றியபடி
கண்மறையும் வரை
கையாட்டி உள்வந்து
படுக்கை விரிப்புகளை
உதறிச் செருகும்கணம்
இரவு ஊடலில்
திரும்பிப் படுக்க

முதுகில் பதிந்த முகம்
மீசையொடு குறுகுறுக்க
வண்டியில் செல்லும்
உன் முதுகில்
என் மூக்குத்தியின் கீறல்
சற்றே கா(ந்)தலோடு...

 டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 19,2011 திண்ணையில் வெளியானது.

7 கருத்துகள் :

Ramani சொன்னது…

புற முதுகுத் தாக்குதல் போரில் தான்
வெறுக்கத்தக்கது
காதலில் அது பெரும் சுகமே சுவையே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

nice lines ..... keep it up

அமைதிச்சாரல் சொன்னது…

க்ளாஸ்... தேனக்கா :-)

அமைதிச்சாரல் சொன்னது…

க்ளாஸ்... தேனக்கா :-)

செய்தாலி சொன்னது…

ரெம்ப அருமையான பீல்(உணர்வு )

ம்ம்ம் ..
கவிதை வரிகளாய்
அழகு கவிதாயினி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி

நன்றி ரஜினி

நன்றி சாரல்

நன்றி செய்தாலி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...