திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அம்முவும் புஜ்ஜியும்..:_ குமுதத்தில்

அம்மு நனைந்து கிடந்தாள்.,
வாயெல்லாம் பிஸ்கட் கூழ்., தண்ணீர்.
“அம்மா புஜ்ஜி என் தலையிலே
பென்சில் சொருவி வைச்சிருக்கா.. வலிக்குது”

பென்சில் எடுத்து., வாய் துடைத்து
சமாதானம் சொன்னேன்.,
 “அக்காதானே .. விடு..”
மகள் பள்ளி சென்றபின்
கண் கசக்கி புகார் சொன்ன
பார்பி பொம்மையை அணைத்தபடி..

 டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 14, 2011 குமுதத்தில் வெளிவந்தது.


4 கருத்துகள் :

பால கணேஷ் சொன்னது…

எக்ஸலண்ட். மகளின் பார்பி பொம்மையையும் ஒரு குழந்தையாய் நினைப்பது எத்தனை ஈரமுள்ள இதயம். மிகமிக ரசிக்க வைத்தது கவிதை. குமுதத்தில் இடம் பெற்றதற்கு என் நல்வாழ்த்துக்கள்க்கா.

கீதமஞ்சரி சொன்னது…

அதிர்ஷ்டக்கார பார்பி. அக்கா பள்ளிக்குப் போனதும் அம்மா அவளுடன் விளையாடத் தொடங்கிவிட்டாளே...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலகணேஷ்,

ஆம் கீதமஞ்சரி.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...