எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பொம்மை

சாவி கொடுத்தால்
தேன்கூட்டில் கைவிட்டுத்
தேன் உண்ணும்
கரடி பொம்மை ஒன்றை
மலயாவிலிருந்து தாத்தா
வாங்கி வந்து இருந்தார்..
பறக்கும் தட்டும்..
விமானமும் கூட..
குழந்தைகள் பொம்மைகளை
விளையாடுவது போல நானும்
ஒன்றை மாற்றி ஒன்றைத்தூக்கி
மற்றதை கீழ் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தேன்...

ஆகத்திலேயே சின்ன பொம்மை
கோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...
யாராவது வீட்டுக்கு வந்தால்
பொம்மைகள் மிக
உயர்வானதாகிவிடும்...
நேர்த்தியானதாக...
அருமையானதாக ...
அழகானதாக...
மேற்பூச்சுக்களோடு...
சிலசமயம் அவர்களின்
பொம்மைகளும் அப்படியே...
ஆட்டமும் பாட்டமுமாக களைகட்டி ...
ஒரு காலகட்டத்தில்
பொம்மைகள் என்னை வீசி
வேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...
நானும் முதிர்ந்து கிழிந்த
பழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி.....

57 கருத்துகள்:

  1. ரெம்ப அருமையான கவிதை..பரண்களில் இருக்கும் பொம்மைகள் கோடி குடுத்தாலும் கெடைக்காதுனு பலருக்கு புரிவதில்லை.. :(

    பதிலளிநீக்கு
  2. பழசாகி போனால் மனிதர்கள் என்ன... பொம்மைகள் என்ன... எல்லோருக்கும் ஒரே இடம் தான்.

    பதிலளிநீக்கு
  3. நானும் முதிர்ந்து கிழிந்த
    பழைய பொம்மையானேன் ...
    பரணில் ஏறி.....


    ..........அக்கா, கவிதையின் கரு, புதுசா இருக்கு. நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நிராகரிப்பின் வலி சீரணிக்கக் கஷ்டமானது. பொம்மைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் என்கிற ரீதியில் நானும் ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன். நல்ல கவிதை தேனம்மை!

    பதிலளிநீக்கு
  5. நீயும் பொம்மை நானும் பொம்மை...

    பதிலளிநீக்கு
  6. //நீயும் பொம்மை நானும் பொம்மை...//
    repeat :)

    பதிலளிநீக்கு
  7. //ஆகத்திலேயே சின்ன பொம்மை
    கோபித்துக்கொண்டது....
    தன்னையே எந்நேரமும்
    வைத்திருக்கும்படி...
    //

    ஓஹோ.. புரியுது புரியுது

    //ஒரு காலகட்டத்தில்
    பொம்மைகள் என்னை வீசி
    வேறொன்றை எடுத்து
    விளையாடத்தொடங்கின...
    //

    ம்ம்.. கஷ்டந்தான்!

    பதிலளிநீக்கு
  8. வயோதிபத்தின் வேதனை வரிகளில் தேனு.
    அது எல்லோருக்கும் இயல்பாய் வருமோ !

    பதிலளிநீக்கு
  9. //ஆகத்திலேயே சின்ன பொம்மை
    கோபித்துக்கொண்டது....
    தன்னையே எந்நேரமும்
    வைத்திருக்கும்படி...///

    ரசித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  10. ஒரு பொம்மையும் பரணும் உங்களுக்கு முடிந்து போன வாழ்க்கையின் தருணங்களை நினைவு படுத்துகிறது.
    பள்ளிபருவத்தில் இன்றைய கதாநாயகர்களாக மிளிரும் மூன்று பேர்களை அப்போது ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டுருந்த முஸ்லீம் நண்பன் சொன்ன வாசகங்களும், அந்த குறிப்பிட்ட வாரிசுகளின் வாழ்க்கையும் பரணை விட்டு கீழே வந்து என்னை பந்தாடிக்கொண்டுருக்கிறது.

    இதுபோன்ற சுய தேடலின் போது இந்த வயதே நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //பொம்மைகள் என்னை வீசி
    வேறொன்றை எடுத்து
    விளையாடத்தொடங்கின...//

    அடுத்த கட்ட எழுத்து !! மூன்றாவது கோணம்!!

    //சின்ன பொம்மை
    கோபித்துக்கொண்டது....
    தன்னையே எந்நேரமும்
    வைத்திருக்கும்படி...//

    நல்லா இருக்கு

    வார்த்தைகள் விரயம் இல்லாமல் எழுதி இருந்தால்
    உங்களின் மாஸ்டர் பீஸ் இதுவாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  12. //நானும் முதிர்ந்து கிழிந்த
    பழைய பொம்மையானேன் ...
    பரணில் ஏறி..... // இந்த வரிகள் மிக அருமை அக்கா.பழைய பொருளுக்கு என்றைக்குமே மதிப்பு அதிகம் தான்....

    பதிலளிநீக்கு
  13. அப்பப்ப சூப்பர் கவிதை, உங்கள் பணி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. கவிதை யதார்த்ததை எழுதிச்செல்கிறது.

    பதிலளிநீக்கு
  15. கவிதை யதார்த்தத்தை எழுதிச்செல்கிறது.

    பதிலளிநீக்கு
  16. காலம் பொம்மைகளை மட்டுமல்ல... மனிதர்களையும்... பரணில் ஏற்றிவிடுகிறது...

    கவிதைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  18. அப்படியா ராமலெஷ்மி முடிந்தால் அந்த லிங்கை எனக்கு அனுப்பி வைங்க

    பதிலளிநீக்கு
  19. உங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கவிதைகளின் காதலன்

    பதிலளிநீக்கு
  20. நன்றி வானம்பாடிகள்

    நன்றி வித்யா

    பதிலளிநீக்கு
  21. புரிஞ்சுருச்சா பட்டியன் பாருங்க பொம்மைகளோட விளையாட்டை

    பதிலளிநீக்கு
  22. வயதாக தனிமை என்பது கஷ்டம்தான் ஹேமா

    பதிலளிநீக்கு
  23. நன்றி தர்மா உங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  24. நன்றி சிவாஜி ரொம்ப நாளா ஆளையே காணலையே ஊருக்கு போய்ட்டீங்களா

    பதிலளிநீக்கு
  25. எல்லோருக்கும் சுயதேடல் இருக்கு ஜோதிஜி ஆனா வயது கடந்தும் சிலசமயம் இளவயதிலும்

    பதிலளிநீக்கு
  26. நன்றி நேசன் அப்பாடா இப்போதாவது மௌனம் கலைந்ததே

    பதிலளிநீக்கு
  27. ஆமாம் மேனகா ஆண்டிக்குக்கு என்றுமே மதிப்பு அதிகம்தான்

    பதிலளிநீக்கு
  28. நன்றி முனைவர் இரா.குணசீலன் உங்க முத்ல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  29. உண்மை கருணாகரசு நன்றி வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  30. //பொம்மைகள் என்னை வீசி
    வேறொன்றை எடுத்து
    விளையாடத்தொடங்கின.../
    யதார்த்தம்.
    ஆனாலும் வலி தருகிறது. அருமையான கவிதை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  31. நன்றி கோபிநாத் உங்க மகள் விடீயோ கேமை விளையாடி தூக்கிப்போட்டதை நினைத்தேன் உடனே எழுதியது இந்தக்கவிதை

    பதிலளிநீக்கு
  32. நன்றி அம்பிகா... எல்லாம் நடப்பதுதானே...

    பதிலளிநீக்கு
  33. பொம்மைகள் இப்படித்தான் யோசிக்குமோ..
    உங்கள் கவிதைப் பார்வை ஒவ்வொன்றுமே வித்தியாசமாய்.. மனதைத் தொடுபவையாய் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  34. ஆமாம் நாமெல்லாம் பழைய பொம்மை தான்

    கவிதை அட்டகாசம் தேனக்கா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  35. //நானும் முதிர்ந்து கிழிந்த
    பழைய பொம்மையானேன் ...
    பரணில் ஏறி....//

    வரிகள் பயமுறுத்தின...
    தவிர்க்க முடியாததல்லவா பரண்மேலே பொம்மையாகிப் போவது....
    பழைய பொம்மைகளாகிப் போனாலும் சாவிகொடுத்தால் ஆடித்தானெ ஆக வேண்டும்...

    ஆழமான கவிதை...

    பதிலளிநீக்கு
  36. நன்றி கோபிநாத்

    ந்ன்றி சுவையான சுவை

    பதிலளிநீக்கு
  37. நன்றி பிரபு

    உண்மைதான் நீங்கள் சொல்வது சாவி கொடுத்தால் ஆடத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  38. அருமையான கவிதை.பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  39. அருமையான கவிதை.பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  40. நன்றி விடிவெள்ளி உங்க முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  41. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...