எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஆகஸ்ட், 2012

திருதிரு துறு துறு பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ்.

ஒரு பெண் சாதாரணமா என்னென்ன ஆசைகள் வைத்துக் கொள்ளலாம். நல்லா படிச்சு, இஞ்சினியராகலாம்., டாக்டராகலாம். பைலட்டாகலாம்., ஸ்பேசுக்கு கூட போகலாம். ஆனா ”திரு திரு துறு துறு” பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ் ஒரு நடிகையாக ஆக இல்லை., நடிகர்,நடிகைகளை ஆட்டுவிக்கும் ஒரு டைரக்டரா ஆக ஆசைப்பட்டார். அதுவும் எப்படி நடிப்புத் தொழிலுக்கே சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்து ஜெயித்தார் என இந்த மாதம் பார்ப்போம்.

உங்க கொள்கைகள்ல உறுதியா இருந்தீங்கன்னா ஜெயிப்பீங்க என்பதற்கு நந்தினி ஒரு உதாரணம். அப்பா ஜெயாநந்தன் எல் ஐ சியில் டெவலப்மெண்ட் ஆஃபீசர். அம்மா கிரிஜா க்வீன் மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை. தம்பி முருகானந்தம் பல் மருத்துவர். சினிமாவுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமேயில்லை.
சாதாரணமா இந்த மாதிரி குடும்பங்களில் பெண்ணைப் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பார்கள். அதிக பட்சம் அவர் ஏதாவது வேலைக்கு போனால்போவார் . பின் பிள்ளைகுட்டி பிறந்து அவர்களைப் படிக்கவைத்து அம்மாஸ்தானத்தில் மட்டும்தான் இருக்க முடியும். இதற்குத்தானா தான் பிறந்தது. இது அல்ல தனது பணி.,பிறந்ததற்காக ஏதாவது சாதிச்சிட்டு போக வேண்டாமா. அதன் பின் தான் மண வாழ்க்கை குழந்தை குடும்பம் எல்லாம். என நினைத்தார். நினைத்ததை செயல் படுத்தினார்.

பள்ளியிலேயே ட்ராமா, பாட்டு, டான்ஸ் எல்லாம் இண்டரஸ்ட். படிக்கும் காலத்திலேயே ட்ராமாக்கள் எழுதி இயக்கி இருக்கிறார் படிப்பை விட அது கொடுத்த சந்தோஷம் மிக அதிகமாய் இருந்ததாம். கதை சொல்ல இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். இவரைச் சுற்றி அதற்காகவே எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சுவாரசியமான கதை சொல்லிகளை நமக்குப் பிடிக்கும்தானே.

ஆசான் மெமோரியல் பள்ளிக்கரணையில் பி பி ஏ முடிச்சிட்டு 3 வருஷம் தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டி எஃப் டி படித்தார். வீட்டில் முதலில் ஆதரவு கொடுக்காத போதும் பின் டைரக்டராவதுதான் இவரது குறிக்கோள் என உணர்ந்ததும் படிக்க வைத்தனர். எல்லா உத்யோகங்களிலும் தொந்தரவுகள் இருக்கு, மோசமான ஆட்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். பல்லவன் பஸ்ல ஏறும்போது கூட பிரச்சனை இருக்கும். நாம பழகும் விதம் பொறுத்துத்தான் எல்லாரும் நம்மிடம் பழகுவார்கள். நாம ஸ்ட்ரிக்டா இருந்தா யாரும் நம்மை அணுக முடியாது. குறுக்கு வழியில் நான் என்றும் போக மாட்டேன் என சொல்லி இருக்கிறார். அப்புறம் இவர் அங்கு கோல்ட் மெடலிஸ்ட் ஆகி இருக்கிறார். மேலும் ஓட்டம் என்ற குறும்படத்துக்காக இரண்டு ஸ்டேட் அவார்டு வாங்கி இருக்கிறார். டைரக்‌ஷன் மற்றும் எடிட்டிங்குக்காக.

பிபிஏ படிக்கும் போது நண்பரானவர் சுக்தேவ். பெங்காலி. அப்போது எம் பி ஏ படித்த இவரை 96 இல் என் ஐ ஐ டியில் கம்ப்யூட்டர் படிகும்போது சந்தித்திருக்கிறார். இருவருக்கும் நேசம் மலர்ந்தபோது தனக்கு டைரக்டராகவேண்டும் என்று ஒருகுறிக்கோள் இருப்பதை சொல்லி இருக்கிறார். அதற்கு அவரும் தன் சப்போர்ட் செய்வேன் என உறுதியளித்தாக பெருமையாக கூறினார். அதன் பின் திருமணம் நடந்தது.

பிலிம் இன்ஸ்டிடியூட் படித்தபின் அசிஸ்டெண்ட் டைரக்டராக முயற்சித்திருக்கிறார். அப்போது அதிகம் பெண்கள் யாரையும் துணை இயக்குனராக வைத்துக் கொள்வதில்லை. திருமணம் ஆனால் குழந்தை குட்டி என சென்று விடுவார்கள்ஏனெனில் இது டைம் பார்க்க முடியாத வேலை. இரவு பகல் எந்நேரமும் வேலை நிமித்தம் கூப்பிட்டால் உடனே போக வேண்டும். வெவ்வேறு லொகேஷன்களில் தனியாக பணியாற்ற வேண்டும். இதுதான் பார்ப்பேன் இது பார்க்க முடியாது என சொல்ல முடியாது.

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் என்பதால் கண்டநாள் முதல் படம் எடுத்தபோது டைரக்டர் பிரியாவிடம் அசிஸ்டெண்டா வேலை செய்திருக்கிறார். எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை செய்தாராம். ஸ்கிரிப்ட், டயலாக், ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், லொகேஷன் தேடுதல், செட் ப்ராபர்ட்டீஸ், டயலாக் ப்ராம்ப்ட் டெலிவரி, லிரிக்ஸ், ( தாமரை எழுதும்போது கூட இருந்திருக்கிறார்). காஸ்ட்யூம்ஸ் 9( லைலாவுக்கு ட்ரஸ் டிசைன் பண்ணும் போது ) எடிட்டிங், சாங் ரெக்கார்டிங், என எல்லா வேலையும் செய்திருக்கிறார்.

கூட இருக்கும் அனைவரும் ஆண்கள் என்ற போதும், மேடம் இல்லாத போதும் ஓடியாடி வேலை செய்திருக்கிறார். பத்தாம் வகுப்பு படித்த ஒரு ஆணுடன் நான் கோல்ட் மெடலிஸ்ட் என்ற ஈகோ எதுவுமில்லாமல் வேலைகளைப் பகிர்ந்து செய்திருக்கிறார். செட்டில் புழுதியோடு, வேர்வையோடு வேலை செய்ய வேண்டும். ஒரு அவசர சமயத்தில் தேவைப்பட்டபோது ப்ரசன்னாவுடைய ஷூவை கூட பாலிஷ் செய்து கொடுத்திருக்கிறார். எனவே இப்படி உழைத்ததனால் படம் ஆரம்பித்து முடிக்கும்போது அந்த யூனிட்டைச் சேர்ந்த அனைவரும் இவரின் உழைப்பில் பிரமித்து இவரையும் மேடம் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தப்பட ஆடியோ ரிலீசுக்கு வந்த பிரகாஷ் ராஜ் அடுத்த படம் இவரை செய்ய சொல்லி கேட்ட போது கொஞ்சம் தனியே செய்ய தயக்கமாக இருந்ததால் செய்யவில்லை. பின் நிறைய விளம்பரப் படங்கள் , கார்ப்பரேட் படங்கள் செய்திருக்கிறார். ப்ரொமோட் ஆட் மற்றும் கார்ப்பரேட் ட்ரெயினிங் ஆட் செய்திருக்கிறார். பிரகாஷ் சாரோட படம் பண்ண முடியவில்லை. எனவே பல இடங்களில் இயக்குனராக முயற்சி செய்து பல இடங்களிலும் முட்டி மோதி அவமானம் கூட ஏற்பட்டது. இருந்தாலும் விடா முயற்சியோடு முயன்று ரியல் இமேஜில் சத்யா சிவாவிடம் கதை சொல்லி திருதிரு துறுதுறு படத்துக்கான வாய்ப்பு கிடைத்தது.

முதலில் அவர்களும் 3 . 4 சீன்ஸ் எடுத்துக் காமிங்க. பிடிச்சா செய்யலாம் என சொல்ல மூன்று சீன்கள் ஷூட் செய்து காண்பித்திருக்கிறார். அது பிடித்துப் போகவே ஹீரோவாக அஜ்மலையும் ஹீரோயினாக ரூபா மஞ்சரியையும் வைத்து இயக்கி அந்தப் படம் சக்சஸா வெளிவந்து ஜெயித்தது.

இந்தப் போராட்டத்தில் திருமணமாகி 7 வருடம் ஆகிவிட்டபடியால் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ளலாமே என சொல்ல இப்போது ஒரு குட்டிப் பெண்ணுக்குத் தாயாய் ஆகி இருக்கிறார். அந்த தெய்வம் தந்த பூவின் பெயர் ரிஷிதா. தற்போது இவர்தான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார். இனி அடுத்து ஒரு திகில் படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். அது ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றியது. ஒரு ஆள் இன்வெஸ்டிகேட் செய்கிறார்.

இதன் நடுவில் சில விளம்பரப்படங்களும் செய்து வருகிறார். டிசம்பர் ஜனவரி ஆரம்பத்தில் இதன் ஷுட்டிங் இருக்கும்போது மட்டும் தாயிடம் குழந்தையை விட்டுச் செல்லவேண்டும். கொஞ்சம் அப்போ விடலாமென நினைக்கிறேன் என்றார்.விடாமுயற்சியோடு ஜெயித்த டைரக்டர் நந்தினியின் அடுத்த படமும் வெற்றியடைய வாழ்த்தி வந்தோம்.

 டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 15) நந்தினி ஜே எஸ் பற்றிய இந்தக்கட்டுரை நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.

3 கருத்துகள்:

 1. டைரக்டர் நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. திருதிரு துறுதுறு நந்தினி வாழ்க!!!

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபால்

  நன்றி ராஜி

  நன்றி மழை.நெட்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...